Tuesday, December 29, 2009

திவாரிக்கு என்ன எழவு டேஸ்ட்டோ...உவ்வே....!

நம்ம திவாரி ஐயா கதையைப் படிக்கப் படிக்க கண்ணக் கட்டுதுங்க. அவரு சாப்பிடும்போது பொண்ணுங்க அம்மனமா இருந்தாத்தான் ஐயாவுக்கு சோறு தொண்டைக்குழிக்குள்ள இறங்குமாமே...

உவ்வே... என்ன எழவெடுத்த டேஸ்ட்டுடா இது. நல்ல வேளை அவருக்கு புள்ளை குட்டிங்க இல்லை. அதுல பொம்பிளைப்பிள்ளைங்க இருந்திருந்தா... கொஞ்சம் நினைச்சுப் பாருங்க...



நடக்கும்போது கூட அழகான பொண்ணுங்க பக்கத்தில பொறந்த மேனிக்கு வந்தாத்தான் ஐயாவுக்கு வாக்கிங் போகவே பிடிக்குமாம். என்ன கொடுமைடா இது.

அது சரிங்க... இவரு பாட்டுக்கு பிரான்சு நாட்டில இருக்கிற பிறந்த மேனி கிளப் மாதிரி ஆளுனர் மாளிகையில அலப்பறை பண்ணி இருக்கிறாரு. இதை யாருமே கண்டுக்கலையா... அல்லது கிடைச்சவரைக்கும் லாபமுன்னு அங்க போற அரசியல்வாதிகள் கில்லி அடிச்சாங்களா...

அவரு புரண்டு எந்திரிச்சது பொம்பளைங்க மேல இல்லைங்க... அப்பாவி மக்கள் கட்டுற வரிப்பணத்து மேலேங்கிறது இந்த மானங்கெட்ட ஜனங்களுக்கு எங்கே தெரியப் போகுதுங்க.

85 வயதிலையும் இவரு இப்படி ஏத்தம் கட்டி இறைச்சிருக்காருன்னா... வாலிப வயசுல கிண்டிக் கிழங்கெடுத்து நோண்டி நொங்கெடுத்து இருக்க மாட்டாரு...

அதுசரி... இந்த காங்கிரஸ் கட்சிக்காரங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்காங்க. குறட்டை விட்டாவே அன்னை சோனியாவுக்கு மொட்டைக் கடதாசி போட்டுருவாங்க. திவாரி பண்ணுன சவாரி விஷயத்தை மட்டும் கமுக்கமா விட்டுட்டாங்களே....

இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு வரத்துடிக்கும் ஆந்திர இளசுகளுக்கு திவாரி சிம்ம சொப்பனமாக இருக்காறாமுங்க. 40 வயதுக்கு கீழே இருந்தா மட்டும் இளைஞர்ன்னு ஒத்துக்க முடியுமுங்களா...

திவாரி மாதிரி காய கல்ப கந்தசாமி தலைவரா இருந்தாத்தானே அந்தப் பதவிக்கு பெருமைன்னு சிலர் காத்துவாக்கில செய்தியைக் கசிய விட்டா... திவாரி இளைஞர் காங்கிரஸ் பதவியை சுலபமா தட்டிக்கிட்டு போயிட மாட்டாரு...ன்னு பயப்படுறாங்களாம்.

எது எப்படியோ... எசகு பிசகா மாட்டிக்கிட்டு வெளியே வந்திருக்கு திவாரியோட திருகுதாள தில்லாலங்கடி வேலை. இது மாதிரி எத்தனை கண்ணறாவி கூத்து இந்த நாட்டில நடந்துக்கிட்டு இருக்குதோ....

Monday, December 28, 2009

திவாரியின் குதிரைச் சவாரி

சரச சல்லாப லீலைகள் செய்யிறதில சாமியாருங்கதான் மகா கெட்டிக்காரனுங்க.



நம்ம ஆந்திர கவர்னரு திவாரி...திம்சு கட்டை அழகிகளை புரட்டி எடுத்து இந்த சாமியார் பயலுகளை எல்லாம் ஓரம் கட்டி ஆந்திராவையே அதிர வைச்சிட்டாருன்னு பத்திரிகையில பரபரப்பா செய்தி வந்து இருக்குங்க.

இது உண்மையாக இருந்தா கின்னஸ் சாதனைக்கு பரிந்துரைக்கலாமுங்க.
திவாரிக்கு 85 வயதுக்கு மேல இருக்குமுன்னு சொல்றாங்க. இந்தக் காலத்தில இளவட்ட பசங்களே முத்தெடுக்க முடியாம மூச்சுத் திணறும் போது திவாரி சும்மா... தில்லானா ஆடி சின்னப் பசங்களை எல்லாம் பொறாமையில வேக வச்சிருக்கிறாருன்னு பேசிக்கிறாங்க.

என்னோட மனசைக் குடையிற சந்தேகம் இது தாங்க. அறுபது வயதுவரை அப்படி இப்படின்னு கசமுசா பண்ணலாமுன்னு நமக்கு தெரிஞ்ச ஒரு அஜால் குஜால் மருத்துவரு சொல்றாருங்க.

அதுக்கு மேலே வயாக்ரா போட்டு நயாகராவை வரவழைச்சாலும் சிலம்பாட்டம் ஆட உடம்புல தெம்பு வேணுமுங்களே... இந்த இடத்தில தாங்க ஒன்னு இடிக்குது. பசிச்சவன் பழங்கணக்கு பாத்த மாதிரி உருண்டு புரண்டு பாத்திருப்பாரோ.

என்ன இருந்தாலும் ஆளுநர் மாளிகையை ............. மாளிகையா மாத்துன பெருமை நம்ம திவாரியைத் தான் சேருமுன்னு 80 வயதைக் கடந்த சில பெருசுகள் பெருமையோட மார் தட்டுறாங்களாம். ரசிகர் மன்றம் ஆரம்பிக்கிற முயற்சியில இறங்கி இருக்காங்களாம்.

Thursday, December 17, 2009

விசித்திர அடிமைகள் நாம்

நாமெல்லாம் விசித்திரமான அடிமைகள்.... ஆண்டவனுக்கு அடிமையாக இருக்கிறோமுங்க. அடுத்து ஆளுகின்றவர்களுக்கு அடிமையா இருக்கிறோமுங்க. சினிமா நடிகர் நடிகைகளுக்கு அடிமையா இருக்கிறோமுங்க.




வெளிநாட்டில் இல்லையா அப்படின்னு நீங்க கேட்கலாமுங்க. இருக்காங்க... அவங்களலெல்லாம் அடிமையாக அல்ல... ஆதரவாளர்களாக.... அது எப்படின்னு கேட்கிறீங்கள்....
அங்க கென்னடி சுடப்பட்டபோது யாரும் தீக்குளிச்சாங்களா... அல்லது புஷ் தோத்து போனதுக்கு யாரும் உயிரை விட்டாங்களா... இத்தாலி பிரதமரை மூக்கை உடைத்ததுக்கு பஸ்சை எரிச்சாங்களா... கடைகளை அடித்து நொறுக்கினாங்களா....

அங்கையும் வன்முறை இருக்கு. போராட்டம் வெடிக்குது. போலீஸ்காரங்களோடு மோதுறாங்க. அதெல்லாமே உரிமைக்காக.... ஒரு தலைவனின் சுயநலத்துக்காக இல்லைங்க.

அண்மையில ரஜினி காந்த் பிறந்த நாள் வந்துச்சு. ஒருத்தர் ரஜினி கட்டவுட்டுக்கு பால் ஊத்தி அபிஷேகம் பண்ணுறாருங்க. அந்தப் பாலைக் காய்ச்சி நாலு ஏழைக்குழந்தைகளுக்கு கொடுத்தா... ரஜினி எவ்வளவு சந்தோசப்படுவாரு.... அந்த ஏழைக் குடும்பம் ரஜினியை வாழ்த்துமே.....

இந்திரா காந்தி எவ்வளவு பெரிய தலைவிங்க. அவுங்க சாப்பிட்ட இலையில உட்காந்து சாப்பிட யாராவது போட்டி போட்டிருக்கிறாங்களா.... ஆனா, நம்ம தமிழ்நாட்டில ஜெயலலிதா சாப்பிட்ட இலையில உக்கார ஒரு இசை நாற்காலி போட்டியே நடந்துச்சுங்களே....

தலைவருக்கு ஏதாவது ஒன்னுன்னா எதுக்கு பொதுச் சொத்தை சேதப்படுத்துறாங்க...
இப்ப ஆந்திராவை எடுத்துக்கங்க. ராஜசேகர ரெட்டி இறந்த நேரமா பாத்து சந்திரசேகர ராவ் தெலுங்கானா பிரச்சினையை கிளப்பி விட்டாரு.... இப்ப ஆந்திராவே பத்திக்கிட்டு எரியுது.

சமீபத்தில மதுரை மீனாட்சி கல்லூரி மாணவிகள் போராட்டம் நடத்துனாங்க. ஏதோ பொழுது போக்கா செய்யிற மாதிரி சிரிச்சுக்கிட்டு, ஒருத்தரை ஒருத்தர் தள்ளிக்கிட்டு இருக்கிற காட்சியை தொலைக்காட்சியில பாக்கும்போது மனதுக்கு வேதனையா இருக்குங்க.

ஒரு அரசியல்கட்சித் தலைவரை பத்தி விமர்சனம் செய்ய முடியுமா... அவரைப்பத்தி அவதூறா எழுதினா.... தொண்டர்கள் ஆத்திரப்படுறது நியாயமுங்க. ஆனா... நடந்த சம்பவத்தை பத்தி எழுதினாக்கூட உயிருக்கு உத்திரவாதமில்லாத நிலை ஏற்பட்டு இருக்குங்க.

விலைவாசியைக் குறைக்கணுமுன்னு ஒரு போராட்டத்தை ஒரு கட்சி நடத்துது. அதில நூறு பேருக்கு குறைவானவங்களே கலந்துக்கிறாங்க. பாக்கி உள்ளவங்களுக்கு விலைவாசிப் பாதிப்பு இல்லைங்களா.. அப்புறம் ஏன் ஒன்னா கூட முடியலை.
முன்பு சாதிப்பிரிவினை நம்மளை பாதளத்தில தள்ளுச்சுங்க. இப்ப கட்சிப்பிரிவினை அதல பாதாளத்தில தள்ளிக்கிட்டு இருக்குங்க. மக்கள் எல்லாம் ஒன்னு சேர்ந்தா யாரும் எந்தத் தப்பும் செய்ய மாட்டாங்க. ஆனா, அது நடக்காதுங்க. அப்படி நடக்க அரசியல்வாதிகள் விட மாட்டாங்க.

அப்படி ஒரு அடிமைத்தனமான நிலைக்கு நாம் ஆட்பட்டு இருக்கிறோமுங்க. மேலே குறிப்பிட்ட மூனு அம்சங்களில் இருந்து எப்ப மக்கள் தங்களை விடுவித்துக் கொண்டு வெறும் ஆதரவாளர்களாக மட்டும் இருக்கிற பக்குவத்தை அடையுறாங்களோ அப்போதுதாங்க தமிழ் மக்களின் தரம் உயருமுங்க.





Thursday, December 3, 2009

அன்பு சிவத்துக்கு நன்றிங்க...

நம்ம மச்ச குருக்கள் தேவநாதன்கிட்ட ஒரு தொலைக்காட்சி நடிகையும் மாட்டி இருக்கிறாராமே... சபாஷ்... சரியான குருக்கள்தான் நம்ம தேவநாதன்.


கண்ணி வச்சு பிடிச்ச மாதிரி இப்படி சொல்லி வச்சு சொக்கட்டான் விளையாடிய தேவநாதனுக்கு என்ன விருது கொடுத்தாலும் தகுமுங்க. ஆனா, இவருக்கிட்ட மடங்காத பெண்களை சும்மானாச்சுக்கும் கையைக் காட்டி மாட்டி விட்டுறப்போறாருங்க.

தேவநாதன் செய்தியைப் படிச்சிட்டு அருமைச் சகோதரர் அன்பு சிவம் ஒரு கேள்வியை எழுப்பி இருக்காருங்க.

மச்சேசுவரர் போனை கெடுத்ததுக்கு பதிலா மொதல்லயே வேற எதையாவது(?) கெடுத்திருந்தா இத்தனை பிரச்சனையும் வந்திருக்கவே வந்திருக்காதே... என்ன சொல்லறீங்க? :)

ஆணவம், கன்மம், மாயை...ன்னு மூனு அம்சம் இருக்குதுங்க. ஒரு காரை அளவுக்கு மீறிய வேகத்தில ஓட்டி கட்டுப்படுத்த முடியாம எதிலையாவது மோதி சாவதுங்க. இது ஆணவத்துக்கு கிடைத்த தண்டனை.

காரை வேகமாக ஓட்டினாலும் உடனே விபத்து நடக்காது. காலப் போக்கில் என்றாவது இறப்பு ஏற்படும். இது கன்மம்...அதாவது போன ஜென்ம பாவ புண்ணிய பலனால் ஏற்படுவது.

மாயை என்பது கண் சிமிட்டும் நேரத்தில் நடப்பது. இதில் இரண்டாவது ரகம்தான் தேவநாதனுக்கு நடந்தது. எந்தக் காரியத்தையும் உடனே தடுத்துவிட முடியாது என்பதை காட்டுவதற்காகத்தான் இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்கள் எழுதப்பட்டன.

இருந்தாலும் தவறு நடப்பதற்கு முன்னாடி தடுத்திருந்தா பல பேருடைய நிம்மதியைக் காப்பாத்தி இருக்கலாமுங்க. என் எழுத்துக்கு அன்போடு இடையுரையாடிய அன்பு சிவத்துக்கு நன்றிங்க.

Wednesday, December 2, 2009

தேவநாதனுக்கு சாணி அடி தேவையா...?

நம்ம கும்மாங்குத்து குருக்களை போலீசார் பின்னி எடுக்க... எடுக்க... அள்ள அள்ள குறையாத அட்சயபாத்திரத்தில இருந்து வருகிற அன்னம் மாதிரி உண்மைகள் அணையை உடைத்துக் கொண்டு வரும் போல இருக்குங்க.


பக்திப் பரவசத்தோடு கோவிலுக்கு போன பொண்டாட்டிகளை பாசத்தோடு வழி அனுப்பி வச்ச புருசன்மாருங்க...மோசம் போயிருப்பமோன்னு தவியாத் தவிக்கிறது யாருக்குங்க தெரியப் போகுது.




இப்ப நீதி மன்றத்துக்கு வந்த "தேக சாந்தி திவ்விய புருசன்" தேவநாதனை சில பெண்கள் சாணியை எடுத்து அடிச்சிருக்காங்க. விளக்குமாத்தால விளாசி இருக்காங்க. அது நியாயமான கோபம் தாங்க.

இன்னொரு விஷயத்தையும் இங்க உங்களுக்கு சொல்லணுமுங்க. சில நாட்களுக்கு முன்னர் ஒரு நண்பர் எனக்கு ஒரு வீடியோ காட்சியை அனுப்பி வைத்தாருங்க. ஒரு பெண்ணை வைத்து ஆபாசப்படம் எடுத்த காட்சி அதுங்க.

பணத்துக்காக வந்ததோ அல்லது பயமுறுத்தி கொண்டு வரப்பட்டதோ தெரியலைங்க. கேமராவை பாக்கிறதுக்கு அந்தப் பெண் படுகிற பாட்டைப் பார்த்து என்னோட நெஞ்சில ரத்தம்தான் வழிஞ்சதுங்க. கூச்சமும் இயலாமையும் அந்த முகத்தில தெளிவா தெரிஞ்சதுங்க.

நம்ம இனத்தை வெள்ளைக்காரன் வியப்போடு பாக்கிறதுக்கு காரணம் நமது குடும்ப ஒழுக்கம்தாங்க. மேலை நாடுகளில சமுதாய ஒழுக்கம் அதிகம். குடும்ப ஒழுக்கம் குறைவுங்க. நாம அப்படி இல்லைங்க. ஒரு குடும்பத்துக்கு நன்னெறி எவ்வளவு முக்கியம் என்பதை மேடைதோறும் பேசி வருபவன் நானுங்க.

அதனாலதான் அந்தக் காட்சியை எனக்கு அந்த நண்பர் அனுப்பி வைத்தாருங்க. அந்தப் பெண்ணை கடுகு அளவுகூட என்னால் தப்பாக பார்க்க முடியலைங்க.

ஆனா, நம்ம தேவநாதன் தில்லாலங்கடி பாடிய பொண்ணுங்களை பார்க்கும்போது எனக்கு ஈரல் குளையே ஆடிப்போச்சுங்க. ஒரு கோவில் தளத்தில... எந்த நேரத்திலும் யார் வேண்டுமானாலும் உள்ளே நுழைந்து பார்க்கக்கூடிய வாய்ப்பு இருக்கிற இடத்தில... பேசும் மொழி கடந்து இந்திய தேசம் முழுவதையும் ஒரே கட்டுக்குள் வைத்திருக்கிற கடவுளின் கருவறைக்குள்ளே...

கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல்... தப்பு செய்கிறோமே என்ற நாணம் இல்லாமல்...வெள்ளைக்காரப் பெண்களையே போட்டிக்கு அழைக்கின்ற விதத்தில் பல கோணங்களில் கும்மாளம் போட்ட அந்தப் பெண்களைப் பார்க்கின்ற போது இரத்தம் கொதிச்சதுங்க.

இதுல ஒரு பொண்ணு "மயக்க மருந்து கொடுத்து என்னைக் கற்பழிச்சிட்டான்"ன்னு சொல்லி இருக்குங்க. அண்டபுளுகு... ஆகாசப் புளுகு...ன்னு கேள்விப்பட்டிருக்கேங்க. அதைவிட இந்தப் பொண்ணு சொன்னது எல்லாரையும் கேணையன் ஆக்குகிற மல்டி மீடியா புளுகுங்க. இது மாதிரி பொண்ணுங்க கதிரியக்கக் கசிவு மாதிரிங்க. இருக்கிற இடத்தை மட்டுமில்லாம அந்தப் பகுதியையே அழிக்கக்கூடிய அணுகுண்டு புளுகிங்க இவ.

அறிமுகம் இல்லாத ஒரு பொண்ணு "அண்ணா" என்று அழைத்து விட்டால் தவறிக்கூட தப்பான பார்வை பார்க்காத தமிழ்நாடுங்க. உறவுமுறை கொண்டவன்கூட தவறான எண்ணத்தில் தன்னை நெருங்கும்போது "நான் அப்படிப்பட்ட ஆள் இல்லை" என்று அவன் மானத்தையும் தன்னுடைய மானத்தையும் காத்துக் கொண்டு வாழ்ந்த கண்ணியம்மிக்க பூமிங்க.

காலம் மாறும் போதும்... வளர்ச்சி ஏற்படும்போதும்... நாகரிகச் சிதைவு ஏற்படுவது தடுக்க முடியாதுங்க. ஆனா, இவ்வளவு கொடுமையான மாற்றம் இருக்கக்கூடாதுங்க.

"தாய் அறியாத சூல்" இல்லைன்னு சொல்லுவாங்க. அதுபோல இவ்வளவு பெரிய தப்பு நடக்கிறது தெரியாம இருந்தது ஆச்சரியமா இருக்குதுங்க. தேவநாதனின் கொடுமை தாங்காம மச்சேஸ்வரர்தான் அவனுடைய போனைக் கெடுத்து அதன் மூலமா உண்மைய வெளிச்சத்துக்கு கொண்டு வந்து இருக்கிறாருங்க.

இல்லைன்னா... இன்னும் எத்தனை பெண்களை சூறையாடி இருப்பானோ.... எத்தனை பெண்கள் கட்டினவனுக்கும் பெத்தவங்களுக்கும் துரோகம் செஞ்சு இருப்பாங்களோ... நினைச்சுப்பாக்கவே அச்சமா இருக்குதுங்க.

இப்ப ஆவேசப்படும் பெண்களே... உங்க பகுதியில இது மாதிரி தப்பு நடக்குதான்னு உத்துப் பாருங்க. ஆனா.. அதுலையும் ஒரு சிக்கல் இருக்கு. சம்பவம் நடக்கிறதுக்கு முன்னாடி ஏதாச்சும் சொல்லிட்டா " எம் பொண்டாட்டியை எப்படி சொல்லலாம்" ன்னு நம்ம வீராதி வீரனுங்க அரிவாளைத் தூக்கிக்கிட்டு வந்திடுவானுங்க.

சில வக்கிரம் புடுச்ச பொண்ணுங்க வேணுமின்னே கட்டுக்கதை கட்டுறதும் நடக்கலாமுங்க. எப்படிப் பாத்தாலும் இந்தப் பொண்ணுங்க பண்ணுனது வயித்துப் பொழைப்புக்காக முந்தானையை விரிக்கும் விலைமாதுவோட செயலைவிட கேவலமானதுங்க.