Wednesday, December 18, 2013

ஆடையை களைந்து என்ன தேடுகிறான் அமெரிக்கன்

        இந்திய தூதரக அதிகாரி தேவயானியை கட்டி இழுத்து போய் துலாவித் துலாவிச் சோதனை செய்தார்களாம் அமெரிக்க அதிகாரிகள்.
         வேலைக்காரப் பெண்ணுக்கு விசா வாங்க போலியான ஆவணங்களைக் கொடுத்தாராம் அந்த அம்மா.


         அமெரிக்க இமிகிரேஷனை ஏமாற்ற அந்த அம்மாவுக்கு கிறுக்குப் பிடிச்சிருக்கா என்ன.
         அதுக்காக இவங்களைக் கட்டி இழுத்து வருவாங்களாம். போதைப் பொருள் பயன்படுத்தும் கைதிகளை அடைக்கும் அறையில் பூட்டி வைத்தார்களாம்.
          உடைகளைக் களைந்து விட்டு துலாவித் துலாவிச் சோதனை செய்தார்களாம். 
         இந்திய அரசாங்கம் இளிச்ச வாய்த்தனமாக இருந்தால் இது செய்வாங்க... இன்னமும் செய்வாங்க....
          சோனியா காந்தியும் சொக்கட்டான் விளையாடிக்கிட்டு இருக்காங்களா... அறிக்கை விடவே அவதாரம் எடுத்த கலைஞர் கருணாநிதி எழுதுகோலை இன்னும் ஏன் எடுக்கவில்லை.
          ஜெயலலிதாவுக்கு மத்திய அரசை மட்டம் தட்டத்தான் நேரம் சரியாக இருக்கிறது.
           வெளியுறவுத் துறை அமைச்சர் வாய் வீங்கிப் போய் கிடப்பார் போலிருக்கு.
           சினிமா நடிகனுக்கு குஞ்சு வலி என்றால் நெஞ்சு துடித்து போராட்டத்தில் இறங்கும் கோடிக் கணக்கான ரசிகப் பெருமக்களுக்கு இது ஒரு ஜுஜுபி மேட்டர்.
           ஆனா, இதுக்கு ஒரு சரியான நடவடிக்கை எடுக்காவிட்டால் அமெரிக்கா போகும் அரசியல் தலைவருங்க எல்லாம் அம்மணமா தாண்டி விமானம் ஏற வேண்டி இருக்கும். 
            இனிமே அமெரிக்காவுக்கு ஆம்பிளைத் தூதரைப் போடுங்கப்பா... அடுத்த நிலையில் இருக்கிறவங்களும் ஆம்பிளையாகவே இருக்கட்டும்.
            ஏன்னா அமெரிக்கக்காரன் ஆடையை அவிழ்த்து விட்டு துலாவுறதிலேயே குறியா இருக்கான்.
         

Monday, December 16, 2013

கிளம்பிட்டாரு கலைஞரு... கலக்கத்தில் காங்கிரஸ் தலைவரு...!

கிளம்பிட்டாருய்யா... கிளம்பிட்டாரு... யாரு நம்ம தமிழினத் தலைவர் கலைஞருதாங்க.
ஈழத் தமிழர் விஷயத்தில் காங்கிரஸ் கட்சி ஈரத் துண்டைப் போட்டுக் கழுத்தை அறுத்து விட்டதாம்.
ஊழலில் சிக்க வைக்க திட்டமிட்டு திமுகவை பிணைப் பிடித்து விட்டார்களாம்.
பொதுக்குழுவில் பொழந்து கட்டி விட்டாருங்க நம்ம கலைஞர்.
அடடா திடீரென்று எப்படி இவருக்கு வீர்ம் வந்ததுன்னு பாத்தா... நாடாளுமன்றத் தேர்தல் நாலு மாசத்தில.
அதுதானே பாத்தேன். இல்லாட்டி இவரு இப்படி தில்லாலங்கடி பாட மாட்டேரேன்னு.
கலைஞரோட சாணக்கியத்தனத்துக்கிட்ட அர்த்தசாஸ்திரம் எழுதின கௌடில்யரே மண்ணைக் கவ்வனுமுங்.
ஒரிஜனல் சாணக்கியரை ஓரங்கட்டுற திறமை நம்ம கலைஞருக்குத்தான் இருக்குங்க.
இறுதிப்போரில இலங்கைத் தமிழருங்க கொத்துக் கொத்தா செத்து விழும்போது இவ்ரு சீக்கு கோழி மாதிரி கிடந்தாருங்க.
ஏன்னா... மகன் அழகிரிக்கு ஆபத்து வருமுல்ல. கனிமொழிக்கு பதவி போயிருமுல்ல.


சட்டசபை தேர்தலில் கலைஞர் சட்டையைப் பிடிச்சு வெளிய தள்ளிட்டாங்க தமிழக மக்கள்.
அலைக்கற்றை வரிசை ஊழல் வேற கலைஞர் அடிவயிற்றில நெருப்பு வச்சது.
அதனால காங்கிரஸ் கவட்டுக்குள்ளேயே கவிழ்ந்து கிடந்தாரு. இப்ப அதுக்கு அவசியம் இல்லைங்க.
காங்கிரஸ் அடுத்து ஆட்சிக்கு வராதுன்னு இவருக்கு பொறி தட்டினதுனால அமைச்சரவையில் இருந்து கழண்டுக்கிட்டாரு.
இப்ப நாலு மாநில தேர்தலில காங்கிரசுக்கு பாரதிய ஜனதா ஆப்படிச்சதாலே குளிர் விட்டுப் போச்சு.
இனி செத்தவங் கையில் வெத்தலை பாக்கு வச்சு என்ன புண்ணியம். ஆவேச அறிக்கையை அவுத்து விடுறாருங்க.
பல ஆண்டுகளா கலைஞரோட குட்டிக் கர்ணங்களை கண் குளிர பாத்தவங்களுக்கு இது ஆச்சரியமில்லங்க.
ஆனா, அதை சாணக்கியத்தனமுன்னு இந்த விவரங்கெட்ட வெங்காயங்க சொல்றதைப்பாக்கும்போது தமிழனா பொறந்ததுக்காக நாக்கைப் பிடுங்கிக்கிட்டு சாகலாமுன்னு தோணுதுங்க.


எப்படிங்க இவங்களுக்கு மட்டும் மனசு வந்து நன்றி மறக்க முடியுது.
பாவமுங்க... கலைஞரு நல்லவரு.. வல்லவரு... நாணயமானவரு.. நம்பிக்கையானவரு. நாக்கு சுத்தமானவரு..வாக்குச் சுத்தமானவரு..
இப்படி பேசிக்கிட்டு இருந்த காங்கிரஸ் தலைவருங்கதான் என்ன சொல்றதுன்னு தெரியாம பேந்தப் பேந்த முழிச்சிக்கிட்டு இருக்கிறாங்க.
சொந்தக் குடும்ப நலனுக்கா எந்த நிலைக்கும் இறங்குவாரு கலைஞருங்கிறதை எத்தனை முறை மொத்துப் பட்டாலும் காங்கிரஸ் தலைவருங்களுக்கு புரியறதே இல்லைங்க.
கல்லாக் கட்ட தயாராயிட்டாரு கலைஞர். இனி யாரு தலையில கல்லைத் தூக்கிப் போடப் போறாரோ...