Thursday, October 29, 2009

காடு வெட்டி குருவுக்கு நாக்கில் சனி

காடு வெட்டி குரு வீடு கட்டி விளையாட ஆரம்பிச்சுட்டாருங்க. டாஸ்மாக் தண்ணியடிச்சு பாஸ் மார்க் வாங்கின பேட்டை தாதா மாதிரி மைக்கை பிடிச்சு மானாங் கண்ணியா பேச தொடங்கிட்டாரு.




எல்லாம் அதிமுக தலைவி ஜெயலலிதாவைப்பத்தித்தான். இவரு அம்மா இல்லை.... சும்மா... இவருக்கு பவரு இல்லை.... பம்மான்னும் வார்த்தையாலே வசை கவியரங்கம் நடத்தத் தொடங்கிட்டாருங்க.

திருடித் தின்ன கருவாட்டு முள்ளு தொண்டையில சிக்கிக்கிட்ட பூனை மாதிரி திரு திருன்னு முழிச்சிக்கிட்டு இருந்த ராமதாசுக்கு அருமையான சந்தர்ப்பம் அடுக்குமாடி பஸ்சில வந்துக்கிட்டு இருக்குங்க.

அதுக்கு அச்சாரமாத்தான் காடுவெட்டு குருவின் பேச்சு இருக்குதுங்க. காங்கிரசுக்கும் திமுகவுக்கும் உரசல் உரலுக்குள்ள விழுகிற உலக்கை மாதிரி இடிக்க ஆரம்பிச்சிருக்குங்க.

வடநாட்டில காங்கிரசுக்கு ஒரு கம்பீரத்தை ராகுல் காந்தி ஏற்படுத்தி இருக்கிறாங்க. தேர்தலுக்கு முன்னாடி மாநிலக் கட்சிகளுக்கிட்ட மண்டி போட்டு நின்ன காங்கிரஸ்காரங்க இப்ப முத்திப் போன முருங்கைக்காய் மாதிரி முறுக்கிட்டு இருக்கிறாங்க.

அதனால தமிழ் நாட்டுலயும் ஏன் ஒரு கபடி ஆட்டம் ஆடக் கூடாதுன்னு ராகுல் கணக்குப் போடுறாராமுங்க. அந்தக் கணக்கில திமுக கழிக்கப்பட்டா

கலைஞருக்கு தெம்பூட்ட மருத்துவர் விடுக்கிற மடல் விடு தூதுதானாம்.. நம்ம காடு வெட்டியாரின் முக்கலும் முனகலும்.

ஒரு பெண்ணு காசுக்காக உடம்பை வித்தா அதுக்கு விபச்சாரமுன்னு சொல்லி கைது பண்ணுறாங்க. ஆனா.. காடு வெட்டியார் போன்ற அரசியல்வாதிகள் அசிங்கப்படாம நாக்கை வித்து விபச்சாரம் பண்ணுறாங்களே இதுக்கு சட்டப்படி ஒன்னும் செய்ய முடியாதுங்களா...

குந்தானி போனா... முந்தானை விரிக்க சிந்தாமணி இருக்கான்னு இந்தமுறையும் யோசிக்காம மாம்பழத்தைத் தூக்கி மடியில வச்சா அதுக்குள்ள இருக்கிற வண்டு (காடு வெட்டி) அடியில ஓட்டை போட்டு அஸ்திவாரத்தையே ஆட்டம் காண வச்சிடும்கிறதை கலைஞரு கவனமா புரிஞ்சிக்கிட்டா நல்லதுங்க.

ஏழரைச் சனியில மூனு பிரிவு உண்டுங்க. சிரசுச்சனி, ஜென்மச்சனி, பாதச்சனி..ன்னும் அதுல நம்ம காடு வெட்டியாருக்கு இருக்கிறது நாலாவது சனிங்க. அதாவது நாக்கில சனிங்க. இல்லையின்னா. மத்திய அமைச்சரவையில திறமைமிக்க அமைச்சரா பவனி வந்த அன்புமணி ராமதாசு தைலாபுரம் தோட்டத்தில மயிலாட்டம் பாத்துக்கிட்டு இருக்கிற நிலைமை வந்திருக்குமா.

Tuesday, October 27, 2009

வாய் கிழியப் பேசி என்ன பிரயோசனம் வைகோ அண்ணாச்சி

நம்ம வைகோ அண்ணாச்சி வாயை வச்சுக்கிட்டு சும்மா இருக்க மாட்டார் போலிருக்கு. முள் வேலி தடுப்பு முகாமில் இருந்து தமிழர்களை விடுவித்தால் மட்டும் போதாது. அவர்களுக்கு சொந்த மண்ணில் சுதந்திரம் வேண்டும் என்று இங்கு வாய் கிழிய கத்துறாருங்க.





அண்ணாச்சி.... இப்பத்தான் அரி...ஓம்முன்னு தமிழர்கள் அவங்க அவங்க இடத்துக்கு திரும்ப ஆரம்பிச்சு இருக்காங்க. நீங்க ஏதாவது ஏடாகூடாம கத்தி 'தனா பிறக்கிற பிள்ளையை சிஷேரியன்' பண்ண வச்சிடாதீங்க.

முந்தி இப்படி கத்திக் கத்தித்தான் விடுதலைப் புலிகளை வேரோடு சாச்சிட்டீங்க. இலங்கை அரசாங்கமே புலிகளைப் பாத்து பயந்துக்கிட்டு இருந்துச்சு. நீங்க அதில குளிர் காய நினைச்சீங்க.

அதனால தனி ஈழம்... தனி ஈழம்...ன்னு கூடிக்கூடி கும்மியடிச்சீங்க. விடுதலைப்புலிகளை அழிக்க வெளிநாட்டில போயி உதவி கேட்கிறதா...ன்னு வெட்கப்பட்டுக்கிட்டு இருந்த ராஜபக்சே வேற வழியில்லாம முக்காட விலக்கிட்டு ஆயுதப் பிச்சை எடுக்க ஆரம்பிச்சாரு.

அவரை உசுப்பேத்தி விட்டு இந்தியா, சீனா, பாகிஸ்தான்னு எல்லா நாட்டு தொடர்பையும் உண்டாக்கி விடுதலைப்புலிகளோடு மோத வச்சது உங்களைப்போல ஆளுங்க.

உணர்ச்சிபூர்வமா பாக்காம.. அறிவுப்பூர்வமா பாருங்க... இதில இருக்கிற உண்மை தெரியுமுங்க. தமிழ் நாட்டில புலிகளோட நடமாட்டமே இல்லாம செஞ்சு பலவீனப்படுத்தியது ஜெயலலிதாங்க. சோனியா காந்தி சும்மா இருந்தாலும் இந்த அம்மா பண்ணின அலும்பு கொஞ்ச நஞ்சமில்லைங்க.

அந்த அம்மா முந்தானைக்குள்ள இருந்துக்கிட்டு வைகோ அண்ணாச்சி பேசுறது...'பீ' தொட்டிக்குள்ள உட்காந்துக்கிட்டு 'பிரியாணி' வித்த கதைதாங்க.

அண்ணாச்சி... நீங்க இடத்தை மாத்தாத வரைக்கும்.. நடக்கிற தடத்தை மாத்தா வரைக்கும் நீங்க வாய் கிழிய பேசுற வசனங்க எல்லாம் செத்தவன் வாய்க்குள்ள சீனிய வச்சு திணிச்ச் மாதிரிதாங்கிற கொஞ்சம் நினைச்சுப்பாருங்க அண்ணாச்சி...

Thursday, October 22, 2009

திக்கு... திக்கு... திருமாவளவன்

"என்ன பழ.கருப்பையா அண்ணே... என்னையப் பத்தி தாறுமாறா எழுதி இருக்கீங்க. உங்களுக்கு என்ன கிறுக்கா பிடிச்சிருக்கு. தமிழ் நாட்டில தான் மேடை போட்டு படிச்சதையும் புடிச்சதையும் வாந்தி எடுக்க முடியும்.



இங்கதான் நான் என்ன சொன்னாலும் கேக்க இளிச்சவாயனுங்க இருக்காணுங்க. இலங்கையில வாயத் தொறந்தா கடவாய்ப் பல்லை கழட்டி குப்பியில் போட்டுல்ல கொடுத்து விட்டுருவானுங்க.

ராஜபக்சே என்ன பெரிசா சொல்லிட்டாரு... பிரபாகரனோட இருந்தா... உங்களையும் சுட்டு இருப்போம்ன்னு சொன்னாரு. இதை ஏன் நீங்க துப்பாக்கின்னு நினைக்கிறீங்க. எங்க சுரணையில்லா தம்பிங்க மாதிரி தோசை சுடுறதுன்னு நினைங்க.

நான் வீரமா ராஜபக்சேகிட்ட பேசலையாம். அந்த ஆளு முகத்தைப் பாத்ததுமே எனக்கு பேண்டுக்கு கீழ ஈரமானது உங்களுக்கு எங்கே தெரியப்போகுது. அதுக்குமேல விட்டா அடியிலே சுடுவாங்கன்னுட்டுத்தானே ரூம்ல வந்து சுருக்குப் பையைத் தொறந்தேன்.

இலங்கையில உட்காந்து இருக்கும்போது என்னோ முகத்தை நீங்க பாத்திங்களா அண்ணே... அண்ணாமலை படத்தில ரஜினிய அம்மணமா பாத்த குஷ்பு மாதிரி நானே அரண்டு போயி இருந்தேன்... நீங்க வேற....எரிச்சலை கிளப்பாதீங்கண்ணே..

நாம எங்காவது அப்பு வாங்கினாலோ அறை வாங்கினாலோ.... அதை காட்டிக்கூடாதுண்ணே... உடனே அதை மாத்துற மாதிரி டகால்டி வேலையில இறங்கிடணும்.


இப்ப பாருங்க. தில்லை நடராஜர் கோவிலில நந்தனார் நுழைஞ்ச பாதையைத் தொறக்கணுமுன்னு போராட்டத்தில இறங்கி இருக்கோம். இதுக்கு ராஜபக்சேனால ஒன்னும் கிழிக்க முடியாது.

என்னோட தம்பிங்க எல்லாம் "இப்ப என்ன செய்யுவே... இப்ப என்ன செய்யுவே..."ன்னு ராஜபக்சேயை பழிப்புக் காட்டுறது புளிப்பு மிட்டாய் சாப்பிடுற உங்களுக்கு எங்க தெரியப் போகிறது.

முள் வேலிக்குள்ள இருக்கிற தமிழர்களைப் பத்தி நான் பேசலையாம். எப்படியாவது நான் ராஜபக்சேக்கிட்ட எத்து வாங்கணுமுன்னு ரொம்ப பேர் நினைச்சாங்க. அதில நீங்க ஒருத்தருன்னு எனக்கு நல்லா புரிஞ்சு போச்சு.

முள் வேலி பிரச்சினை இப்ப உள்ளது. நந்தனார் பிரச்சினை பல நூறு வருசத்துக்கு முன்னது. எதை முதல்ல முடிக்கணும். இதுகூட தெரியாத முட்டாத்தனமான ஆளா இருக்கிறீங்களே.

இப்ப பாருங்க. அங்க தமிழர்களை கொன்ன பாவத்தைக் கழுவ தமிழ்நாட்டுக் கோவிலுக்கு இலங்கை மந்திரிங்க எல்லாம் வர்றாங்க. அங்க போயி போராட்டம் அது..இதுன்னு பம்மாத்து வேலை காட்டினா வேட்டிக்கு அடியில இல்ல வெடி வைப்பாங்க.




இங்க நந்தனாரும் கேக்க மாட்டாரு... தில்லை நடராஜரும் கேக்க மாட்டாரு... கலைஞருக்கும் குடைச்சல் கொடுத்த மாதிரி இருக்கும். சிரிச்சிக்கிட்டே என்னோட வாய்க்குள்ள குச்சியை விட்டு சிக்கெடுத்த ராஜபக்சே அண்ணாச்சிக்கு சவால் விட்ட மாதிரி இருக்கும்.

இப்ப புரியுதா இந்த திருமாவளவன் யாரு"ன்னு

திருமாவளவனைப் பத்தி பழ.கருப்பையா சொன்னதா வந்த செய்தியை பத்திரிகையில படிச்சேங்க. இதுக்கு திருமாவளவன் உண்மையிலேயே பதில் சொல்லி இருந்தா இப்படித்தாங்க இருக்கும்.

Wednesday, October 21, 2009

நெஞ்சு... குஞ்சு நெடுங்காடி விவேக்

பிரபுதேவாவும் நயன்தாராவும் பிரிஞ்சிட்டாங்களாமில்ல. இந்த எழவத்தான் நான் ஏற்கனவே எழுதியிருந்தேனுல்ல. அது சரி அல்வாவை எத்தனை நாளைக்குத்தான் அவக்கு அவக்குன்னு திங்க முடியும்.



நம்ம கலாச்சார காவலரு... அதுதாங்க நெஞ்சு... குஞ்சு நெடுங்காடி... இரண்டு அர்த்தத்தில பேசி தமிழ் செம்மொழியை செவ்வாய்க்கிரகத்தில நிலை நாட்டப் போறவரு... அவரு இதுமாதிரி சமாச்சாரங்களுக்கு என்ன சொல்லப் போறாரு.

செந்தமிழ் நாட்டில் சீர்திருத்த விதைப் பயிர் வளர்க்கிற சிருங்கார சிட்டுகள்தான் தமிழர்களின் தன்மானக் குன்றுகள் என்று குத்தாட்டம் போட்டு பிரபுதேவாவுக்கும் நயன்தாராவுக்கு ஜனாதிபதி விருதுக்கு சிபாரிசு செய்வாரோ.

இல்லாட்டி மாபெரும் நடிகர்கள் கூட்டத்தைக் கூட்டி மாலை மரியாதையின்னு போட்டு கலாச்சாரக் காவலர்கள்ன்னு பட்டம் கொடுப்பாரோ...



ஐயா விவேக்காரே.. நீங்க பத்திரிகைகாரங்களைப்பத்தி மைக்குக்கு முன்னாடி வாந்தி எடுத்த மாதிரி வீட்லயும் வாந்தி எடுப்பிகளோ... என்ன செய்யிறது... இரட்டை அர்த்தத்தில ஆபாசமா பேசி காசு பண்ணுறது விபச்சாரத்தை விட கேவலமானதுன்னு ஒரு பேராசிரியர் சொன்னாரு. அப்ப நீங்க எந்த ரகமுங்க.

இதுக்கும் கேசு போடுவிகளோ... இனி தமிழ் நாட்டில குடும்பப் பொண்ணா வாழுறவங்கதான் வெட்கப்பட்டுக்கிட்டு இருக்கணும் போல இருக்கு.

Tuesday, October 13, 2009

சிதறி நின்னு சிலம்பாட்டம் ஆடினா

ஒரு ஊரில் இரண்டு பிரிவு. ஆளுக்கொரு பகுதியை வைத்துக் கொண்டு சண்டை போட்டாங்க. ஒரு பிரிவு (X) முழுசும் எங்களோடது என்றது. இது எங்களுக்குச் சொந்தமான இடம். பிரித்துக் கொடுத்துவிடுங்கள் என்று இன்னொரு பிரிவு (Y) சொன்னது.


இந்த ஊருக்கு இடையில் ஒரு ஆறு.Y பிரிவும் இந்த ஊர்க்காரர்களும் ஒரே இனம். அதனால், ஆதரவுக்குரல்கள் ஓங்கி முழக்கமிட்டன.

"ஏய் தில்லு இருந்தா எங்க ஆளுமேலே கைய வச்சுப் பாரு...உன்னோட மண்டையப் பிளந்து மாவிளக்கு வச்சுடுவோம். எச்சி துப்பியே உன் இனத்தை காணாம ஆக்கிருவோம்... மூத்திரம் பேஞ்சே உன்னோட நாட்டை மூழ்கடிச்சுடுவோம்"ன்னு என மேடை போட்டு கர்ஜனை முழக்கமிட்டாங்க நிறைய பேர்.

இதன் காரணமாக X பிரிவு அச்சத்தோடு எல்லை தாண்டாமல் இருந்தது. இப்படியே ஆண்டுகள் ஓடின. இனிமேல் சும்மா இருக்கக்கூடாது என X பிரிவு அண்டை ஊர்க்காரர்களிடம் ஆதரவு தேடியது. அதற்கு ஆதரவும் கிடைத்தது.

அந்த பலத்தை வைத்துக் கொண்டு கொஞ்சம் முன்னேறியது. உடனே ஆற்றுக்கு அந்தப் பக்கம் இருந்து ஆவேசக்குரல்கள் பாய்ந்தன. இன்னும் கொஞ்சம் முன்னேறியது. இப்போதும் கூக்குரல் மட்டுமே ஒலித்தது.

இந்த நேரத்தில்தான் X பிரிவு ஒரு உண்மையைக் கண்டு கொண்டது. கூக்குரல் வந்த பக்கத்தில் கும்பல் கும்பலாக குரல்கள் வேறுபாடாக ஒலித்தன. Y பிரிவுக்கு ஆதரவு கொடுப்பதை விட ஒருவரை ஒருவர் வீழ்த்த Y பிரிவினரை பகடைக்காயாக பயன்படுத்துவதை கண்டு கொண்டது.

இது போர்க்குரல் அல்ல. வெறும் நாய்க்குரல் என்று முடிவுக்கு வந்து இறுதிக்கட்ட சண்டையில் இறங்கியது.

ஆற்றுக்கு அப்பால் இருந்து உதவி கிடைக்கும். X பிரிவினரை ஓட ஓட விரட்டி விடலாம் என கணக்குப் போட்ட Y பிரிவினருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இறுதியில் அவர்கள் உயிரும் போனது . அவர்களை நம்பி இருந்த மக்கள் முள் கம்பிகளுக்கு இடையே மூச்சுவிடும் பிணங்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.




ஆகா...ஆற்றுக்கு அப்பால் இருந்தவர்கள் 'டம்மி பீசு' என்பது தெரியாமல் இத்தனை ஆண்டுகளை வீணாக்கி விட்டோமே என X பிரிவினர் ஏளனத்தோடு கைகொட்டி நகைக்கின்றனர்.

இப்படி ஒரு இனமே அழிந்த பின்பும் ஆற்றுக்கு அப்பால் இருந்து இன்னும் ஆவேசக் குரல்கள் வெட்கமில்லாமல் வெடித்துக் கொண்டிருக்கின்றன.

ஒருவேளை " நாங்கள் வானத்தை வில்லாக வளைக்கிறோம். மணலைக் கயிறாக திரிக்கிறோம். ஒரு நிமிடத்தில் எதிரியை அழிக்கிறோம். ஆறுகோடி மக்களின் உயிரைத் அர்ப்பணிக்கிறோம்" என இந்த வெத்துவேட்டு வெங்காயங்கள் முழக்கமிடாமல் இருந்திருந்தால் அது ஊர்ப்பிரச்சனையாகவே இருந்திருக்கும். இந்த அழிவும் அவலமும் வந்திருக்காது என்பது என்னைப் போன்ற பலரின் கருத்து.

இந்தக் கதை புரியுதாங்க. X என்பது இலங்கைங்க. Y என்பது விடுதலைப்புலிங்க. ஆற்றுக்கு அப்பால் என்று நான் சொன்னது, நம்ம கண்டனக் கூட்ட மன்னர்கள் வசிக்கின்ற தமிழ்நாடுதாங்க. இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி விட்டே அடுத்தவன் உடம்பை ரணகளமாக்குகிற இவுங்க சும்மா இருந்திருந்தா சுயபலத்தாலே விடுதலைப்புலிங்க இன்னும் கொஞ்ச நாளைக்கு தாக்குப் பிடிச்சிருப்பாங்க.

இப்ப கம்பிக்குள் இருந்து கண்ணீர் வடிக்கிற மக்களை கண்காட்சி மாதிரி பாக்கப் போயிருக்காங்க. அமெரிக்க அதிபர் ஒபாமாவையே "போடா ஹொய்யா"ங்கிறாரு நம்ம ராஜபக்சே.




நம்ம நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்க ராஜபக்சே வக்கிற விருந்தைத் தின்னுட்டு விரலை நக்கிக் கொண்டு வரவேண்டியதுதாங்க. "இங்க நடக்கிறதைப் பத்தி மூச்சுவிட்டா முட்டியை பேத்திடுவேன்" னு சொல்லித் தாங்க எல்லாரையும் அவரு உள்ளாற விட்டிருக்கிறாரு.

"நக்கின நாய் நாவெழும்பிக் குலைக்காது"ங்கிற பழமொழி மாதிரி போனமா வந்தமான்னு இவங்களும் இங்க வந்து போத்திக்கிட்டு படுக்கத்தான் போறாஙகளே ஒழிய வேற எந்தப் பிரயோசனமும் இல்லைங்க.

போன எம்பிக்கள் வந்து என்ன சொல்லப் போறாங்க. " அங்க ஒன்னுமே நடக்கல. முகாமுக்குள்ளே பாலாறும் தேனாறும் ஓடுது. இந்த ஜனங்க இருக்கிறது காட்டுப் பகுதிங்கிறதாலே சிங்கம், புலி, நாய், நரி வந்து இவங்களைக் கடிச்சிடக்கூடாதுன்னுதான் முள் கம்பி போட்டுருக்காங்க.

அங்க இருக்கிற மக்கள் இப்ப சுதந்திரமா சந்தோசமா சீட்டு, பல்லாங்குழி, ஆடுபுலி ஆட்டமுன்னு அமர்க்களப்படுத்திக்கிட்டு இருக்காங்க.

அவங்களுக்கு ராஜபக்சே செஞ்சிருக்கிற வசதிகளைப் பாத்து கொஞ்ச நாளைக்கு அங்க தங்கி இருக்கலாமுன்னு எங்களுக்கே ஆசை வந்துச்சுன்னா பாத்துக்கங்களே" ன்னு அறிக்கை விடப்போறாங்க.

அய்யோ இதெல்லாம் சுத்தப் பொய்யின்னு போக வாய்ப்பு கிடைக்காதவங்க குய்யோ முறையோன்னு கத்தப் போறாங்க. ஆனா, உண்மையிலேயே ஈழ மக்களைக் காப்பாத்தணுமுன்னா ஆரம்பத்தில இவங்க என்ன பண்ணியிருக்கணும்




எல்லாரும் ஒத்துமையா நின்னுருக்கணுமுங்க. அங்க பாதிக்கப்படுறது எங்க இனம். அதுக்காக நாங்க என்ன வேணாலும் செய்வோம். முதலமைச்சர் கருணாநிதிக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம். இந்தப் பிரச்சினையாலே திமுக ஆட்சி கலைக்கப்பட்டா எங்க ஒட்டு மொத்த ஓட்டும் திமுகவுக்குத்தான்னு நம்ம ஜெயலலிதா, ராமதாசு ஐயா, வைகோ அண்ணாச்சி அத்தனை பேரும் ஒரே மேடையில ஏறிச் சொல்லி இருந்தா மன்மோகன் மண்டையப் பிச்சுக்கிட்டு மல்லாந்து படுத்திருப்பாருங்க.

சோனியா காந்திக்கு நிமோனியா வந்து கொஞ்ச நாளைக்கு இத்தாலிக்கு இடம் பெயர்ந்திருப்பாருங்க. அதைவிட்டுப் பிட்டு கலைஞரைக் கவுக்கிறதலையே மும்முரமா இருந்தா எப்படிங்க. இதைத் தெரிஞ்சிக்க முடியாத அளவுக்கு கேணத்தனமாகவா இருக்காரு ராஜபக்சே.

"திருக்குறளைப் படிங்க.... திருக்குறளைப் படிங்க..."ன்னு அப்பாவி மக்களுக்கிட்ட தில்லாலங்கடி பாடுற தலைவர்கள் எல்லாம் முதல்ல 'அஞ்சுதல் அஞ்சாமை பேதமை'ங்க அந்த வரியை மனப்பாடம் செஞ்சுக்கிறது நல்லதுங்க.

சில காயத்தை மருந்து போட்டு ஆத்தலாம். சில காயம் தானா ஆறுனாத்தான் உண்டு. சொந்த மண்ணில் வெந்து சாகும் ஈழ மக்களும் இந்த ரகம்தாங்க.

செத்த பிணத்துக்கு முன்னாடி குத்தாட்டம் போட்டு குதூகலிக்கிற கூட்டம் நாமங்க. செத்துக் கொண்டிருக்கிற மக்களுக்கு முன்னாடி அதைச் செய்ய வேண்டாங்க. முதல்ல எல்லாரும் ஒன்னா சேருங்க. ஒத்துமையா நில்லுங்க. இமய மலையைக்கூட எலந்தப்பழம் மாதிரி தூக்கிடலாமுங்க.

சிதறி நின்னு சிலம்பாட்டம் ஆடினா....குரங்கு கூட கும்மாங்குத்து விடும்கிறத நம்ம ஜனங்க எப்பத்தான் புரிஞ்சுக்கப் போறாங்களோ

உன்னைப் பார்த்து உலகம் வியக்கிறது

இன்னைக்கு எழுதுறதுக்கு ஏராளமான செய்திங்க இருக்கே, எதை எழுதலாமுன்னு யோசிச்சுக்கிட்டு இருந்தேங்க. அப்ப ஏதோ ஒரு சத்தம் காதுக்குள்ள கேட்டுச்சு.


என்னன்னு திரும்பிப் பார்த்தேன். என்னோட பேனாதான் பரிதாபமா முனகிக்கிட்டு இருந்துச்சு. "இன்னைக்கு நயன்தாரா சென்னைக்கு வந்த செய்தியைப் பத்தித்தானே எழுதப் போறீங்க.

என்னைய என்ன சொரணை இல்லாத தமிழ் ஜனங்கன்னு நினைச்சீங்களா... அந்த நாசமாப் போன நயன்தாரா சென்னைக்கு வந்தா என்ன... மண்ணுக்குள்ள போனா என்ன... நெஞ்சை நிமித்திற மாதிரி ஒரு செய்தி எழுதுங்க"ன்னு கம்பீரமா சொன்னுச்சு.




அடுத்த வினாடி நோபல் பரிசு வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் என் மூளைக்குள்ள பளிச்சின்னு நின்னாருங்க. நோபல் பரிசுன்னா சும்மாவாங்க. அதுவும் ஆராய்ச்சித் துறையில. எத்தனையோ வெள்ளைக்காரங்களுக்கு மத்தியில நம்ம தமிழருக்கு நோபல் பரிசு கிடைச்சிருக்குன்னா அதை கோவில் கட்டி கொண்டாட வேண்டாமாங்க.

இதுமாதிரி சாதனைகளை மக்களுக்கு கொண்டு போயி சேர்க்க வேண்டிய பத்திரிகைங்க... "நயன்தாரா நாய்க்கு நெஞ்சு வலி. நமீதா நாய்க்கு குஞ்சு வலி"ன்னு கொட்டை கொட்டையா செய்தி போடுறாங்க.

அவங்களைக் குத்தம் சொல்லி என்ன பிரயோசனம்... குடிக்கிறதுக்கு சில்லுன்னு மோரைக் கொடுத்தாலும் கூவத்துத் தண்ணியத்தான் குடிப்பேன்னு அடம்பிடிக்கிற நம்ம மக்களைதான் சொல்லணுமுங்க.

டீக்கடையில இருந்த ஒரு பெருசுக்கிட்ட இந்த நோபல் பரிசு செய்திய மகிழ்ச்சியோட சொன்னேனுங்க. அப்படின்னா... என்னன்னு அது என்னைய திருப்பிக் கேட்டுச்சு. எனக்கு மண்டைக்கு ஏறிடுச்சுங்க.

நாக்கப் புடுங்கிற மாதிரி நாலு கேள்வி கேட்டேங்க. "அட போப்பா... நயன்தாராவ ரம்லத்து செறுப்பால அடிப்பாளா... விளக்குமாத்தால அடிப்பாளா...ன்னு கவலைப்பட்டுக்கிட்டு இருக்கேன். இந்த நேரத்தில் நோபல் பரிசு... நாவல் பரிசுன்னு.... அலட்டிக்காம சொல்லிச்சுங்க.

இந்த மாதிரி ஆட்களுக்கு எல்லாம் நோபல் பரிசுன்னா என்ன... அதனோட பெருமை என்ன... அதை வாங்கி இருக்கிற தமிழரோட மதிப்பு என்ன என்பதை புரிய வைக்கிற காரியத்தில் பத்திரிகைகாரங்க இறங்கணுமுங்க.

இதில அரசியல்வாதிகளை இழுக்க முடியாதுங்க. அவங்க கல்யாணவீட்டில மாப்பிள்ளையா இருக்கணும்பாங்க. எழவு வீட்டில பொணமா இருக்கணும்முன்னு நினைப்பாங்க. ஏமாந்து முதல் ராத்திரி அறை வரைக்கும் வர விட்டா மாப்பிள்ளை விரலைச் சூப்பிக்கிட்டு வெளியிலதான் நிக்கணுமுங்க.

என்னோட இந்தச் செய்தியை படிக்கும் நண்பர்கள், தங்களுடைய வலைப்பூவில நம்ம இனத்துக்கு மாபெரும் மரியாதையைக் கொண்டு வந்த வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனைப் பத்தி எழுதுங்க. இது அவருக்கு நாம செலுத்துற நன்றிக் கடனுங்க. அந்நிய நாட்டில இருந்தாலும் அடையாளத்தைத் தொலைக்காத் மனிதரான வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனுக்கு என்னோட ராஜ வணக்கமுங்க.

Monday, October 12, 2009

கணவனை மாத்திற ஹைடெக் விபச்சாரம். சிலரின் சித்து விளையாட்டு

எழுத வேண்டாமுன்னு நினைச்சாலும் இந்த எழவெடுத்த சினிமாக்காரங்க செய்தி மண்டையப் பிராண்டுறதாலே எதையாவது சொல்லத்தானே வேண்டி இருக்கு.


விபச்சாரம்ங்கிற அந்த வார்த்தைக்கு மனசைக்கிழிக்கிறமாதிரி ஒரு கவிஞர் அர்த்தம் சொல்லி இருக்காருங்க. "ஆடை வாங்குவதற்காக நிர்வாணத்தை விற்கிறோம்."

அரை வயிற்று கஞ்சிக்கு வழியில்லாத அப்பாவிகள் செய்யும் காரியத்துக்கு கவிஞர் எழுதுன ரத்த வரிகள். ஆனால், இவர்கள் மாட்டினால் போலீஸ்காரர்கள் நார் நாராக கிழித்து விடுவார்கள்.

எட்டடுக்கு மாளிகையில் எரிகின்ற விளக்குகளுக்கு இடையே லட்சக்கணக்காக பணம் வாங்கிக்கொண்டு விபச்சாரம் செய்யும் நடிகைகளைத் தொட்டால் போலீஸ்காரர்கள் நார் நாராகக் கிழிந்து போவார்கள்.

பொது மக்களோட சிந்தனை மாறாத வரைக்கும் இவங்களை ஒன்னுமே பண்ண முடியாதுங்க. வீடியோ படமே எடுத்துக் காட்டினாலும் அது கிராபிக்ஸ்சுன்னு சொல்லி வெளியே வந்திருவாங்க.

இவ்வளவு கர்மத்துக்கு பிறகும் விபச்சாரத்தில பிடிபட்ட அந்த புவனேஸ்வரி துப்புற எச்சியை பிரசாதம் போல வாங்கி கண்ணுல ஒத்திக்கிற கர்மாந்திரம் பிடிச்ச ஜனங்க 80 சதவிகிதம் பேர் இருக்காங்க.

அதனால, விபச்சாரம் அது...இது..ங்கிற வில்லுப்பாட்டெல்லாம் தமிழ் நாட்டில எடுபடாதுங்க. சிங்கம் சிங்கிளாத்தான் வருமுன்னு சிவாஜி படத்தில ரஜினிகாந்த் சொல்லுவார்.

நம்ம புத்திசாலி மடையனுங்க எல்லாரும் அதை மேடை மேடைக்கு பேசிக்கிட்டு இருக்கிறானுங்க. ஆனா, டிஸ்கவரி சேனலைப் பாருங்க. எந்தச் சிங்கமாவது தனியா வேட்டையாடுதா... இல்ல தனியாத்தான் நடந்து போகுதா...

சந்திரமுகி படத்தில எவ்வளவு கேவலமான இரட்டை அர்த்த வசனங்கள். சிவாஜி படத்தில ஸ்ரேயே ஒரு பாட்டுக்கு ஆடும்போது போட்டிருக்கிற உடையைப் பாருங்க. குலுக்கிற குலுக்கில கொட்டாங்கச்சியே கழண்டு விழுகிற மாதிரி இருக்கும்.




இந்தப் படத்தை பாத்துட்டு கொடிகாஞ்சு போன ஒரு பெருசு ராத்திரியிலே கிழவிக்கிட்ட சில்மிஷம் பண்ண,, அந்தக் கிழவி இனிமே இந்த மாதிரி படத்துக்கு போவியா...போவியான்னு விளக்கு மாத்தாலே விளாசிருச்சாம்.

இப்படிப்பட்ட நடிகர் நடிகைங்கதான் நம்ம கலாச்சாரத்தைக் கட்டிக் காக்கிற தெய்வம்முன்னு நினைக்கிறாங்க. அவங்களுக்கு ஒரு பிரச்சினையின்ன உடனே ஒன்னா சேந்துட்டாங்க.

திரைப்படத்திலையும் சீரியல்லையும் பெண்களை மகா கேவலமாக காட்டுறாங்களே...அதையும் நம்ம பெண்கள் வாயப் பிளந்து பாக்கிறாங்களே... இதை எதுத்து போராட்டம் நடத்த முடியுங்களா... ஏன்னா... நாம... அசிங்கத்தையே அல்வான்னு சாப்பிடற அவல நிலைக்கு வந்துட்டோ முங்க.

என்னோட நண்பன் ஹைடெக் விபச்சாரமுன்னு ஒன்னை சொன்னான். அதை அப்படியே இங்க எழுதுறேன். சரியா.. தப்பா...ன்னு நீங்கதான் சொல்லணும்.

காசு வாங்கிக்கிட்டு விபச்சாரம் பண்ணினாத்தானே போலீஸ் பிடிக்கும்.( அரசியல்வாதிகள் ஆதரவில்லாதவர்களை) ஆனா, அதையே வித்தியாசமா பண்ணினா..

ஒரு பணக்காரரை திருமணம் செய்து கொள்வது. அவரிடம் இருக்கும் காசு கரைந்தவுடன் இன்னொரு பணக்காரனைக் கல்யாணம் செய்வது. இப்படியே இட்லி, வடை, தோசை, பிட்ஸா, கிண்டெக்கின்னு ருசிக்கு ருசி... பணத்துக்கு பணம்... ஆனா, சமுதாயத்தில இவங்கதான் புரட்சிப் பெண்மணிகள்.

ஒரே புருசனோடு குப்பை கொட்டுறவங்க ஏமாந்த சோணகிரிங்க. வாழத்தெரியாதவங்க. இந்த பல புருசக் குத்துவிளக்குகளைத்தான் பல இடங்களுக்கு குத்துவிளக்கு ஏத்த கூப்பிடுறாங்க கவரிமான் பரம்பரைத் தமிழர்கள்.



பணம்தான் வாழ்க்கையின்னு ஆயிப் போச்சு. அந்தப் பணத்தை தேட முடியாத ஏழைங்க எல்லாரும் சினிமாவைப் பாத்து அது மாதிரே கற்பனையில வாழுறாங்க. இந்தச் சிந்தனை இருக்குற வரைக்கு சினிமாக்காரங்களை ஒன்னும் பண்ணமுடியாதுங்க.

சினிமாக்காரங்களுக்கு ரசிகர்கள் இருக்காங்க. ரசிகர்களுக்கிட்ட ஓட்டு இருக்கு. இந்த ஓட்டு அரசியல்வாதிகளுக்குத் தேவை. கூட்டிக் கழித்து பாருங்க. ஒரு பத்திரிகைகாரனை அவசர அவசரமாக கைது பண்ணின கணக்கு புரியும்.

இதுல அடுத்த வீட்டு பெண்களைப் பத்தி எழுதினா இப்படித்தான் நடக்குமுன்னு வியாக்கியானம் வேறு. இவங்களெல்லாம் பெண்களா.... எங்களோடு சேர்த்து இவங்களை ஒப்பிடலாமான்னு நம்ம புலியை முறத்தாலே விரட்டின தமிழச்சிங்க எல்லாம் பொங்கி எழுந்தாத்தான் விடிவு கிடைக்குமுங்க. பொங்குவாங்களா...

Friday, October 9, 2009

நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா சொல்லுங்கள்

உலகத்தில் எத்தனையோ தர்மங்கள் இருக்குங்க. அதில இரண்டு தர்மங்கள் மிக மிக முக்கியமானவைங்க. ஒன்னும் யுத்த தர்மமுங்க. இன்னொன்னு பத்திரிகை தர்மமுங்க.


இதில எது தடம்புரண்டாலும் மக்களுக்கு நல்லது இல்லைங்க. விபச்சார வழக்கில மாட்டிக்கிட்ட புவனேஸ்வரி சொன்னதா ஒரு பத்திரிகை வெளியிட்ட செய்தி திரை உலகத்தையே திக்கு முக்காட வச்சிருச்சுங்க.

ஆனா, அது தவறான செய்தின்னு போலீசும் புவனேஸ்வரியும் மறுத்திருக்காங்க. இது குறிச்சு நடவடிக்கை எடுக்கணுமுன்னு திரைப் பட்டாளமே முதல்வர் வீட்டு கதவை தட்டிருச்சுங்க.

இப்ப அந்த செய்தியை வெளியிட்ட பத்திரிகை ஆசிரியர் சிறைக்குள் இருக்காருங்க. ஒரு செய்தி வெளியிடுவதற்கு முன்னர் எந்த அளவுக்கு உண்மையின்னு ஆராய்ந்து பார்க்க வேண்டியது அவசியமுங்க.

ஒரு பேனா தலைகுனியும்போது உண்மை தலை நிமிரணுமுங்க. தவறு செய்யாதவங்க தலைகுனியக்கூடாதுங்க. அந்த வகையில சட்டம் கடமையை செஞ்சுருக்குங்க.




அதே நேரத்தில் இதுக்கு கொதிச்சு எழுந்த பெரிய நடிகர்கள் எல்லாம் ஒரு சில விஷயங்களில அக்கறையா இருந்தா நல்லதுங்கறது என்னோட அபிப்பிராயமுங்க. தினமலருக்கு எதிரா போராட்டமுன்னு சொல்லி ஆளாளுக்கு நடிகர் நடிகைகள் ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை பண்ணியிருக்காங்க. இது எந்த வகையில நியாயமுன்னு தெரியலைங்க.

இப்ப பத்திரிகைகாரங்களும் ஒன்னா சேர்ந்திருக்காங்க. அவங்க கூட்டம் போட்டு போராட்டமுன்னு ஆரம்பிச்சா என்ன ஆகுமுங்க. இதெல்லாம் நாட்டுக்கு நல்லது இல்லைங்க. சின்னக் கலைவாணர்னு பேர வச்சுக்கிட்டு விவேக் ரொம்ப சின்னத்தனமா பேசி இருக்கிறாராமுங்க. பத்திரிகைகாரங்க வீட்டு பொம்பிளைங்க எல்லாம் விளக்கமாத்தைத் தூக்கிட்டு வந்தா சின்னக் கலைவாணர் நெஞ்சு ( அவரோட பாஷையில் குஞ்சு) பதற ஓட வேண்டியது தாங்க.




திரையுலகத்தில தப்பே நடக்கலைன்னு சொன்னா இமய மலையை இடுப்பு வேட்டிக்குள்ள மறைச்ச கதையா போயிடுமுங்க. எங்காவது தப்பு நடக்குதுன்னு தெரிஞ்சா அதை அவங்களைக் கூப்பிட்டு உடனே எச்சரிக்கை பண்ணணுமுங்க.

நடிகர் சங்கத்தில இருந்து அவங்கள நீக்கி படங்களில நடிக்க முடியாதபடி பார்த்துக்கணுமுங்க. இது தனிமனித உரிமையில தலையிடுற வேலையின்னு நடிகர் சங்கம் ஒதுங்கக் கூடாதுங்க.

இன்னொரு முக்கியமான காரியத்தை நடிகர் சங்கம் கண்டிப்பா செய்யணுமுங்க. பொது நிகழ்ச்சிகளில கலந்துக்கிற நடிகைகள் ஓரளவு ஆபாசமில்லா உடை உடுத்தி போகணுமுன்னு ஒரு தீர்மானத்தை கொண்டு வரணுமுங்க. சில நடிகைகள் போட்டுக்கிட்டு வர்ற உடையப் பாத்தா நம்ம சிறுசுகளுக்கும் பெருசுகளுக்கும் சூடு 200 டிகிரியைத் தாண்டி எகிறிடுதுங்க.

எந்தப் பொருளை எடுத்தாலும் நடிகைங்க பேரைச் சொல்லித்தான் விக்கிறாங்க. குஷ்பு சேலை, அசின் சேலை, நமீதா சுடிதார்ன்னு கடைக்கு கடை கூவிக்கூவி விக்கிறாங்க. அதை நம்ம பொண்ணுங்க போட்டி போட்டுக்கிட்டு வாங்குறாங்க.

ஒரு காலத்தில குஷ்புவுக்கு கோவில் கட்டினாங்க. குஷ்பு இட்லின்னு கூட வித்தாங்க. இப்படி நம்ம பெண்களுக்கு முன்னுதாரணமா இருக்கும் நடிகைங்க அக வாழ்க்கையில எப்படி இருந்தாலும் புற வாழ்க்கையில் ஒரு கட்டுக்கோப்பைக் கடைப்பிடிக்கிறது நல்லதுங்க.




விஜயகாந்த், சரத்குமார் போன்ற தைரியமான நடிகருங்க இந்த ஒழுங்கை கொண்டு வந்துட்டாங்கன்னா தமிழ் பண்பாடு நிலைக்கணுமுன்னு நினைக்கிற அத்தனை பேரும் உங்களைக் கையெடுத்துக் கும்பிடுவாங்க.

கடைசியா ஒன்னு கேக்கிறேங்க... நீங்க நடிக நடிகைங்கிறதை மறந்திட்டு ஒரு சாதாரண மனுசனா இருந்து நீங்க நடிச்ச படங்களைப் பாருங்க. எவ்வளவு கேவலமா இருக்குன்னு அப்ப தெரியும். நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானான்னு தமிழ் சமுதாயம் கேள்வி கேட்கிறமாதிரி நடிகர் நடிகைகள் நடந்துக்காக இருக்கிறது நல்லதுஙக.

சரி... குளவிக்கூட்டை கலைச்சு விட்டுட்டுங்க. குளவி கொடுக்கை நீங்க புடுங்கப் போறீங்களா.... குளவி கொடுக்கு உங்களைப் பதம் பார்க்கப் போகுதா என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்கணுமுங்க.

நான் 'என் வழி' யில் திருடிய படங்கள் இவை...நன்றி

Thursday, October 8, 2009

படித்தவனை விட நடித்தவனுக்குத்தான் தமிழ்நாட்டில் மரியாதை அதிகம்

போன மாதக் குமுதம் இதழில் ஒரு செய்தி படிச்சேங்க. கந்தசாமி படத்தைப் பத்தி எழுத்தாளர் ஞாநி ஏதோ கருத்து சொல்லி இருக்கிறாருன்னு நினைக்கிறேங்க.


அதுக்கு அந்த படத்தோட இயக்குனர் சுசி கணேசன் கண்ட மேனிக்கு ஒரு பதில் சொல்லி இருக்காருங்க. கந்தசாமி படம் ஒரு வாரத்திலேயே பல கோடி ரூபாய்க்கு விற்பனையாகி விட்டதாம். அந்தப் படத்துக்கு ஈடு இணையே இல்லையாம்.தரத்தில புடம் போட்ட தங்கமாம். அதனால அது பத்தி ஞானி செஞ்ச விமர்சனத்தை ஒரு குப்பைன்னு சொல்லி இருக்காருங்க. தெரியாமத்தான் கேட்கிறேன்...





வீட்டு வேலைக்கு போற ஒரு குடும்பப்பொண்ணு ஒரு நாளைக்கு நூறு ரூபாய் சம்பாதிக்கிறா.... ஆனா, விபச்சாரம் செய்ற ஒரு பொண்ணு ஒரு மணி நேரத்துக்கு 20000 ரூபாய் சம்பாதிக்கிறா... இதுக்காக அவளைத் தரமான பொண்ணுன்னு சொல்ல முடியுமா...

ஒரு நாளைக்கு 50 லட்ச ரூபாய்க்கு பால் விக்குது. ஆனா... 500 கோடி ரூபாய்க்கு மதுபானம் விக்கிது. அதுக்காக பாலை விட மதுபானம் எவ்வளவோ ஒசத்தின்னு சொல்ல முடியுமா....

ஒரு நாளைக்கு ஊதுபத்தி தமிழ்நாடு பூராம் எவ்வளவு விக்குதுன்னு தெரியாது. ஆனா... சிகரெட்டு 50 கோடிக்கு மேலே தாண்டும். இதை வச்சு சிகரெட்டுக்கு எவ்வளவு மரியாதை அப்படின்னு சொல்ல முடியுமா...

நான் தஞ்சாவூரில படிச்சிக்கிட்டு இருக்கும்போது பேருந்து நிலையத்துக்கிட்ட இருக்கும் ஒரு தியேட்டருக்கு சினிமா பாக்க போவேன். சாயங்கால காட்சிக்கு ஆளு இல்லாம காத்தாடும். ஆனா, பத்து மணி காட்சிக்கு கிழடு கெட்டைன்னு வித்தியாசம் இல்லாம கூட்டம் அலைமோதும்.





எதுக்கு தெரியுங்களா.. நம்ம மலையாளத்து நடிகை ஷகிலா அக்காவோட பிட் சும்மா ஐஞ்சு நிமிசம் ஓடும். அந்தக் காட்சி முடிஞ்ச உடனேயே எலிக்குஞ்சு பொந்தை விட்டு வெளிய வந்த மாதிரி ரொம்பப் பேரு கிளம்பி போயிருவாங்க.

அந்தக் காட்சியை ரொம்பப்பேரு விரும்புறாங்கன்னுட்டு தரத்தில் சிறந்ததுன்னு தம்பட்டம் அடிக்க முடியுமுங்களா.. எனக்கு ஒன்னு மட்டும் புரியலைங்க. ஒரு படத்தை பல கோடி ரூபாய்க்கு எடுத்து வெற்றிகரமா ஓட வைக்கிற ஒரு இயக்குனருக்கு இது மாதிரியான சாதாரண விஷயம்கூட மண்டைக்குள் உரைக்கலையேங்கிறதுதான்.

கந்தசாமி படத்திலகூட நம்ம ஸ்ரேயா கஷ்டப்பட்டுத்தானே துணி போட்டுக்கிட்டு இருக்காங்க. சென்சார்போர்டுன்னு ஒன்னு இல்லாட்டி அதையும் கழட்டி எறிஞ்சிட்டு கபடி ஆட்டம் ஆடிட மாட்டாங்க.




முதல்வர் கலைஞர் கருணாநிதி கலந்து கொண்ட நிகழ்ச்சியிலே முக்கால்வாசியைத் திறந்து காட்டியபடி இருந்தவங்க நம்ம ஸ்ரேயா...அதையும் பேப்பர்காரங்க படம்புடுச்சு போட்டாங்க. எங்க கிராமத்தில இருந்த ஒரு பெருசு அந்தப் படத்தை நக்கி நக்கியே பேப்பரைக் கிழிச்சிடுச்சு. இப்படி இருக்கும்போது படம் ஏங்க பல கோடிக்கு விக்காது.

படம் பல பேரைக் கவர்ந்திருக்கு... பல கோடியைச் சம்பாதித்து இருக்கு.... எல்லாரும் நல்ல லாபம் சம்பாதிச்சு இருக்கீங்க. உங்களுடைய உழைப்பை பாராட்டுறேங்க. அதுக்காக உலகத்திலேயே கந்தசாமி படம்தான் தரத்தில் உயர்ந்ததுன்னு சொல்லி உதார் காட்டாதீங்க.

பல துறைகளில பட்டப் படிப்பு முடிச்சு பேராசிரியர்களைவிட ஒரு படத்தில தலை காட்டினவனுக்கு தமிழ்நாட்டில மரியாதை ஜாஸ்திங்கிற எதார்த்த உண்மை தெரிஞ்சவங்க நான். அதனால ஞாநியை விட நீங்க பல மடங்கு பிரபலமானவருன்னு புரியுதுங்க.

அதுக்காக பண்பட்ட பத்திரிகையாளரான ஞாநி மாதிரி ஆளுங்களை அவதூறா பேசாதீங்க. அது அவரைப் பேசுனதா அர்த்தம் இல்லைங்க. அன்னைத் தமிழைப் பேசுனதா அர்த்தமுங்க.




அது சரி தமிழ்நாட்டுல எங்க தமிழ் இருக்கு. தொலைக்காட்சியிலும் திரைப்படங்களிலும் தொலைந்து போன 80 சதவிகித மக்கள் முழிச்சுக்காத வரைக்கும் உங்க காட்டுல மழைதாங்க. அதனால ஞாநியை என்ன கலைவாணியைக் கூட உங்க கால் செறுப்பாத்தானே நினைப்பீங்க.

Tuesday, October 6, 2009

போன மச்சான் திரும்பி வந்தான் பூ மணத்தோட

"போன மச்சான் திரும்பி வந்தான் பூ மணத்தோட"...


வீராப்பா பேசி விட்டு வீட்டை விட்டு போன மாப்பிள்ளை தட்டுக்கெட்டு திரும்பி வந்தால் கேலிக்காரர்கள் நக்கலாக பேசும் நையாண்டி வார்த்தைங்க இது.




இதுதான் இப்ப ராமதாசு ஐயாவின் கதை. இவரு எதுக்குங்க திமுகவை விட்டுப் போனாரு. கலைஞர் இவரை என்ன மரியாதைக் குறைச்சலாகவா நடத்தினாரு. 'திமிரு எடுத்த கொக்கு கெழுத்தியை பிடிச்சு முழுங்கின' கதையா வெளிக்கிளம்பி விட்டு இப்ப புதுசு புதுசா கதை விட்டுக்கிட்டு இருக்கிறாரு.

'மச்சான்கிட்டயும் கொழுந்தன் கிட்டயேயும் மாத்தி மாத்தி போயி காரியம் பார்த்த மாரியம்மா கடைசியில நடுத்தெருவில நின்னு நாறுனாளாம்' இந்தக் கதையாக திருதிருன்னு முழிச்சிக்கிட்டு நிக்கிறாரு நம்ம மருத்துவரு.

கலைஞர் நல்லவரா.... கெட்டவரா... என்பதில்லைங்க பிரச்சினை. மருத்துவருக்கும் வைகோவுக்கும் மரியாதை கொடுத்து வச்சிருந்தாருங்கிறதை மறுக்க முடியுமா... ஆனா, அவங்க கலைஞருக்கு செஞ்ச துரோகம் எந்தக் காலத்திலையும் தூங்காதுங்க.

செஞ்ச தப்பை உணர்ந்தா... மக்கள் போனா போகுதுன்னு மறந்திடுவாங்க. அதை விட்டுட்டு ஒடம்பு முழுதும் சாக்கடையை பூசிக்கிட்டு ஒன்னுமே நடக்காதமாதிரி பேசினா....தெருத்தெருவா போனாலும் மருத்துவரை திரும்பிப் பார்க்கக்கூட ஆளு இருக்காதுங்க.






மருத்துவர் ஐயா... இன்னிக்குத்தான் ஜெயலலிதாவோட குணம் தெரிஞ்ச மாதிரி டகால்டி வேலை காட்டாம துரோகத்துக்கு மருந்து போடப் பாருங்க. வரும்காலத்திலேயாவது வைப்பாட்டியா இருக்காம... பொண்டாட்டியா இருக்கப் பாருங்க.

எதுக்கு இம்புட்டு கோபம் சரத்குமார் அண்ணாச்சி....?

சரத்குமார் அண்ணாச்சி புவனேஸ்வரி வாக்குமூலத்தைக் கேட்டு பொங்கி எழுந்துட்டீங்களே... அடுத்து நீங்க பாட்டுக்கு சகட்டுமேனிக்கு பத்திரிகைக்காரங்களுக்கு பஞ்ச் கொடுத்திருக்கிறீங்க.


அதெல்லாம் சரிதாங்க அண்ணாச்சி.... நாங்கெல்லாம் ஒரு குடும்பமுன்னு ஒரு பெரிய கண்டுபிடிப்பு அணுகுண்டை வெடிச்சிருக்கீங்க. அண்ணாச்சி.... ஒரு குடும்பத்தில பிள்ளை தப்பு பண்ணினா...குடும்பத்தலைவர் என்ன பண்ணுவார்.




பிள்ளையைப் பக்கத்தில கூப்பிட்டு "இங்க பாரப்பா... தலைமுறை தலைமுறையா தலை நிமிர்ந்து வாழ்ந்த குடும்பம்.. நீ பாட்டுக்கு சந்து முனையில சிந்து பாடி குடும்பத்தை சந்தியில நிறுத்திடாதே... நீ ஒருத்தன் செய்யுற தப்பாலே நம்ம குடும்பமே தலைகுனிஞ்சு நிக்குது"ன்னு சொல்வார்.


நெஞ்சில கையை வச்சு சொல்லுங்க அண்ணாச்சி.. நீங்க எப்பவாவது அப்படி சொல்லி இருக்கிறீங்களா...

சினிமாவுல இருப்பவங்களுக்கு காசு மேலே காசு கொட்டுது. அதனாலதான் கிழக்கு கடற்கரை சாலையையே சினிமா பட்டாளம் நாறடிச்சுக்கிட்டு இருக்குது. இதை நான் சொல்லலை சாமி. காலங்காலமா வருகிற பத்திரிகை தகவல்தான் சொல்லுது. இதைத் தடுக்க நடவடிக்கை எடுத்திருக்கீகலா அப்பு.

பத்திரிகை மேல பாய்ஞ்சு பிறாண்டி இருக்கீகலே.. இந்த பத்திரிகைகள்தான் உங்கள வெளிச்சத்துக்கு கொண்டு வந்து வெள்ளிக்காசுகளில குளிக்க வச்சுச்சு. ஆதாயமுன்னா ஆ....ன்னு வாயைப் பிளக்கிறது... பாதகமுன்னு உர்....ன்னு பல்லைக் காட்டுறதா..... இது என்ன பழக்கமுங்க அண்ணாச்சி.

சரி உங்ககிட்ட ஒரே ஒரு கேள்வி.... இந்தப் பொண்ணு புவனேஸ்வரி ஏற்கனவே இரவு சேவை செஞ்சு மாட்டிக்கிட்டது உங்களுக்கு தெரியும்தானே அண்ணாச்சி.

அதை கூப்பிட்டு " அம்மா... நாமெல்லாம் ஒரே குடும்பம்... நீ தப்பு பண்ணினா அது நம்ம திரைக்குடும்பத்தை பாதிக்கும்...ன்னு புத்தி சொல்லி புதுப்பாதை காட்டி இருக்கலாமுல்ல. நீங்க என்ன அலும்பு பண்ணினாலும் சொரணை இல்லாத தமிழ்க்கூட்டம் உங்க காலைக் கவ்விக்கிட்டுத்தானே கிடக்கப்போகுது. பின்ன எதுக்கு அண்ணாச்சி உங்களுக்கு இம்புட்டு கோபம்.

கிராமத்து பக்கமெல்லாம் ஒருத்தர் நியாயம் பேசினா... அவரு ஓரளவுக்கு வாழ்க்கையில சரியா இருக்கணும் அண்ணாச்சி. இல்லையின்னா "உனக்கு இதைப்பத்தி பேச என்ன யோக்கியதை இருக்கு"ன்னு முகத்தில காரி துப்பிருவாங்க அண்ணாச்சி.




இந்த யோக்கியதை எத்தனை பேருக்கு இருக்குன்னு கணக்கெடுத்துப்புட்டு அப்புறமா பத்திரிகைகாரங்க மேலே பாய்ங்க அண்ணாச்சி. காசு இருந்தா என்ன கர்மத்தை வேண்டுமானாலும் செய்யலாம்.... பேசலாம்...கிற காலத்தில உங்களை மாதிரி ஆளுங்களை பகைச்சுக்கிறது பாம்புக்கிட்ட போய் பல்லைக் காட்டச்சொன்ன கதையா இல்ல போயிரும். சத்தம் போடுறதை விட்டுப்புட்டு உங்க பக்கத்தைக் கொஞ்சம் சுத்தப்படுத்துங்க அண்ணாச்சி.
ஷகிலாவோட கில்பான்சி படங்கள் நிறைய இருக்குங்க. அதை போட மனசு வரலைங்க அண்ணாச்சி...

Monday, October 5, 2009

நமீதா விலை ஒரு லட்சமா....?

நடிகர் நடிகைகள் குறித்து ஏற்கனவே நான் எழுதி இருக்கிறேங்க. என்னோட் நண்பர்கள் சிலருக்கு இதில வருத்தமுங்க. அதிலும் நமீதாமேல அபார பாசம் வச்சிருக்கிற ஒருத்தர் என்னோட சண்டைக்கே வந்திட்டாருங்க.





ஆனா, நேத்து செய்தி விபச்சார வழக்கில் நடிகை புவனேஸ்வரி கைது. அவரை கைது செய்யப்போன போலீசுக்கிட்ட அழுது புலம்பி இருக்கிறாருங்க. "எத்தனையோ நடிகைங்க ஏசி ரூம்பில லட்சக்கணக்கில பணத்தை வாங்கிக்கிட்டு விபச்சாரம் பண்ணுறாங்க. அவங்களையெல்லாம் பிடிக்காம என்னைய மட்டும் குறி வச்சே புடிக்கிறீங்களே. என்னோட பொழப்பில மண்ணை வாரி போட்டுட்டீங்களே" கண்ணீர் விட்டு இருக்கிறாருங்க.

அதோட விபச்சாரம் செய்யும் நடிகைங்க பேரையும் அள்ளி விட்டிருக்கிறாருங்க. அதுல நமீதா ஒரு லட்சம் வாங்கிக்கிட்டு விபச்சாரம் செய்யிறதா சொல்லி இருக்கிறாருங்க. இந்த செய்தியை என் நண்பன்கிட்ட காட்டினேனுங்க.




அவன் சங்கடப்படுறதுக்கு பதிலா பெருமையா சொல்றாங்க. " பாத்தியா உடம்பைப் போலவே தொகையிலும் என்னோட ஆளு டாப் லிஸ்ட்ல இருக்குது. இப்ப தெரிஞ்சுக்க என்னோட ஆளின் மகிமையை" ன்னு சந்தோசத்தோடு சொல்றாங்க.

அதோட இன்னொரு விஷயத்தையும் சொன்னானுங்க. " நீ என்னதான் எழுதினாலும் ஒரு பயலும் அதை பெரிசா நினைக்க மாட்டான். விலை கூடக் கூடத்தானே சொத்துக்கு மதிப்பு. அதுமாதிரிதான் நமீதாவும்' ன்னு சந்தோசத்தோடு சொல்றாங்க. இப்ப இருக்கிற இளைஞர்கள் எல்லாரும் இப்படித்தானுங்களா.... நான் தான் உலக நிலவரம் தெரியாம குண்டுச் சட்டிக்குள்ள குதிரை ஓட்டிக்கிட்டு இருக்கேனா...

எனக்கு ஆறுதலா யாராவது பதில் சொல்லுங்களேன்.

Thursday, October 1, 2009

பாவம் பத்துமலை முருகன்

நம்ம ஜனங்களைக் கட்டிப் போட்டு வைச்சிருக்கிறது மூன்று அம்சமுங்க. 1-இறை நம்பிக்கை . 2.சினிமா. 3- அரசியல். இந்த மூன்று காரியத்திலும் அறிவுக்கு இடம் கொடுப்பது அறவே இல்லைன்னு என் நண்பன் அடிக்கடி என்னிடம் சொல்லுவான்.





இதில் எனக்கு உடன்பாடு இல்லைன்னாலும் சில நேரங்களில அவன் சொல்வது சரித்தான்னு என்னோட மனசுக்கு படுதுங்க.

சமீபத்தில் வந்த ஒரு செய்திங்க. கோவிலுக்குள்ளேயே ஒரு பூசாரி காமக் களியாட்டம் நடத்தி இருக்காருங்க. அவரை போலீஸ் தேடுவதாக தகவலுங்க.

அந்தப் பூசாரியை ஒரு பக்கம் தள்ளுங்க. சாமி கும்பிட வந்த பெண்கள் சல்லாபத்துக்கு இணங்கி இருக்காங்கன்னா... இது தனிப்பட்ட விஷயமுன்னு தள்ள முடியாதுங்க. பெண்கள் சமுதாயத்தையே தலைகுனிய வைக்கிற சம்பவமுங்க. தப்பு செஞ்சது யாரோ... எவரோ.... அந்தக் கோவிலுக்குப் போன எல்லா பெண்களும் சந்தேக வட்டத்துல வந்துடமாட்டாங்களா... நம்ம ஆன்மீகத் தத்துவமே அடிபட்டு போயிடாதுங்களா...

அடுத்தது சினிமா... கொட்டுற பணத்தை என்ன செய்யிறதுன்னு தெரியாம சினிமா நடிகருங்க, கும்மாளம் அடிக்கிறாங்க. அந்தரங்க வாழ்க்கையை அலசிப் பாத்தா கூவம் சாக்கடை எவ்வளவோ தேவலைங்க. ( இப்படி சொல்லியதற்காக சிவகுமார் போன்ற சிறந்த மனிதர்கள் மன்னிக்க வேண்டும்). ஆனா, அவங்களை தெய்வங்களா நெனைச்சு பாலாபிஷேகம் முதல் பன்னீர் அபிஷேகம் வரை பண்ணி நம்ம நாகரிகத்தையே சிதைச்சு சின்னா பின்னமாக்கிடுறாங்க.




இன்னொன்னு அரசியல்... ஜெயலலிதாவை மேரி மாதா ஆக்கினாங்க. இப்ப ஸ்டாலினை முருகனாக்கி இருக்காங்க. அதுவும் மலேசியாவில் உள்ள முருகன் திருத்தலமான பத்துமலையில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருக்கும் 140 அடி முருகன் சிலை படத்தில் ஸ்டாலின் தலையை ஒட்ட வைச்சிருகாங்க. அந்த சுவரொட்டியின் கீழே 'வணங்கும் பக்தர்கள்' என்ற வாசகம் வேறு.

மூன்று இனங்கள் வாழுகின்ற ஒரு நாட்டில் மிகவும் பாடுபட்டு எத்தனையோ எதிர்ப்புகளுக்கு இடையே எழுப்பப்பட்ட ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆன்மீகச் சின்னத்தை அவமானப்படுத்துவது என்ன நியாயமுங்க.

பகுத்தறிவு பகவலன் தந்தை பெரியாரின் தம்பிகளாக இருந்து ஆரிய ஆதிக்கத்தின் வேரறுத்த போர்த்தளபதிகளான பேரறிஞர் அண்ணா, உலகத் தமிழினத்தலைவர் கலைஞர் கருணாநிதி போன்றவர்களின் கொள்கையைக் குழி தோண்டி புதைக்கின்ற காரியம் தானுங்களே இது. இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கப்பட்ட திராவிட இயக்கத்தின் வரலாறு தெரியாத சிலர் செய்கின்ற காரியங்கள் பெரிய தலைவர்களின் போராட்டத்தை புரையோடிப் போகச் செய்யாதுங்களா....

இப்படி வைங்கன்னு ஸ்டாலின் கேட்டாரா... இது அவரை சங்கடத்தில் ஆழ்த்துகின்ற சங்கதிதானுங்களே.... ஸ்டாலின் மீது அன்பு வைத்திருக்கிற அவங்க. ஸ்டாலின் பேரால நல்ல காரியம் பண்ணுங்க. ஏழைங்களுக்கு உதவுங்க. படிக்க பணம் இல்லாத பிள்ளைகளுக்கு பணம் கொடுங்க.இது மாதிரி செஞ்சீங்கன்னா துணை முதல்வரே உங்க வீடு தேடி வந்துடுவாருங்க.




அதை விட்டுப்புட்டு இப்படிப்பட்ட முட்டாள்தனமான காரியங்களை செய்கின்ற நம்ம சமுதாயத்தை எப்படிங்க முன்னேறிய சமுதாயமுன்னு வாய்கூசமா சொல்றாங்க. என்னங்க....என்னுடைய வேதனை சரிதானுங்களே...