Wednesday, June 15, 2011

ஜெயா ஆட்சி... சொன்னது பலித்தது.. சோலையின் வாழ்த்து

ஜெயலலிதா அமர்க்களமாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து விட்டார். டெல்லிக்கும் போய் விட்டார். பிரதமர் மன்மோகன் சிங் பித்துப் பிடித்தவர் போல் அம்மாவை வணங்கி வரவேற்றார். சோனியா காந்தி விட்டால் போதும் என்று இத்தாலிக்கு ஷூட் விட்டிருக்கிறார்.

ஜெயலலிதாவின் வெற்றி தோல்வி பற்றி பலர் சொன்னார்கள். கலைஞர்தான் மீண்டும் ஆட்சியில் அமரப்போகிறார் என்று கலைஞருக்கு கல்கண்டு கொடுத்தவரும் இருக்கிறார்கள்.

அதேபோல்தான் நானும்... தேர்தலுக்கு ஒரு மாதம் பாக்கி இருந்தது. காரைக்குடியில் என்னுடைய நண்பர் சோலையின் செல்வி டிராவல்சில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தேன்.

அவர் வீடு மனை வாங்கி விற்கும் தொழிலில் இப்போது பிரபலமாக விளங்குகிறார். அவருடைய நண்பர் செஞ்சை ராமுவும் அப்போது பக்கத்தில் இருந்தார்.

ராமு பக்கா அதிமுக காரர். காரைக்குடி தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் சோழன் பழனிச்சாமியின் பங்காளி சோலை. எனக்கு ஜோதிடம் பார்க்க வரும் என்பது இரண்டு பேருக்கும் தெரியும்.

"அண்ணே... இந்த தேர்தல் ஒரே குழப்பமாக இருக்கிறது. யார் ஜெயிப்பார்கள் என்று தெரியவில்லை. அம்மாதான் கண்டிப்பாக ஜெயிக்க வேண்டும். அம்மா ஜாதகத்தை கணித்து சொல்லுங்கள்.. நல்ல பதிலாக சொல்லுங்கள்" என்று கெஞ்சினார்.

"இதில் கெஞ்சுவதற்கு என்ன இருக்கிறது. விபரீத ராஜ யோகத்தின் ஏக போக சக்கரவர்த்தினியாக இருக்கும் ஜெயலலிதாவுக்கு ஜெயம்தான். ஏழரைச் சனி அவரை கவிழ்க்க போகிறது என்று சிலர் சொல்கிறார்கள். 2006-இல் கெடுத்த அதே சனிதான் இப்போது கொடுக்கப் போகிறான். ஆகவே ஆட்சி அமைப்பது அதிமுகதான்" என்று சொன்னேன்.

"இழுபறியாக இருக்கும் என்று சொல்கிறார்களே" அவருடைய குரலில் ஆதங்கமும் வேதனையும் ஓங்கி ஒலித்தது.

"கருத்துக் கணிப்பு பற்றி எனக்கு தெரியாது. ஆனால் ஜெயலலிதா 135 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவார். விஜயகாந்த் 15 இடங்களுக்கு மேல் பிடிப்பார். இது கண்டிப்பாக நடக்கும். நான் சொல்லவில்லை. ஜெயலலிதாவின் ஜாதக பலனும் அவரின் பூர்வ ஜென்ம பலனும் இதைக் கூறுகிறது" என்றேன்.

ராமுவின் முகத்திலும் சோலையின் முகத்திலும் ஆயிரம் வாட்ஸ் பிரகாசம் தெரிந்தது.

மே 13-ஆம் நாள்... என்னுடைய அண்ணன் மகனுக்கு பெண் பார்த்து நிச்சியம் பண்ணுவதற்காக திண்டுக்கல்லுக்கு போய்கொண்டிருந்தேன். சுமார் 40 பேருக்கு மேல் சென்றதால் ஒரு பஸ் பிடித்து போனோம்.

காலை சுமார் பதினோரு மணி இருக்கும். என்னுடைய போன் செல்லமாக சிணுங்கியது. எடுத்து காதில் வைத்தேன். சோலைதான் மறுபக்கத்தில் இருந்தார்.

"தலைவா தாங்கள் சொன்னதுபோல் அம்மா வெற்றிகளை அள்ளிக் குவித்துக் கொண்டிருக்கிறார்" என்றார்.

கைத்தொலைபேசியை எல்லாரும் கேட்பது போல் வைத்திருந்தேன். அனைவர் முகத்திலும் ஆச்சரியம். என் மனதுக்குள் மகிழ்ச்சி மத்தாப்பு. இந்திய கிரிக்கெட் அணி வெற்றி கோப்பையை தட்டிச் சென்ற ஆனந்தத்தில் ஆழ்த்தியது நண்பர் சோலையின் அந்த ஒற்றைச் சொல்.

பாவத்தை செய்த கனி... பாசத்தில் துடிக்கும் கலை...

செய்த பாவம் தீருதடா சிவகுரு நாதா.. இந்தப் பாடல் இப்ப கலைஞர் கருணாநிதிக்கு பொருத்தமான இருக்கும்கிறதில சந்தேகம் ஏதாச்சும் உண்டாங்க..

கோடி கோடியா.. பணத்தை திருட ஓடி ஓடி உழைச்சிங்களே.. அதனோட பலன் என்ன... திகார் ஜெயிலுக்குள்ள கனிமொழி களி தின்னுக்கிட்டு இருக்க வேண்டிய கட்டாயம் வந்துடுச்சிங்களே..

பெத்த மக ஜெயிலுக்குள்ள... பெத்த வயிறு நெருப்புக்குள்ள... கலங்கிப் போயிருக்கும் கலைஞருக்கு ஆறுதல் சொல்ல ஆள் இல்லாம தவிக்கிறாருங்க.

ஆனா ஒன்னு மட்டும் புரியலைங்க. ராசாவையும் கனிமொழியையும் இணைத்து பத்திரிகையில வாங்கு வாங்குன்னு வாங்குறாங்க. பொதுமக்கள் அந்த பொல்லாத உறவைப் பத்தி பொருமுறாங்க.

ஆனா.. பெத்தா ஆத்தாளோ... பெத்ததுக்கு காரணமா இருந்த அப்பனோ கவலைப்படாததுக்கு காரணம் என்னங்க. எல்லாம் பணம் தாங்க. அதுக்கா கொள்கைக்கு கொள்ளி வைச்சதாலே இப்ப சந்தி சிரிச்சி கலைஞர் சாக்கடையில குளிக்க வேண்டிய கட்டாயம் வந்திடுச்சிங்க.

பெத்த பாசம் பிள்ளை பண்ணுன தப்பை மறைக்குதுன்னு சொல்றாங்க. தப்பை பண்ணச் சொன்னதே தலைவர் தான்னு திமுக தொண்டர்களே தெம்மாங்கு பாடுறதை கேட்க முடியுதுங்களே..

வெற்றி தோல்வி அரசியலில சகஜமுன்னு ஐயாவுக்கு ஆறுதல் சொல்றாங்களாம். ஆனா. இந்த தோல்வி சகஜம் இல்லங்க. கலைஞரின் புத்திசாலித்தனத்துக்கு...சாணக்கியத்தனத்துக்கு.. புகழுக்கு அடிச்ச் சாவு மணிங்க..

பெரிய கட்சியில் தலைவரு.. அஞ்சு தடவை முதலமைச்சரா இருந்தவரு... சோனியா காந்திக்கு எனிமா கொடுத்தவரு... இப்ப ஜெயிலுக்கு போன மகளை திரும்ப கொண்டு வரமுடியாம திக்கி திணறிக்கிட்டு இருக்கிறது சாதாரண விஷயம் இல்லைங்க.

ஆனா.. திமுகவோட பலம் என்ன தெரியுமுங்களா.. இந்த அசிங்கத்துக்கும் முப்பெரும் விழா எடுத்து முட்டுச் சந்துக்கு முட்டுச் சந்து திமுக உடன்பிறப்புக்கள் பாராட்டுக் கூட்டம் போடுவாங்க...

இப்படி இருக்கும்போது கொள்கைக்கா ஜெயிலுக்கு போறதும்.. கொள்ளைக்காக ஜெயிலுக்கு போறதும் ஒன்னுதானுங்களே....