Sunday, September 29, 2013

மோடி பிரதமரா... அட போங்க... அத்வானி விடுவாரா...?


இந்திய அரசியல் மோடி என்ற பெயரால் அதிர்ந்து கொண்டிருக்கிறதுங்க.

பேதி மாத்திரை சாப்பிடாமலேயே காங்கிரஸ் தலைவர்கள் பலர் கக்கா போய்க் கொண்டிருப்பதாக தகவல் வந்து கொண்டிருக்குதுங்க.

திருச்சியில் மோடி கூட்டத்திற்கு லட்சக்கணகாக தொண்டர்கள் படையெடுத்தது தமிழ்நாட்டுத் தலைவர்களின் தூக்கத்தை கெடுத்திருப்பதாக கூறப்படுதுங்க.



டெல்லியில் மோடியின் பேச்சு... கூடிய கூட்டம்... இந்திய நாட்டின் தலைநகரத்தைக் கிடுகிடுக்க வைச்சுருக்கங்க.

இண்டர் நெட்... பேஸ் புக்.. டுவிட்டர்.. என எங்கு பார்த்தாலும் தாடிக் கதாநாயகன் மோடி தாங்க.

சரி. இது மோடியை பிரதமர் நாற்காலியில உக்கார வைக்குமா?... குடும்ப அரசியலுக்கு நெத்தி அடி கொடுக்குமா...?

இந்த சிக்கலான கேள்வியைப் பற்றி சிந்திப்பது அவசியமுங்க...

பாரதிய ஜனதா கட்சிக்கு முகம் தெரிந்த எதிரி காங்கிரஸாக இருந்தாலும் முகம் தெரியாத எதிரி பாரதிய ஜனதா கட்சிதாங்க.



பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வர்ற வாய்ப்பு ஏற்படும்போதெல்லாம் அந்தக் கட்சியின் பெரிய தலைவர்களுக்கு பிரதமர் கனவு வந்து பிராண்ட ஆரம்பிக்குமுங்க.

அதனால ஒருத்தர் காலை ஒருத்தர் வாரி விட உற்சாக உழைக்க ஆரம்பிச்சுடுவாங்க.

காங்கிரஸ் செய்ய வேண்டிய வேலையை சொந்தக் கட்சிக்காரங்களே கணக்கா செய்வாங்க.

இதுக்கு அவங்க எப்போதும் வெக்கப்பட்டதே கிடையாதுங்க. கர்நாடகவாவைப் பாருங்க.

எடியூரப்பா எப்படி பிரச்சினையைக் கிளப்பி தனியா போய் ஆட்சியைக் காங்கிரஸ் கட்சிக்கு தாரை வார்த்துக் கொடுத்தாரு..



அதுக்கு அவரு வெக்கப்பட்டாரா... வேதனைப்பட்டாரா... என்னால்தான் பாரதிய ஜனதா மண்ணை கவ்வியது என பெருமையா வேறு பேசினாருங்க.

இப்படிப்பட்ட தனித்தன்மை பாரதிய ஜனதா கட்சித்தலைவர்களுக்கு இருக்குங்க.

எப்படியாவது பிரதமர் நாற்காலியில உக்காந்திடனுமுன்னு கங்கணம் கட்டிக்கிட்டு இருக்கிற அத்வானி... மோடிக்கு முட்டுக்கட்டை போட மும்முரமா இருப்பாருங்க.

அப்புறம் என்ன... தோல்வியின் படிக்கட்டுல நிக்கிற காங்கிரஸ் மறுபடியும் ஆட்சிக்கு வருமுங்க..  ராகுல் காந்தி முதல்ல பிகு பண்ணிக்கிட்டு பிரதமர் மகுடத்த பிரமாதமா சூட்டிக்கிட்டு வலம் வருவாருங்க.

Sunday, September 22, 2013

கிளம்பிட்டாருய்யா... வைகோ கிளம்பிட்டாரு....

இலங்கை வடக்கு மகாண தேர்தலில தமிழர் கூட்டமைப்பு அமோகமான வெற்றி கிடைச்சிருக்குங்க. இது ஜனநாயக மறுமலர்ச்சி என்பதில் சந்தேகமே இல்லைங்க.



ஆனா, இவங்க நிம்மதியா இருக்க தமிழ்நாட்டுதலைவருங்களுருக்கு பொறுக்குமா.. முதல்ல நம்ம வைகோ முண்டா தட்டிக்கிட்டு கிளம்பிட்டாருங்க.

வைகோவே யாழ்பாணத்துக்கு போய் பிரச்சாரம் பண்ணி வெற்றிக்கனியை தட்டிப் பறிச்சுக்கிட்டு வந்த மாதிரி பந்தா பல்லுச் சிலம்பம் ஆடிக்கிட்டு இருக்காருங்க.

முன்னாடி இப்படிப் பேசித்தான் விடுதலைப்புலிகளை சுடுகாட்டுக்கு அனுப்பி புண்ணியம் தேடிக்கிட்டாரு. இப்ப சனியன் பிடிச்ச வாயால சடுகுடு விளையாட ஆரம்பிச்சுருக்காருங்க.

தன்னோட பிள்ளை குண்டியில இருக்கிற அழுக்க கழுவுறதை விட்டுப்புட்டு... பக்கத்து வீட்டு பிள்ளைக்கு பல்லு விளக்க கிளம்புற அசிங்கம் புடிச்ச வேலையை  இவரு விடவே மாட்டேங்கிறாருங்க.

வைகோ சாமி... கொஞ்சம் வாயைப் பொத்திக்கிட்டு இருங்க சாமி.. இனிமேலாவது இலங்கைத் தமிழருங்க நிம்மதியா இருக்கட்டும்.