சாமியார்கள்தான் ஆரம்ப காலத்தில் சல்லாபச் சடுகுடு ஆட்டத்தில் கலைமாமணி விருது வாங்கி வந்தாங்க. இப்ப கோவில் குருக்களும் கும்மாங்குத்து மல்லாங்குத்து வேலையில கின்னஸ் சாதனை படைக்க ஆரம்பிச்சு இருக்காங்க. நான் யாரை சொல்றேன்னு தெரியுதுங்களா. கும்பகோணம் மச்சேஸ்வரர் கோவில் பூசாரி தேவநாதனைத்தான் சொல்றேங்க.
கிட்டிப்புல்லு விளையாட்டில் மகா கில்லாடின்னு அவரு சம்பந்தப்பட்ட வீடியோ காட்சிகளை பார்த்து தெரிஞ்சுக்கிட்டேங்க. எனக்கு ஒன்னு மட்டும் புரியலைங்க. கோவில் கர்ப்ப கிரகத்தில ஆயகலை அறுபத்தி நாலையும் நடத்தும்போது அந்தப் பெண்கள் முகத்தில கூச்சமோ வெட்கமோ இல்லைங்க.
ஒரு பக்கம் மேளச் சத்தம். இன்னொரு பக்கம் ஒலிபெருக்கியில பக்திப் பாடல்கள். இதுக்கு மத்தியிலதாங்க நம்ம தேவநாதன்... காம நாதனா மாறி கபடி விளையாடி இருக்காரு. உண்மையிலேயே தேவநாதன் கில்லாடிக்கு கில்லாடிங்க. வெள்ளைக்காரப் பயலுக எல்லாம் வாயில விரல் சூப்புற அளவுக்கு பல புதுமைகளைச் செஞ்சிருக்காருங்க.
அந்தப் பெண்களோட வாழ்க்கை என்ன ஆகுமோன்னு என்னோட நண்பன்கிட்ட வேதனையோட சொன்னேங்க. அதுக்கு "போடா லூசு... இந்த பல்லாங்குழி விளையாட்டெல்லாம் பக்தி மார்க்கத்தில சகஜமப்பான்னுட்டு அந்தப் பொண்ணுங்களோட புருசன்மாருங்க இன்னொரு கோவிலுக்கு அனுப்பி வைப்பாங்க.
இப்ப போலீசில மாட்டிக்கிட்ட தேவநாதனுக்கு இனிமேத்தான் மவுசு மானாங்கன்னியா ஏறப்போகுது. இப்ப அந்தப் பகுதி பொம்பளைங்கதானே கருவறைக் கண்ணாமுச்சி ஆடி நிலவறை நெல்லுக்குத்தினாங்க.
பத்திரிகையிலையும் தொலைக்காட்சியிலையும் பரபரப்பான தேவநாதனைத் தேடி தமிழ்நாடு முழுவதும் இருந்து பெண்கள் கூட்டம் அலைமோதப் போகுது. டோக்கன் கொடுத்து சிலம்பாட்டம் நடத்தப் போறான். ஒரு தேவநாதன் மாட்டிக்கிட்டான். இன்னும் மாட்டாத தேவநாதனுங்க எத்தனை பேரு இருக்கிறானுங்களோ"ன்னு சொல்றாங்க.
இப்படிச் சொல்லும்போது ஓங்கி அவனை அறையலாம் மாதிரி இருந்ததுங்க. ஆனா.. முடியலைங்க. ஏன்னா.. அந்த தேவநாதன் பண்ணுன படுபயங்கரமான அசிங்கத்தை பார்த்துத் தொலைச்சிட்டேனுங்களே...
Monday, November 30, 2009
Thursday, November 19, 2009
விவசாயிகளே...விழித்துக் கொண்டால்தான் விடிவு
கரும்பு விலை குறிச்சு ஒரு சட்டத்தை மத்திய அரசாங்கம் போட்டிருக்குங்க. இதை எதித்து ஆர்ப்பாட்டம் பண்ணுறாங்க விவசாயிங்க எல்லாம். சரி... உங்ககிட்ட ஒரு கேள்விங்க. இந்த சட்டத்தை கொண்டு வந்த கட்சிக்காரங்களில விவசாயிங்க இல்லையா...?
விவசாயிகள் ஒன்ன நல்லா புரிஞ்சுக்கணுமுங்க. இந்தியாவில 80 சதிவிகிதம் பேரு விவசாயிங்க. அவுங்க நெனைச்சா ஒரே நாளில அரசாங்கத்தை ஆட்டம் காண வச்சுடலாமுங்க. ஆனா, அதை அவங்களால செய்ய முடியாதுங்க.
ஒரு கிராமத்தில் 1000 பேரு வசிக்கிறாங்கன்னு வச்சுக்கிட்டா 900 பேரு விவசாயித்தான் இருப்பாங்க. இவங்கள்ல ஒரு பகுதி திமுக. ஒரு பகுதி அதிமுக. இப்படி கட்சிக்கு சில பேரா இருப்பாங்க.
திமுக ஆட்சியில விவசாயிகள் பாதிக்கப்பட்டா அதிமுககாரங்க போராட்டம் நடத்துவாங்க. திமுக கூட்டணிக்காரங்க குண்டியப் பொத்திக்கிட்டு குத்துக்கல்லாட்டம் இருப்பாங்க.
அதே மாதிரி அதிமுக ஆட்சி காலத்தில ஒரு பிரச்சினையின்னா திமுககாரங்க காட்டுக்கத்தா கத்துவாங்க. அதிமுககாரங்க அம்மா பஜனை பாடிக்கிட்டு ஏதோ பாகிஸ்தானில நடக்கிற பிரச்சினை மாதிரி பாத்தும் பாக்காம இருப்பாங்க.
முன்பு ஜாதி இவங்களை கூறு போட்டு கூழுக் கிண்டிக்கிட்டு இருந்ததுங்க. இப்ப கட்சி கூறுபோட்டு கஞ்சி காச்சிக்கிட்டு இருக்குதுங்க. ஜாதிக்கும் கட்சிக்கும் பேருதாங்க வித்தியாசம். மத்தபடி எல்லாம் ஒன்னுதாங்க. முன்பு தேவர், கவுண்டர், நாயக்கர்ன்னு அடிச்சுக்குவாங்க. இப்ப திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட்டுன்னு அடிச்சுக்கிறாங்க.
இப்படி இருந்தாத்தான் அரசியல்வாதிகள் அஜால் குஜால் வேலைகளைச் செய்ய முடியும். ஆனா, இந்த முட்டா ஜனங்களுக்கு கண்ணுக்கு முன்னாடி இருக்கிற இந்த உண்மை ஏனோ மண்டையில உறைக்க மாட்டேங்குதுங்க.
நம்ம அரசியல்வாதிங்க இந்தியாவில இருந்து சட்டம் போடுறமாதிரி தெரியலைங்க. ஏதோ இங்கிலாந்திலையோ அமெரிக்காவிலையோ இருந்து சட்டம் போடுற மாதிரி இருக்குதுங்க.
கரும்பு போட்டு விவசாயம் பண்ணுற அரசியல்வாதி இருக்காங்களா... நெல் சாகுபடி செய்யிற அரசியல்வாதி இருக்காங்களா... இருப்பாங்க.. அவங்களுக்கு சத்தமில்லா எல்லா வசதியும் வீட்டு வாசல்ல வந்து கையைக் கட்டிக்கிட்டு நிக்கும்.
ஆனா... விவசாயிகளுக்கு.... ஜாதியும் கட்சியும் தான் ஏழை மக்களை ஏழையாகவே வச்சிருக்கு. ஆனா, ஜாதியை விட கட்சி கொடுமையானதுன்னு எப்ப விவசாயிங்களுக்கு புரியுதோ... அப்பத்தாங்க அவங்களுக்கு விடிவு. அதுவரை ஊருக்கு சோறு போடுற ராஜா, ஒத்த ரூபா நாணயத்துக்கு பிச்சை எடுத்த கதைதாங்க.

Wednesday, November 18, 2009
கலைஞரைக் குறை சொல்வது சரியா...?
சமீபத்தில் பெய்த மழை தமிழகத்தை புரட்டுப் போட்டு இருக்குதுங்க. மலைகளில் அழகி என வர்ணிக்கப்படுகின்ற நீலகிரி... வில்லனிடம் மாட்டிய கதாநாயகியைப் போல கசங்கிப் போய் கிடக்கிதுங்க.
அங்கு இருக்கின்ற மக்கள் சாப்பாட்டுக்கு என்ன செய்றதுன்னு தெரியாம தவிச்சுக்கிட்டு இருக்காங்க. சீரமைப்பு பணிகள் செய்யிறதுக்கும் கஷ்டமான நிலைதாங்க.
இந்த நேரத்தில மக்களுக்கு சேவை செய்யவே மண்ணில பொறப்பெடுத்து வந்திருக்கமுன்னு மார் தட்டுற அரசியல்வாதிகள் என்ன செய்யணும். அந்த இடத்துக்கு போயி முடிஞ்சவரை உதவி செய்யணுமுங்க.
அதை விட்டுப்புட்டு யாரையாவது வம்புக்கிழுத்துக்கிட்டு இருக்கிறது எந்த வகையில நியாயமுங்க. கலைஞர் கருணாநிதி நீலகிரிக்கு வரலைன்னு அதிமுககாரங்க போராட்டம் நடத்துறாங்க. அந்தக் கட்சிக்காரங்களையே கேட்கிறேன் இது சரியாங்க.
தவிக்கிறது நம்ம ஜனங்க. இதில நீ...நான்...ன்னு போட்டி போடுறது நல்லாவா இருக்கு. கலைஞருடைய உடல் நிலையை நினைச்சுப் பாருங்க. சக்கர நாற்காலியிலதான் நகர்ந்துக்கிட்டு இருக்கிறாரு. அதோடு குளிரான நேரத்தில மலைப்பிரதேசங்களுக்கு போறது பாதிப்பை ஏற்படுத்துமுன்னு எல்லாருக்கும் தெரியுமுங்க. இப்படிப்பட்ட முதல்வர் தேவையான்னு குதர்க்கமா விவாதம் பண்ணினா.... பண்பாட்டுக்கு பேர் போன தமிழன்னு சொல்லிக்கிறதில அர்த்தம் இல்லைங்க.
மக்களோடு ஆதரவைப் பெறனுமுன்னா.. களத்தில இறங்கி காரியத்தைப் பாருங்க. அதை விட்டு விட்டு குறை மட்டும் சொல்லிக்கிட்டு இருந்தா மக்கள் குறைவாத்தாங்க ஆதரிப்பாங்க. வெறும் அறிக்கை மட்டுமே மக்களூக்கு திருப்தியைத்தருமுன்னு கணக்குப் போட்டா விடை தப்பாத்தாங்க வருமுங்க.

Tuesday, November 3, 2009
சரத்குமார் அண்ணாச்சி... சமக என்னாச்சு
அணி மாறுவதில அணிலை விட வேகமாத் தாவுறதில கில்லாடி நம்ம சரத்குமார் அண்ணாச்சிங்க. நான் சொல்றது அரசியலில மட்டும்தாங்க. நீங்க பாட்டுக்கு ஏடாகூடமா கற்பனை பண்ணி என்னைச் சிக்கல்ல மாட்டி விட்டுடாதீங்க.
நாட்டாமை படம் வேட்டாமையா மாறி வசூலை வாரிக் குவிச்ச உடனே இவருக்கு அரசியல் ஆசை வந்துச்சுங்க. அந்த நேரத்தில அம்மா ஆட்சி. அதனால அம்மாவுக்கு பக்க பலமா நின்னாருங்க.
அப்புறம் திடீர்ன்னு கலைஞர்மேல காதல் கொந்தளிச்சிருச்சுங்க. உடனே அந்தர் பல்டி அடிச்சு திமுக வந்தாருங்க. இவரை நம்பி கலைஞர் இவருக்கு எம். பி. பதவி கொடுத்தாருங்க.
அந்த நேரத்தில விஜயகாந்த் கட்சி ஆரம்பிச்சு வெளிச்சமா இருந்ததாலே இவருக்கு விலா எலும்பு துடிச்சிருச்சுங்க. உடனே பொசுக்குன்னு ஒரு கட்சியை ஆரம்பிச்சு அடுத்த முதல்வர் நான் தான்னு அல்ஜா குல்ஜா ஆட்டம் போட்டாருங்க.
இடைத்தேர்தல் தேர்தல் வந்துருச்சுங்க. தனிச்சு நின்னு ஓட்டு வாங்கினா அடுத்து பேரம் பேச வசதியா இருக்குமுன்னு கட்சிக்காரரை நிறுத்துனாருங்க. பாவம் யாருமே கண்டுக்கலை. யானையும் யானையும் மோதும்போது இடையில பூனை போயி புல்லாங்குழல் வாசிச்சா அதோகதிங்கிற விஷயம் என்ன காரணத்தினாலோ இவருக்குத் தெரியலைங்க.
இப்ப திமுக பக்கம் பல்லைக் காமிச்சிக்கிட்டு பட்டம் விட ஆரம்பிச்சிருக்காருங்க. கலைஞர் பெருந்தன்மையானவருங்கிற காரணத்தாலே ஏமாத்திட்டு போனவங்களையும் ஏத்துக்குவாருங்க... முதுகில குத்திட்டு போனவங்களையும் சேத்துக்குவாருங்க.
அதுசரி இவரு ஆரம்பிச்ச சமத்துவக் கட்சி என்ன ஆச்சுன்னு கேக்கிறீங்களா... அதை உயிர் மூச்சு உள்ளவரை காப்பாற்றி அமெரிக்க தேர்தலில் போட்டி போட்டு ஒபாமாவை ஓட ஓட விரட்டுவதுதான் சரத்குமாரின் அடுத்த திட்டம்ன்னு சொல்லப்படுதுங்க.
இப்படி மாத்தி மாத்தி மாராப்பை விலக்குறாங்களே இவங்களுக்கு வெட்கமா இருக்காதான்னு கேக்கிறீங்களா... முதலிரவில எப்படி நடந்துக்கிறதுன்னு காலேஜ் கட்டி செயல்முறை விளக்கம் செய்யுற புதுமையான காலத்தில இருக்கும்போது வெட்கமாவது மண்ணாங்கட்டியாவதுன்னு பதிலுக்கு கேட்டா... பண்பாடு கலாச்சாரமுன்னு பேசுற பழைமைவாதிகளான நாம முகத்தை எங்க போயி வச்சுக்கிறதுங்க.

Monday, November 2, 2009
ராசா..ராசாதி ராசா... எங்க ராசா..
என்னை பெத்த ராசா... ஏலம் போட்ட ராசா... சிக்குப்பட்ட ராசா... மொத்துப்பட்ட ராசா...ன்னு கிராமத்தில ஏடாகூடமாகத் திரிகின்ற இளசுகளப் பாத்து பெருசுங்க சொல்லுவாங்க.
இந்தப் பேச்சு இப்ப நம்ம ராசாவுக்கு பொருத்தமா இருக்கும் போல தெரியிது. அதுதாங்க... மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சரா இருக்கிறவரு.
அலைவரிசை ஒதுக்கியதில கைவரிசையக் காட்டிட்டாருன்னு எல்லாப்பக்கம் இருந்தும் இவர் மீது குற்றச்சாட்டுச் குண்டுகள் வீசப்படுதுங்க.
பாரதிய ஜனதா கட்சி பகிரங்கமாகவே ராசாவின் ஊழலைப் பத்தி பேசுதுங்க. கண்ணியில மாட்டிக்கிட்ட கதுவாளி மாதிரி ராசா வெடா வெட்டிக்கிட்டு இருக்கிறாருங்க.
என்னோட பக்கம் எந்தத் தப்பும் இல்லை. பிரதமருக்குத் தெரியாம எதுவும் நடக்கலைன்னு ஈன சுரத்தில இவர் முணங்கிறது எடுபட்ட மாதிரி தெரியலைங்க. சிபிஐ ரெய்டு வேற இவரு சிண்டைப் பிடிச்சு சிக்கெடுக்க ஆரம்பிச்சிருக்குங்க.
கிராமத்தில கொஞ்சம் கோளாறான ரெண்டு பொம்பளைங்களுக்குள்ள சண்டை வந்தா அந்தத் தெருவே நாறி நாத்தெடுத்துப் போகுமுங்க.
"அடி அறிவு கெட்ட சிறுக்கி... புருசன் பொழப்புக்கு போன நேரத்தில அரிப்பெடுத்துப் போயி அடுத்தனுக்கு பாய் விரிச்ச அவுசாரி.. இப்ப நானுந்தான் நல்லதங்காள்ன்னு நடுமனைக்கு வந்துட்டா சீவிச் சிங்காரிச்சு... இதைக் கேட்க நாதியும் இல்லை.. நாலு ஜனமும் இல்லை"ன்னு சும்மா கொசப்பேட்டை ரவுடி மாதிரி கொசுவத்தைச் சொருகிக்கிட்டு நிப்பாங்க... ஒருத்தி.
இன்னொருத்தி நல்லவளா இருந்தா என்ன சொல்லியிருக்கணும்.
"அடியே.. நாலும் கெட்ட நாதாரி... கட்டுன புருசன் கண்ணுக்குள்ள வச்சுக் காப்பாத்தும்போது... கண்ட பயலுக்கு நான் ஏண்டி கதவைத் திறக்கப்போறேன்... என்னோட வாய் சுத்தம்.. கை சுத்தம்.. மடி சுத்தம்.."ன்னு பேசுனவ வாயை பேஸ்ட் போட்டு ஒட்டணும்.
ஆனா இவ என்ன சொல்றா தெரியுமா... "அடி மூனும் கெட்ட மூதேவி.. என்னையப் பாத்தா அவுசாரின்னு சொல்றே... உன்னோடு கதைதான் ஊரு சிரிச்சுப் ஊழ நாத்தம் அடிக்குதே...மூனாவது வீட்டு முத்துக் கருப்பனோடு முந்தா நாளு முக்காடு போட்டுக்கிட்டு முந்திரிக்காட்டுக்குள்ள போனது எனக்குத் தெரியாதா.. அங்க நீங்க முக்குனதும் முனகுனதும் மூனு ஊருக்கு கேட்டுச்சே...இதை மறந்துட்டு வாயைக் காதுவரைக்கு நீட்டி வக்கணையா பேச வந்துட்டா...வழக்கங்கெட்ட வசைகாரி"ன்னு எசைப் பாட்டுப் பாடுனா என்ன அர்த்தமுங்க. மூக்கரையும் மூக்கரையும் மல்லுக்கட்டுறான்னுதானே அர்த்தம்.
இப்படித்தான் இருக்குங்க நம்ம ராசா நடத்தும் லாவணிக் கச்சேரி.
எதிர்க்கட்சிக்காரங்க குற்றம் சொன்னா.... "நான் அப்படிச் செய்யலை"ன்னு ஆதாரத்தோட பதில் சொல்லணுமுங்க. இல்லாட்டி "பிரதமருக்குத் தெரியாம நான் ஒன்னுமே செய்யலை"ன்னு அந்தப்பக்கம் கையைக் காட்டிட்டு ஹாயா... கொடைக்கானல்ல உட்காந்து கொட்டாவி விட்டுக்கிட்டு இருக்கணுங்க.
(ஏன்னா.. கோமணத்துக்கு வழியில்லாத ஏழைச் சனங்க கோடி கோடியா கொட்டிக்கொடுக்கிற வரிப்பணம் நீங்க குஜாலா இருக்கிறதுக்குத்தானே பாதி போகுதுங்க. அதையும் அசிங்கப்படாம அனுபவிக்கிற அஞ்சா நெஞ்சு நம்ம நாட்டு அரசியல்வாதிகளுக்கு மட்டும்தானே இருக்குதுங்க)
அதை விட்டுப் புட்டு " அலைவரிசை ஒதுக்கீட்டுல 20000 ஆயிரம் கோடிக்கு மேலே ஊழல் செஞ்சேன்னு சொல்றீங்களே...உங்க ஆட்சியில ஒரு லட்சம் கோடிக்கு மேலே நீங்க ஊழல் செஞ்சது எனக்குத் தெரியாதா"ன்னு பாரதிய ஜனதாவைப் பார்த்து அனுபல்லவி பாடிக்கிட்டு இருந்தா என்ன அர்த்தமுங்கன்னு என்னோடு காதுக்குள்ள கரண்டுக் கம்பியை விட்டாருங்க ஒரு சமுதாய சிந்தனையாளரு. அதை அப்படியே இங்க எடுத்துச் சொல்லி இருக்கேங்க. இதைப் படிச்சுப்புட்டு கோபத்திலே எனக்கு 'அடி'யாபிஷேகம் பண்ணிராதிங்க.
நீங்க கேட்டுக்கிட்டீங்கன்னா...என்னுகிட்ட சொன்னவர் யாருன்னு சுணக்கமில்லாம விரலை நீட்டிருவேங்க. ஏன்னா.... காட்டிக்கொடுக்கிறதிலதான் நாம மன்னாதி மன்னன்களாச்சுங்களே....

Subscribe to:
Posts (Atom)