பெங்களூருல குண்டு வெடிச்சு நாடே கொந்தளிப்பில கிடக்குதுங்க. அமெரிக்கா பாஸ்டன் நகரில வெடிச்ச குண்டோட மிச்சம்தான் பெங்களூரல பிரதிபலிச்சிருக்குன்னு ஒரு பேச்சு அடிப்பட்டுக்கிட்டு இருக்கு.
நண்டு கடிச்சாவே நம்மாளு நாலு காதம் பின்னங்காலு பிடரியில அடிக்க ஓடுவானுங்க. குண்டு வெடிச்சா என்ன கதை ஆகுமுங்க.
குண்டு வெடிச்சது பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்துக்கு பக்கத்தில... இந்த குண்டு வெடிப்போட இலக்கு நாங்கதான்னு பாரதிய ஜனதா கட்சி பதட்டமா அறிக்கை விட்டுருக்கு.
குண்டு வெடிப்பில அரசியல் ஆதாயம் தேடுற அசிங்கமான காரியத்தில் பாரதிய ஜனதா கட்சி இறங்கி இருக்குன்னு காங்கிரஸ்கட்சி கண்டனக் கணைகளை பாய்ச்சி இருக்கு.
பொது மக்களே... நீங்க எவ்வளவு காலத்துக்குத்தான் புரியாத புளியமரமா நிக்கப்போறீங்க.
இவங்க ரெண்டு பேருக்குமே குண்டு வெடிச்சதப்பத்தி கவலை இல்லை. இது யாருக்கும் ஆதாயமாக போயிடக் கூடாதுங்கிறதுதான் பொச்சரிப்பு.
குண்டு வெடிப்பு நம்ம நாட்டு பாதுகாப்புக்கு ஏற்பட்டிருக்கிற பயங்கர இழுக்குங்கிறது
நாசமாப் போன ரெண்டு கட்சிக்காரனுங்களுக்கும் நடு மண்டையில உரைக்கவே இல்லை.
இவனுக ரெண்டு பேரும் இப்படி சண்டை போட்டுக்கிட்டா குண்டு வச்சவனுங்களுக்கு கொண்டாட்டமாக இருக்காதுங்களா.
இலங்கை ராணுவம் நம்ம நாட்டு மீனவர்களை குறிப்பா தமிழ் நாட்டு மீனவர்கள் குண்டியிலேயே சுடுறானுங்க. அதப்பத்தி மத்திய அரசு கவலைப்படலை.
பக்கத்து நாடான பாகிஸ்தானுல சிறுபான்மையா இருக்கிற இந்து மக்கள் படாதபாடு படுறாங்க. ஆனா அதைப்பத்தியும் கவலை இல்லை.
காஷ்மீருக்குள்ள பூந்து தீவிரவாதிகள் கலக்குறாங்க. அது குறித்தும் இந்திய அரசின் இதயம் படபடக்கல.
ஆனா, பதவியில ஒட்டிக்கிட்டு இருக்க இவங்க படுற பாடு இருக்கே. அது கேவலத்திலயும் மகா கேவலமா தெரியலைங்களா?
மக்களைப்பத்தி கவலை இல்லை. பாதுகாப்பைப்பத்தி கவலை இல்லை. அமைதியைப் பத்திக் கவலை இல்லை. பக்கத்து நாட்டுக்காரன் நம்ம வாயில பருப்புக் கடைஞ்சாலும் கவலை இல்லை.
எப்படியாவது பதவியில ஒட்டிக்கிட்டு இருக்கணும். ஆயிரங்கோடி லட்சங்கோடின்னு ஊர்ப்பணத்தை ஆட்டையப் போடணும். இதுதான் அவங்களோட ஒட்டு மொத்த சிந்தனை. சி பி ஐ கேஸ் போட்டாலும் இவனுக வெட்கப்பட மாட்டாணுங்க.
ஊர்ப்பணத்தை சுட்டு தேர்த்திருவிழா நடத்தும் இவங்களை அப்பாவி ஜனங்க கண்ணை மூடிக்கிட்டு நம்புறதுதான் இவங்களோட பலம்.
அதோட நம்ம ஜனங்க ஒரு விஷயத்தில மட்டும் திருவள்ளுவர் சொன்னதை மறக்காக கடைப்பிடிக்கிறாங்க. "நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல அன்றே மறப்பது நன்று" இதுதாங்க அந்த திருக்குறள்.
இதுனால தான் அந்த நாசமாப் போன அரசியல்வாதிங்க நாட்டை கூறு போட்டு கும்மியடிச்சுக்கிட்டு இருக்கிறாங்க.
நம்ம ஜனங்க மூனு வகையில அடிமையாக இருக்காங்க. ஒன்னு ஆன்மீகம். ரெண்டு அரசியல். மூனு சினிமா.
சாமியாருங்க உண்மையா போலியான்னு பார்க்கிறதில்லை. அரசியல்வாதிங்க மனச்சாட்சி உள்ளவங்களா மக்களை ஏமாத்தாதவங்களான்னு ஆராய்வதில்லை. சினிமா ஒரு நடிப்பு... சினிமாகாரங்க சம்பளம் வாங்கிக்கிட்டுத்தான் நடிக்கிறாங்க. திரையில நடிக்கிற மாதிரி எந்த நடிகரும் உண்மை வாழ்க்கையில் இருக்கிறதில்லைங்கிறதை மக்கள் உணர்வதில்லை.
இந்த அப்பாவித்தனமான ஏமாளித்தனம்தான் இந்தியாங்கிற நாடு உலக அளவில மத்த நாடுகள் கிள்ளுக்கீரையாக நினைக்கிறதுக்கு மூல காரணம்.
மக்கள் என்னைக்காவது அறியாத்தனமான அடிமைத்தளையில இருந்து விடுபட்டு ஆழிபேரலை மாதிரி கொங்கி எழுந்தாங்கன்னா.... ஊரை சுரண்டித் திங்கிற அரசியல்வாதிங்க நாறிப் போயிடுவாங்க...
இந்த மாற்றம் இன்னைக்கு இல்லாவிட்டாலும் என்னைக்காவது வரும்... கண்டிப்பாக வரும்.




