நேத்து ராத்திரி சன் நியூஸ் செய்தி அலைவரிசையில ஒரு விவாதமுங்க. தமிழர்களுடைய பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு தேவையா... இல்லையா.... இதுதான் கரு.
மொத்தம் நாலு பேரு பேசுனாங்க. அதுல ஒருத்தரு பேரு தெரியலைங்க. சொட்டைத்தலை. ரொம்ப தெனாவட்டா உக்காந்திருந்தாரு.
உதட்டுக்கு மேலே முடி இல்லைங்க. ஆனா, அடிக்கடி முறுக்கி விட்டுக்கிட்டு இருந்தாருங்க. எறும்பு ஏற முடியாத இளநீர் தலைங்க. என்ன விளங்கலையா.. அதுதாங்க வழுக்கைத் தலை.
வயசுல பெரியவரு ஒருத்தர். அனுபவத்தில சிறந்தவர் ஒருத்தர். பாரம்பரியத்தை அறிந்தவர் ஒருத்தர்.
ஆனா, இவரு மட்டும் சந்திர மண்டலத்தில இருந்து எந்திரிச்சு வந்தவரு மாதிரி காலை பப்பரப்பான்னு நீட்டிக்கிட்டு இருந்தாருங்க.

நல்ல வேளை... எதுக்க இருந்தவருக்கும் இவருக்கும் இடைவெளி கொஞ்சம் அதிகமுங்க. இல்லையின்னா.. காலு... அவரு தோளு மேல தொங்கலாட்டாம் போட்டு இருக்குமுங்க.
மாடு வளக்கிறதுல இருக்கிற அருமை பெருமைகளை ஒருத்தரு சொன்னாருங்க. ஆனா, அதைக் கிண்டலடிச்சு பேசி ஒட்டு மொத்த தமிழர்களின் மானத்தையும் வண்டியில ஏத்தி தொண்டிக்கு அனுப்பி வச்சுருச்சுங்க அந்த வரலாறு தெரியாத வரட்டுத் தவளையின் நாக்கு நாட்டியம்.
காளை மாடு வளக்கிறது உலகத்துக்கே வீரத்தை வெளிச்சம் போட்டுக்காட்டிய தமிழினத்து இளங் காளைகளின் தனிச்சிறப்புன்னு சொன்னா..
சிங்கத்தை வளக்க வேண்டியது தானேன்னு அசிங்கமா பேசி இமயத்தில கொடி நட்ட தமிழனின் இதயத்தில எருக்கம் பால ஊத்தீட்டாருங்க.
ஜல்லிக்கட்டை நடத்துறதுக்கு அரசாங்கம் அனுமதி கொடுக்குதா இல்லையாங்கிறது வேறு விஷயமுங்க. ஆனா.. அதுக்கு ஆதரவா பேசுறோமுன்னு தமிழங்க மூஞ்சியில அந்த ஆளு கழுவிக் கழுவி ஊத்தினது என்னோட நெஞ்சுக்குள்ள நஞ்சா நிக்கிதுங்க.
அந்த ஆளு உழைச்சு சம்பாதித்தவரு மாதிரி தெரியலைங்க. அப்பன் சொத்தில ஆப்பம் சுட்டுக்கிட்டு திரியிற அலப்பறைக் கேசு மாதிரி இருக்குதுங்க.
சொட்டைத் தலை... அப்பிடி இப்பிடின்னு நான் சொன்னதெல்லாம் அவரை அடையாளப்படுத்தத்தான்... அசிங்கப்படுத்த இல்லைங்க. தமிழனின் வீரத்தையே கிள்ளி ஓரத்தில எறிஞ்ச அவருக்கு இது ஒன்னும் பெரிய பிரச்சினை இல்லைங்க.
இந்த விவாதத்தை எத்தனை பேரு பாத்தாங்கன்னு தெரியலைங்க. பாத்ததில எத்தனை பேருக்கு அறிவுப்பூர்வமான உணர்ச்சிக் கொந்தளிப்பு உருவாச்சுன்னு தெரியாதுங்க.
ஆனா, கடல் கடந்து நாவாய் நடத்தி பல நாடுகளை ஜெயிச்சு நம்ம நாகரிகத்தை பதியம் போட்டுட்டு வந்த வீரம் சுமந்த பரம்பரையை சோரம் போன சொல்லாடல் மந்தி ஈரம் இல்லாம நக்கலடிச்சது இதயச்சுவருல ஆணி வச்சு அடிச்சமாதிரி வலிக்குதுங்க.
இதை படிச்சுப் பாத்து துடிக்கிற பாரம்பரியத் தமிழர்களுக்கு ஒன்னு சொல்றேங்க. மலேசியாவில கெடான்னு ஒரு மாநிலம். அங்க இருக்குங்க நம்ம வீரத்தின் எச்சம். தமிழனோட மானத்தின் மிச்சம்.
அதுதாங்க... பெருவுடையத்தேவர் ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழன் கட்டிய கோட்டை. அந்த இடத்தோட ஆரம்ப காலப் பெயர் கடாரம்.
அதனாலதாங்க... அவருக்கு கங்கை கொண்டான்... கடாரம் வென்றான் அப்படிங்கிற பட்டப் பெயர்.
ஜல்லிக்கட்டைப் பத்தி கொள்ளிக்கட்டை வார்த்தைகளைக் கொட்டியது கூட பரவாயில்லைங்க.. உலகத்தின் மூத்த மொழிகள் ஆறுங்க. அதில அழியா இருக்கிறது இரண்டுங்க.
அதுல கலை.. இலக்கியம்...ஆன்மீகம்... அறிவியல்... அரசியல்.. மருத்துவம் என எண்ணெற்ற அதிசயங்களை இன்னைக்கும் இளமையாகவும் வளமையாகவும் வச்சிருக்கிறது நம்ம தமிழ்தாங்க.
அந்தத் தமிழுக்கு சொந்தக்காரங்களை எள்ளி நகையாடிய அந்தப் பல்லி, நம்மளை மண்டையில மொளைச்சிருக்கிற கொண்டையா நெனைச்சுப் பேசுனதுதாங்க இன்னும் ஆற மாட்டேங்குது.
இந்த வலி நியாமுன்னு நினைக்கிற தமிழ் நெஞ்சங்கள்.. அறிமுகமில்லைன்னாலும் அங்கிருந்தே அன்புக் கரங்களை நீட்டி... நேச விரல்களால் நீவி விடுங்க.
அட போப்பா... எத்தனை ஆப்பு வச்சாலும் நாங்க வலிக்காத மாதிரி இருப்போமுன்னு நினைக்கிறவங்க... இந்த ஏழைத் தமிழனை மன்னிச்சு விட்ருங்க.