Friday, August 13, 2010

டெல்லி பாக்டீரியா - அமெரிக்காவின் பம்மாத்த்து வேலை

இந்தியாவில் எப்போதும் பரபரப்பான செய்திகளுக்கு பஞ்சமிருக்காது. இப்போது புது விதமான பாக்டீரியா இந்தியாவை மட்டுமல்ல உலக நாடுகளையும் பதற வைத்து இருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.





இதற்கு பெயர் New Delhi metallo - beta - lactamase - 1 என்று பெயராம். இது ஒரு வகை ஜீன் மூலமாக உருவாகி பாக்டீரியாக்களை உற்பத்தி பன்ணுகிறதாம். இது ஒரு அடங்காப்பிடாரி பாக்டீரியாவாம். செல்லம் சீரியலில் வரும் ரவுடி மனைவியைப் போல எந்த மருத்துக்கும் இது மசியாதாம். கட்டுப்படாதாம்.

இந்த பாக்டீரியாவால் பாதிக்கப்பட்டவர்கள் அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் அடையாளம் காணப்பட்டிருக்கிறார்களாம். இது இந்தியாவில் இருந்தான் இங்கு இறக்குமதியாகி இருக்கிறது என்பது இந்த நாட்டு மருத்துவர்களின் வாதம். அது எப்படி இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும்.... இதற்கு இந்த மருத்துவர்கள் சொல்லும் காரணம் விசித்திரமாக இருக்கிறது.

இந்தியா கணினித்துறையில் அமெரிக்காவுக்கே அல்வா கொடுத்த நாடு. மருத்துவத்திலும் மகத்தான சாதனை படைத்து வருகிறது. இந்தியாவில் மருத்துவச் செலவு மிக மிகக் குறைவு. அமெரிக்காவில் சாதாரண காய்ச்சலுக்கு ஆகும் செலவை வைத்து இந்தியாவில் கண் அறுவைச் சிகிச்சையையே செய்து விடலாம். அதனால் இப்போது மேற்கத்திய நாடுகளில் இருந்து ஏராளமான நோயாளிகள் இந்தியாவுக்கு படை எடுக்கிறார்கள். நோய்க்கான சிகிச்சையைப் பெற்று விட்டு புண்ணியத்தலங்களில் நீராடி பாவத்தைக் கழுவி சொந்த நாட்டுக்கு நடையைக் கட்டுகிறார்கள்.

இப்படி மருத்துவத்துக்காக வந்தவர்களின் மூலமாகத்தான் மேற்கத்திய நாடுகளில் இந்த பாக்டீரியாக்கள் ஊடுருவி இருக்கின்றன என சொன்னதோடு நிற்காமல்... இதுக்கு இந்தியத் தலைநகர் டெல்லியின் பெயரைச் சூட்டி..அதற்கென  விழாவும் எடுத்து விட்டார்கள். இந்த பாக்டீரியா உலகத்தின் எந்த மூலையில் இருந்து வேண்டுமானாலும் பரவி இருக்கலாம் என்று நிலை உள்ளபோது ஏன்... இந்தியாவை மட்டும் குறிவைத்து தாக்கி இருக்கிறது அமெரிக்கா.. இது மண்டையைப் பிறாண்டும் கேள்விதான்.

இந்தியா உலகத்திலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு என அமெரிக்கா புகழாரம் சூட்டும். இந்தியாவின் பண்பாடும் நாகரிகமும் உலகத்துக்கே வழிகாட்டி என பாராட்டு பத்திரம் வாசிக்கும். ஆனால், ஐ. நா. பாதுகாப்பு சபையில் இடம் கேட்டால் மட்டும் அமெரிக்காவின் காது செவிடாகி விடும். இப்படி இந்தியாவின் தோளில் அமர்ந்து காதைக் கடிக்கும் வேலையை பல ஆண்டுகாலமாகவே அமெரிக்கா செய்து வருகிறது.

இந்தியாவின் இயற்கை வளம் எப்போதுமே அமெரிக்காவுக்கு அலர்ஜி. அதோடு இந்திய மக்களின் தாக்குப் பிடிக்கும் சக்தி அமெரிக்காவின் அடிவயிற்றில் எரியும் நெருப்பு. பொருளாதாரத் தடை விதித்தால் அது இந்திய மக்களுக்கு புடலங்காய்த் தடை மாதிரிதான். அதனால் எந்த வகையிலாவது இந்தியாவைக் காலி பண்ண வேண்டும் என்பது அமெரிக்காவின் ஆசை.

பல ஆண்டுகளுக்கு முன்னால்... இந்தியாவில் வளரும் நாட்டுக் கருவை மரங்களுக்கு இணையாக சீமை (மேற்கத்திய நாடு) கருவை என்ற முள்செடி இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டது. இந்தியாவில் வாழும் ஏழை மக்களுக்கு இது விறகாகப் பயன்படும் எந்த வறட்சியையும் தாக்குப் பிடிக்கக்கூடிய சக்தி கொண்டது என அறிமுகப்படுத்தப்பட்டது.

அது உண்மைதான். யாராவது அசந்து தூங்கினால் அவர்களின் அடிவயிற்றில் முளைத்து மேல் வயிற்றில் செடியாக வளரக்கூடிய அபார ஆற்றல் கொண்டது இந்த சீமைக்கருவை. தண்ணீர் என்றால் இதற்கு பகை. அழுகி செத்து விடும். வெய்யில் என்றால் கேரளப் பெண்களைப் போல கிளுகிளுப்பாக வளரும். இது நிலத்தடி இந்தியாவின் நீரை உறிஞ்சியது மட்டுமல்ல... விளை நிலங்களையெல்லாம் பாழாக்கி விட்டது. எப்படி பிடுங்கி எறிந்தாலும் இரண்டே நாட்களில் முளைத்து நிற்கும் அசகாய சூரன் இது. இதனால் தமிழ்நாட்டின் பெரும்பகுதி பாலைவனமாகி விட்டது.

அடுத்ததாக பசுமைப்புரட்சி என்ற பெயரில் அமெரிக்கா மலட்டு விதைகளை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்தது. இதன் மூலம் நெல்லை அபிரிமிதமாக விளைய வைக்க முடியும். ஆனால், அதை விதை நெல்லாக பயன் படுத்த முடியாது. ஒவ்வோர் ஆண்டும் அமெரிக்காவிடம் இந்தியாவைக் கையேந்த வைக்கும் உத்தி இது. இதனால், வலு வித்து என்று சொல்லக்கூடிய ஊட்டச் சத்து கொண்டு கார் நெல் மறைந்து குறுகிய கால வித்துக்கள் என்று சொல்லக்கூடிய புது ரக நெல் சாகுபடி செய்யப்பட்டது. இது பசியை போக்க உதவுமே தவிர ஆளை பலவீனப்படுத்தி விடும்.

அடுத்ததாக அமெரிக்காவின் பார்வை இந்திய பண்பாட்டின்மீது திரும்பியது. கட்டுக்குலையாத அதன் பாரம்பரியம் அமெரிக்காவின் கண்களை உறுத்தியது. விளைவு அழகிப் போட்டியில் இந்திய அழகிகள் உச்சத்தை தொட்டனர். பட்டமும் பெற்றனர். அதன் தாக்கத்தால் அமெரிக்காவின் அழகு சாதனப் பொருட்கள் இந்தியாவின் சின்னக் கிராமத்தைக் கூட விட்டு வைக்காமல் சீரழிக்கத் தொடங்கியது.

அணு ஆயுதத் துறையில் இந்தியா அடைந்து வரும் வளர்ச்சி அமெரிக்காவின் அடிவயிற்றில் இன்றும் அனல் மூட்டிக் கொண்டிருக்கிறது. பொக்ரான் அணுகுண்டு வெடிப்பைக் காரணம் காட்டி பொருளாதாரத் தடையை விதித்தது. அணு மூலப்பொருட்கள் கிடைக்காவண்ணம் கிடுக்கிப் பிடி போட்டது. ஆனால், இந்தியா இதற்கெல்லாம் கவலைப்படவில்லை. பொருளாதாரத் தடையாவது புண்ணாக்காவது என அது பாட்டுக்கு அணு ஆராய்ச்சியில் வெற்றி நடை போட்டது. நிலவுக்கு ஏவுகணையை அனுப்பி செயற்கைக் கோளை நிலை நிறுத்தியது.

கணினி புரட்சியில் கண்ணைக் கட்டும் வளர்ச்சி அடைந்த அமெரிக்காவின் சிலிக்கான் வேலியையே சில்லு சில்லாக்கினார்கள் இந்தியாவின் கணினி வல்லுனர்கள். கணினி மென்பொருள் தயாரிப்பில் அமெரிக்காவுக்கே கண்ணாமூச்சி காட்டினார்கள் இருபது வயது நிரம்பாத இந்திய மாணவர்கள். அதிர்ச்சி அடைந்த அமெரிக்கா அதைத் தடுக்க நினைத்தது. முடியவில்லை. சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுவது எவ்வளவோ மேல் என கணினி வல்லுனர்களை பணம் என்ற வலையை வீசி அமெரிக்காவுக்கு  இழுத்துக் கொண்டது.

இப்போது அமெரிக்கா அச்சப்படும் ஒரு விஷயம்... இந்தியாவின் மருத்துவ வளர்ச்சி... எப்போதுமே அமெரிக்காவுக்கு ஒரு ஆசை உண்டு. கல்யாண வீட்டுக்கு போனால் மாப்பிள்ளையாக இருக்க வேண்டும். சாவு வீட்டுக்கு போனால் பிணமாக கிடக்க வேண்டும் என்பதுதான் அது. இந்த ஆசையில் இந்தியா மண்ணை அள்ளிப் போட்டு விடுமோ என்ற அச்சம் அமெரிக்காவின் கிட்னியைக் கிள்ளிப் பார்க்க ஆரம்பித்தது.

மருத்துவத்துறையில் இந்தியா அடைந்து வரும் அபாரமான வளர்ச்சி... அமெரிக்காவின் மானத்துக்கு மட்டுமல்ல... வருமானத்துக்கும் வேட்டு வைப்பதாக இருக்கிறது. கடுமையான நோய் என்றால் அமெரிக்க மருத்துவத்தை குறி வைத்த உலக நாடுகள்.... இப்போது இந்தியாவுக்கு இறக்கை விரித்திருக்கின்றன. இதற்கு காரணம் விலை மலிவு.. தரம் அதிகம் என்பதுதான்.. இதை ஏற்றுக் கொள்ள முடியாத அமெரிக்கா பாக்டீரியா என்ற பம்மாத்து வேலையை பரப்பி விட்டுக் கொண்டிருக்கிறது.

உலகம் அடைந்து வரும் அபாரமான வளர்ச்சி... நாளுக்கு நாள் மாறிவரும் உணவுப் பழக்கம்... இருக்கின்ற இன்பங்களையெல்லாம் இப்போதே அனுபவித்து விட வேண்டும் என்ற வேட்கை.. இப்படி நோய்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் பழக்கம் எல்லா நாட்டு மக்களிடமும் ஏற்றதாழ்வு இல்லாமல் தலைவிரித்து ஆடும்போது ஒரு நாட்டில் இருந்துதான் பாக்டீரியாக்கள் பரவுகிறது என பிரச்சாரம் செய்வது என்பது "அடுத்த வீட்டுக்காரி ஆண் பிள்ளை பெற்று விட்டால் என்பதற்காக பக்கத்து வீட்டுக்காரி அடி வயிற்றில் அடித்துக் கொண்ட கதை"யாகத்தான் இருக்கும்.

இந்த முயற்சியிலும் அமெரிக்காவுக்கு தோல்வி கிடைத்தால் அதற்காக அந்த நாடு வெட்கப்படாது.... வேதனைப்படாது....அடுத்த அஸ்திரத்தை எடுத்து குறி பார்க்க தொடங்கி விடும் என்பது மட்டும் காலம் நமக்கு உணர்த்தும் உண்மை.

Friday, May 14, 2010

வருங்கால ஜனாதிபதி நமீதா வாழ்க

விமான நிலையத்துக்கு வந்த நமீதாவுக்கு வீரவரவேற்புக் கொடுத்தாங்களாமே நம்ம பாதுகாப்பு வீரர்கள். அடடா.... இனி அவங்க காசிக்கு போக வேண்டியதில்லை. கங்கையில மூழ்க வேண்டியதில்லை. நேரடியாகவே
சொர்க்கம்தாங்க.



இதுக்கு பொதுமக்கள் ரொம்ப ஆவேசப்பட்டாங்களாம். எதுக்கங்க இந்த ஆவேசம். நமீதா யாருங்க. நாட்டுக்கும் வீட்டுக்கும் சாதனை மேல சாதனை பண்ணி பெருமைப்பட வச்சவங்க. அவங்களுக்கு மரியாதை கொடுக்கலைன்னா நம்ம பாதுகாப்பு வீரர்களான பரதேசிகளுக்கு மண்டை வெடிச்சு போகாதுங்களா..

நமீதா நடந்து வர்ற அழகைப் பாருங்க.. இத்துனியூண்டு ஜாக்கட்ல சும்மா தேங்காய் ரெண்டும் தெம்மாங்கு பாட தொடைக்கும் தொப்புளுக்கும் மறைப்புக் கொடுக்காம எழுபது கிலோ ஐஸ்கிரீம் எழுந்திரிச்சு  வந்தா பாதுகாப்பு வீரனுங்களுக்கு மேலையும் கீழையும் சொள்ளு வடியாதா.. பிரச்சினை என்னன்னா... அந்த அம்மாவுக்கு பிறந்த மேனியா நடக்குறதுக்குத்தான் பிடிக்குமாம். ஆனா... போக்கத்த போலீசுக்காரனுங்க புடிச்சு கோர்ட்டுல நிக்க வச்சுருவாங்கன்னு பயமாம்.

இப்ப நமீதா வக்கீலு அவருக்கு ஊக்கம் கொடுக்கிறாங்களாம். நீங்க சும்மா பிறந்த மேனியா போங்க. கோர்ட்ல கேசு போட்டா சும்மா கில்லி மாதிரி கிட்டி விளையாடிருவோம். இதிகாசத்தில கோபிங்க எல்லாம் துணி போட்டா குளிச்சாங்க. புராண காலத்தில பொறந்தவங்க புதுச்சட்டை போட்டா வெளிய வந்தாங்கன்னு வாதாடுவோம். நாம கூட வாதாட வேண்டாம். அந்த வேலையை நீதிபதிங்களே இப்ப செய்யுறாங்களே.. தமிழ் பெண்களுக்கு கற்பு இல்லைன்னு சொன்ன குஷ்புக்கு சாதகமாக தீர்ப்பு சொல்லி தமிழ் பண்பாட்டுக்கு தங்கப்பூண் புடிச்சுக் கொடுத்தாங்களே....

இப்படி நீதிபதிகளே தடம் மாறிப்போகும்போது பாதுகாப்பு வீரர்கள் பாதை மாறி நடந்த தப்புக்கங்களா.. அட மானங்கெட்ட தமிழ் ஜனங்களா.. உங்களுக்கு சொரணையே வராதா... தனிவாழ்க்கையிலையும் சரி பொது வாழ்க்கையிலையும் சரி ஒழுக்கம்ன்னா என்னன்னு கேக்குற...உடம்பை காட்டி ஊர்ப்பணத்தை சாப்பிடுகிற இந்த சினிமாக்காரங்களை தெய்வமா மதிக்கிற புத்தி உங்களுக்கு போகவே மாட்டாதா...



ஏதோ விமான நிலையத்தில இருந்தவங்கள்ல கொஞ்ச பேருக்கு தமிழங்கிற பாரம்பரிய புத்தி வந்து கொதிச்சிருக்காங்க. அது எல்லாருக்கும் வரவேணாமா... ஒரு வேளை வரலைன்னு வச்சுக்கங்க. இந்த " கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து முன் தோன்றிய மூத்தகுடி" அப்படிங்கிற கோஷத்தையாவது நிறுத்துங்கப்பா...

Saturday, March 27, 2010

பென்னாகரம் தொகுதி வெற்றி யாருக்கு?

தமிழ் நாட்டில் பென்னாகரம் தொகுதி இடைத்தேர்தல் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பிரயாணம் செய்வதற்கு உடல் நிலை ஒத்து வராத நிலையிலும் கூட தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்று இருக்கிறார் என்றால் இந்தத் தேர்தல் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைப் பார்த்துக் கொள்ளுங்கள்.



இந்த தொகுதியில் பலர் போட்டி போட்டாலும் நான்கு கட்சிகள்தான் பிரதானமானவை. திமுக, அதிமுக, பாமக. தேதிமுதிக. இந்தக் கட்சிகளின் தலைவர்கள் எல்லாருமே தங்களுக்குத்தான் வெற்றி என மார் தட்டுகிறார்கள். இதனிடையே லயோலா கல்லூரி கருத்துக் கணிப்பு திமுக வெற்றி பெறும் என கூறுகிறது.. பாமக தலைவர் மருத்துவர் ராமதாஸ் இதை ஒத்துக்  கொள்ளவில்லை. திமுக எங்களிடம் திக்கு முக்காடப் போகிறது என தந்தையும் மகன் அன்பு மணியும் பீரங்கி பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

இந்த தேர்தலில் அதிமுகதான் வெற்றி பெறப்போகிறது. அடுத்த சில நாட்களில் ஆட்சி மாற்றம் ஏற்படப்போகிறது என பிரச்சாரத்தின் போது ஒரு "காமெடி" வெடிகுண்டை வீசி விட்டு பேசிய அம்மா, களைப்புத் தீர தோழியுடன் ஓய்வெடுக்கப் போய்விட்டார்.



கேப்டன் விஜயகாந்தின் தன்னம்பிக்கைதான் ஆச்சரியப்படும் வகையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. வைப்புத் தொகையை வாங்க முடியாது என்பது தெரிந்தும் சங்கடப்படாமல் பிரச்சாரத்தில் சங்க நாதம் எழுப்பு வருகிறார் என அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

" ஒரு கண்ணோட்டத்தில் பார்த்தால் இந்த காலகட்டத்தில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறுவது போல் தோற்றம் அளிக்கும். அந்த வெற்றி ஜனநாயக முறைப்படி சரி என்றாலும் அது திமுகவுக்கு கிடைத்த வெற்றி என கருத முடியாது.



அதிமுக, பாமக, தேமுதிக போன்ற எதிர்க்கட்சிகளின் விவேகமற்ற நடவடிக்கைகளால் அவர்களாக திமுகவுக்கு தாம்பளத்தில் வைத்து  கொடுத்தவை அந்த வெற்றிகள் எல்லாம்.



திமுக- காங்கிரஸ் கூட்டணிக்கு இடையே சின்னச் சின்ன பிரச்சினைகள் இருந்தாலும் தலைமைத்துவ மட்டத்தில் வலுவாகவே உள்ளது. அதனால் பெரும்பாலும் வாக்குகள் சிதற வழி இல்லை. மேலும் திமுக தலைவர்களின் அணுகு முறையும் துணை முதல்வரின் ஆடம்பரம் இல்லாத நடவடிக்கைகளும் மக்களை ஈர்த்திருக்கிறது.

ஆனால், எதிர் அணியில் அனைத்துக் கட்சிகளும் சிதறிக்கிடக்கின்றன. மேலும் ஒருவரை ஒருவர் வசைபாடிக்கொள்ளவும் தயங்குவதில்லை. மருத்துவர் ராமதாஸ் கூட்டணி மாறுவதில் ஒரு குத்தாட்டமே நடத்தக் கூடியவர். அதனால் அவருடைய பேச்சுக்களை மக்கள் நம்பத் தயாராக இல்லை.  நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் ஈழத் தமிழர்களுக்காக கண்ணீர் வடிக்கும் ஒரே தலைவர் என்ற தோற்றத்தை மக்கள் தொலைக்காட்சி மூலமாக ஏற்படுத்தினார். இப்போது அந்த பேச்சு... காற்றோடு போச்சு...

ஜெயலலிதாவுக்கு வேறு ஏதோ பிரச்சினை என மக்கள் கருதும் நிலைக்கு ஆளாகி இருப்பதாக அதிமுக தொண்டர்களே நினைக்கும் அளவுக்கு அவருடைய நடவடிக்கைகள் உள்ளன. இரண்டு நாள் வெளியே தலை காட்டினால் இரண்டு மாதங்களுக்கு தோழியோடு சோழி விளையாடப் போய் விடுகிறார். ஏதோ ஒப்புக்கு கட்சி நடத்துவதுபோல் இருப்பதாக ஒரு பேச்சும் அடிபடுகிறது.



விஜயகாந்தின் அரசியல் வீரத்தில் மக்களுக்கு இருந்த ஈர்ப்பு குறைந்து விட்டதாகவே தெரிகிறது. ஏனென்றால் கூட்டணி இல்லாமல் போட்டியிட பெரிய கட்சிகளே பிரம்மப் பிரயத்தனப்படும்போது இவர் தெய்வத்தோடும் மக்களோடும் தான் கூட்டணி என சின்னப் பிள்ளைபோல் சொல்லிக் கொண்டிருப்பதை மக்கள் ரசிப்பது மாதிரி தெரியவில்லை.

ஆனால், இவர்கள் அனைவருமே தங்களால் முடிந்த வாக்குகளை மக்களிடம் இருந்து பெற்று வலிமையை நிலை நாட்ட போட்டி போடுகிறார்கள். விளைவு ... வீழ்ச்சி இவர்களுக்கு வெற்றி திமுக கூட்டணிக்கு...

தேர்தல் முடிந்த பின்னர்  திமுக கூட்டணி பெற்ற வாக்குகளையும் இவர்கள் பெற்ற வாக்குகளையும் கூட்டிப் பாருங்கள். தார்மீக வெற்றி யாருக்கு என்பது தெரியும். இதற்கு என்ன காரணம் ஈகோ... கூட்டணி தலைமை யாருக்கு என்ற ஈகோ... இந்த நிலை தொடரும் வரை திமுகவை வீழ்த்துவது என்பது கனவிலும் நடக்காத காரியமாகும்.

ஒருவேளை துணை முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் மத்திய அமைச்சர் முக. அழகிரிக்கும் உட்கட்சிச் சண்டை வந்து திமுக பிளவு பட்டாலும் கூட உதய சூரியன் சின்னம் வைத்திருக்கும் தரப்பும்   காங்கிரசும் இணைந்து நின்றால் அந்தக் கூட்டணிக்கு வெற்றி நிச்சயம்.

Friday, March 26, 2010

சபாஷ் சரியான தீர்ப்பு... குஷ்பு அக்காவுக்கு ஜே...

கல்யாணம் பண்ணிக்காமலே ரெண்டு பேரும் கசமுசா பண்ணிக்கிட்டா தப்பில்லைன்னு தீர்ப்பு சொல்லி இருக்காமே டெல்லி நீதி மன்றம். சபாஷ் சரியான தீர்ப்புங்க.



இதுவரை போலீசுக்கு பயந்துக்கிட்டு இருந்த கும்மாங்குத்து ஆசாமிங்களுக்கெல்லாம் இனி கொண்டாட்டம்தாங்க. தள்ளிக்கிட்டு வந்த சில்லோட லாட்ஜில போயி ரூம்பு கேட்டா முந்தி மாதிரி கல்யாணம் ஆயிருச்சா.. கழுத்தில கயறு கிடக்கா.. இல்லாட்டி ரூம் தரமுடியாது போ.... போ...ன்னு மேனேஜர்ரு விரட்ட முடியாதுங்க.

போடா.. போடா... டுபுக்கு.. இந்தா பாருடா தீர்ப்பு... உங்களுக்கெல்லாம் குஷ்பு வச்சிட்டாடா ஆப்பு....ன்னு சும்மா சிம்பு மாதிரி சிலா வரிசை எடுத்திற மாட்டாங்க.

இனிமே லாட்ஜுக்கு போலீசு ரெய்டு போற ரவுசெல்லாம் காட்டமுடியாதுங்க. உள்ள இருக்கிறது  சொந்த... சரக்கா... தள்ளிக்கிட்டு... வந்த சரக்கா...ன்னு விசாரிக்க ஆரம்பிச்சா.... நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காதா போலீசே ஒழிக....சட்டத்தை மதிக்கத் தெரியாத சாக்கடையே ஒழிக....ன்னு கோஷம் போட்டு போலீஸ்காரங்க வாயில லத்திய விட்டு ஆட்டிட மாட்டாங்க.

சுந்தர் சிக்கு முன்னரே பிரபு வோட சொக்கட்டான் விளையாடி அரிசி குத்துனதாக அக்கா குஷ்பு மேல அடுக்கடுக்கா பாராட்டுப் பத்திரம் வாசிச்சதா ஒரு பேச்சு அடிபட்டதுங்க. இது எல்லாருக்குமே தெரிஞ்சதுதானுங்களே... அதுனால தமிழ் பண்பாட்டைக் காப்பாத்த செஞ்ச இந்த முயற்சிக்கு நாம குஷ்புவுக்கு இன்னொரு கோவில் கட்டலாமுங்க.

ஆகா...அருமையான தீர்ப்புக்கு வழி வகுத்த குஷ்பு அக்கா வாழ்க.... அற்புதமான இந்தத் தீர்ப்பை சொன்ன நீதிபதி வாழ்க....இதே மாதிரி அம்மாவும் மகனும் இருக்கலாம்.... அண்ணனும் தங்கையும் நடக்கலாம்.. அப்பனும் மகளும் ரசிக்கலாமுன்னு பேசி அதுக்கும் அக்கா குஷ்பு நல்ல தீர்ப்பு வாங்கி கொடுத்தா நம்ம தமிழ் பண்பாடு மேலும் மேலும் செழிந்தோங்குமுங்க.

Tuesday, March 23, 2010

கொஞ்சிக் கொஞ்சி நித்திக்கு எண்ணெய் தேய்க்கும் ரஞ்சி

நித்திக்கு ரஞ்சி ( ரஞ்சிதாவோட சுருக்கமுங்கோ) கொஞ்சி கொஞ்சி எண்ணெய் தேய்ச்சி ( எண்ணெய்யோ வேறு என்ன எழவோ) விடுற காட்சியை பாத்துப் பாத்து பரவசமானேனுங்கோ. நீங்க பாத்தீங்களா....



அட...அட... அட... என்னா கிளுகிளுப்பு.. என்னா... சிலுசிலுப்பு... நான் சொல்றது நம்ம ரஞ்சி அக்கா முகத்திலங்கோ... ஏதோ ஒரு தைலத்தை எடுத்து ரஞ்சி அக்கா.. நித்திக்கிட்ட வருறாங்க. நித்தி மெதுவா காவி துணியை நீக்குறாரு.. ஒரு தாய் பச்சக்குழந்தையை படுக்க வச்சு பதமா எண்ணெய் தேக்கிற மாதிரி குறும்புச் சிரிப்போட நெருங்கி நின்னு நீவி விடுறாங்க.

முகத்தில தேய்க்கும் போது செல்லமா ஒரு சின்ன தட்டு தட்டுறாங்க. காது இடுக்கைக் கூட ரஞ்சி அக்கா விடலைங்க. அப்ப நித்தி உடுப்பைக் கழட்டுற அழகே அழகுங்க. நித்தி உடம்பு புடலங்காய் மாதிரி வளைவாத்தாங்க இருக்கு. தெம்பு கொஞ்சம் கம்மி மாதிரிதான் தெரியுதுங்க. நான் சொல்றது உடம்பு தெம்பை மட்டும்தாங்க. மத்ததைப் பத்தி இல்லைங்க.

நித்தியோடு நெத்தியில வலிக்காம வாழத்தண்டு கையால ரஞ்சி அக்கா தடவுறாங்க.. மண்டைக்குள்ள விரலை விட்டு நித்தியோட நீளமான முடிக்குள்ளாற கிச்சுக் கிச்சு தாம்பளம் விளையாடுறாங்க... அந்தக் காட்சியில ரஞ்சி முகத்தில பொங்கி வழியிற ஒளியே அலாதியானதுங்கோ... சாமியாரு மத்தவங்களுக்கு குண்டலினியை எழுப்பினாரோ இல்லையோ ரஞ்சி அக்காவுக்கு உறியடிச்சு உசுப்பேத்தி இருக்காருங்கோ..

ரஞ்சி அக்கா.. கிட்ட ஒரு சின்ன கேள்விங்க. ஆமா.. இந்த விளையாட்டை உங்க வீட்டுக்காரருக்கிட்ட விளையாண்டு இருந்தா புருசன் புட்டுக்கிட்டு போயிருக்க மாட்டாருங்களே.... நித்தி மாதிரி சாமியாருக்கு செய்யிற சேவையில ஆயிரத்தில ஒரு பங்கை கட்டுன கணவனுக்கு பண்ணுனா பொண்டாட்டி முந்தானைய விட்டு புருசமாருங்க தப்பிச்சு போக முடியுங்களா...

நமக்கெல்லாம் அந்த ஆசனம் இந்த ஆசனமுன்னு நித்தி சொல்லி பஜனை பாட வச்சுட்டு அது பாட்டுக்கு டிவியில குத்துப்பாட்டு பாத்துக்கிட்டு கும்மாளமா இருக்குதுங்க. ரிமோட்டை நிமிசத்துக்கு ஒருதரம் மாத்தி அத்தனை சேனலையும் அலசிக்கிட்டுத்தானே இருக்கு. சேனலே இந்தப் பாடுபட்டா மாட்டுன சேலைங்க என்ன பாடுபட்டிருக்குமுன்னு நினைக்கத் தோணுதுங்க.

இன்னொரு விஷயத்தையும் மனசு விட்டு சொல்லணுமுங்க. நியாயமுன்னா... எல்லாருக்கும் ஒன்னுதானுங்களே..... நித்தி ... ரஞ்சி பண்ணுற ரவுசு பண்பாட்டை மீறாத பல்லாங்குழி ஆட்டம் மாதிரி இருக்குதுங்க. என்னதான் நித்திக்கு நின்னு குனிஞ்சு மஜாஜ் பண்ணினாலும் மாராப்பு விலகல பாத்தீங்களா..



நித்தி கூட எசகு பிசகா நடக்காமா எண்ணெய் தேக்கிறதுக்கு தோதா உடம்பை காட்டுறாருங்க. ஒரு தடவை ரஞ்சி அக்கா தோள்பட்டையில கையை வைக்கும்போது கூட உணர்ச்சிய தூண்டுற இடங்களில உரசாம பாத்துக்கிட்டாருங்க. அதைத் தாண்டி ஒரு அடிகூட எடுத்து வைக்கலைங்க. கெமிஸ்ட்ரி ஒத்துப் போன நீ பாதி... நான் பாதி .. ஜோடி மாதிரி தானே அவங்க ரெண்டுபேரும் நடந்துக்கிறாங்க.

கணவன் மனைவி எப்படி இருக்கணுமுன்னு ரஞ்சிதா மூலமா காட்டுன நித்திக்கு.... காவிச் சாமியாருங்க உள்ளே... வெளியே.. விளையாட்டு இப்படித்தான் இருக்குமுன்னு உலகத்துக்கு நிரூபிச்ச நித்திக்கு.... பிரமச்சரியமெல்லாம் ஒரு பித்தலாட்ட வேலையின்னு பிரிச்சு மேஞ்ச நித்திக்கு.... நான் மட்டுமில்ல இனி காவி கட்டி வருற சாமியாருங்க எல்லாம் அந்தரங்கத்திலே நடத்துற சுந்தர விளையாட்டு இதுதான்னு சொல்லாம சொன்ன நித்திக்கு.... நன்றிங்க... நன்றிங்க... நம்ம தமிழ் சமுதாயத்தோடு தலை சாய்த்த நன்றிங்க.

Monday, March 22, 2010

அமெரிக்காவை அசர வைத்த நித்தியானந்தர்

நம்ம நித்தி பண்ணின அலப்பறையில அமெரிக்காவே ஆடிப்போச்சாமே... கூட்டிக்கிட்டு போற பொண்ணுங்க உடுத்தி இருக்கிற துணியை ஒன்னொன்னா அவுத்து போடச் சொல்லிட்டு நித்தி டப்பாங்குத்து குத்துமாமே.... ஆஹா... கேக்கும்போது காது இனிக்குதுங்க.... நினைக்கும்போது நெஞ்சு இனிக்குதுங்க..



நித்தியோட கதை வெளியானப்பறம் இதுமாதிரி  டையக்கோ... டம்மக்கோ...ஆடும் சில அரசியல்வாதிங்க.. அடடா...அவசரப்பட்டு அரசியலுக்கு வந்திட்டமே... நித்தி மாதிரி காவி கெட்டப்புல இருந்திருந்தா காசுக்கு  காசுமாச்சு......கசக்கலுக்கு கசக்கலுமாச்சுன்னு பொழந்து புட்பால் ஆடியிருக்கலாமேன்னு பெரு மூச்சு விடுறாங்களாம்.

ஏன் இந்த பெருமூச்சு.... எங்கிட்டோ அடிச்ச பணத்தை அண்டமா முனிவரெல்லாம் அடங்கிற அதுக்குள கொட்ட வேண்டி இருக்குதேன்னு வருத்தமாம். நித்தியைப் பாரு... சல்ஜாவுக்கு சல்ஜாவுமாச்சு ... பொட்டி பொட்டியா பணமும் ஆச்சுன்னு  படுக்கை பச்சகிளிங்க கிட்ட சொல்லிச் சொல்லி ஆத்துப் போறாங்களாம்.

அரசியல்வாதிகளுக்கிட்ட அதிகாரம் கையில இருந்தாலும் வெளிய போய் சாப்பிடுற தட்டு வெள்ளியா இருக்குமுன்னு சொல்ல முடியாதுங்களே. புதுசு புதுசா கெடைக்கிறது கஷ்டமுங்களே.... ஆனா. அதிர்ஷ்டக்கார நித்தியைப் பாருங்க எந்தப் பயமும் இல்லாம புதுப்புது தட்டுல சும்மா பொம்மலாட்டமில்ல நடத்தியிருக்கு.

காவிச் சாமி ... பாவிச் சாமியா மாறி பரிதாபமா இருக்குதுன்னு தப்பு கணக்கு போட்டுடாதீங்க. சாமியோட இன்னொரு பக்கம் டெரர்ன்னு நம்ம நண்பர் பயங்காட்டுறாரு. அதனால தான் இத அம்பலத்துக்கு கொண்டு வந்த லெனின்  எதையும் எரிக்கக்கூடிய  நெருப்பான அந்த தொலைக்காட்சிக்கு போனதாக சொல்றாருங்க.

இன்னொரு உவ்வே....ங்க.... சில கணவன்மாருங்க...  தயக்கத்தில நிக்கிற பொண்டாட்டிங்க முதுகில தட்டிக் கொடுத்து தைரியம் சொல்லி   சாமிக்கிட்ட அனுப்பிச்சிட்டு அர்ப்பணிப்பு கணவன்மாருங்க இருக்கிறதா லெனின் கருப்பன் சொல்றாருங்க.  கிராமத்தில தபால்காரனோட கொஞ்ச நேரம் தனியா பேசிக்கிட்டு நின்னாவே மனைவியோட தலையை புருசன் மாங்காயச் சீவுற மாதிரி சீவிடுறான். ஆனா இவுங்களப்பாருங்க....மேட்டுக்குடிகாரங்களாமுங்கோ..உக்கூம்....

இப்ப அமெரிக்காவில மன மகிழ் படங்க ( செக்ஸ் படத்துக்கு தமிழாக்கமுங்கோ) எடுக்கிற டைரக்டருங்க எல்லாம் நித்திய வலை போட்டு தேடிக்கிட்டு இருக்காங்களாம். இந்த சூட்ல படத்தை வெளியாக்குனா அவதார் படத்தோட சாதனையை முறியடிச்சுடலாமுன்னு மும்முரமா நிக்கிறாங்களாம். நித்தி... அமெரிக்காவ ஒரு ஆட்டு ஆட்டுங்க. அதுதான் நமது இந்து மதத்துக்கு பெருமை.

விவேகனந்தர் இந்து மதத்தின் எளிமையைப் பரப்புனாருன்னா... நித்தியானந்தர் ....... வலிமையைப் பரப்பட்டும். நமக்கெல்லாம் அது பெருமைதானுங்களே..

Friday, March 19, 2010

நித்திக்கு... விக்கி வச்ச வேட்டு




ஈசா பட நாயகன் விக்னேஷ் ... கிச்சு...கிச்சு... தாம்பளம்... கிய்யா...கிய்யா... தாம்பளம் விளையாட்டில் கில்லாடி சாமியார் நித்தியானந்தாவை ஒரு வாங்கு வாங்கி இருக்கிறாருங்க. அவரோட தைரியத்துக்கு பாராட்டுங்கோ...

விக்னேஷையும் சாமியாருக்கிட்ட கோர்த்து விட்டது ராகசுதாதானுங்களாம். வாழ்க அவரோடு சமூக சேவை.  பெரிய பணக்காரங்க,, பதவியில இருக்கிறவங்க... சினிமாக்காரங்கன்னு நிறையப் பேரு சாமியாரோட ரசிகருங்களாம்.

ஏழை பாலைங்க சாமியார தேடி போனா அதில நியாயம் இருக்குது. ஆனா ஊரை அடிச்சு உலையில போட்டு கோடி கோடியா பணத்தைச் சேத்த இந்தக் கோணங்கிங்க எதுக்குய்யா அங்க போறாங்க.



என்னதான் நம்மி நித்தி ரஞ்சிதாக்கிட்ட கொஞ்சிக் கூத்தடிச்சாலும் அவரு எல்லை மீறின மாதிரி வீடியோவில இல்லைங்க. அது நமக்கு கொஞ்சம் மன வேதனைதாங்க.

ஆனா... நித்தி எதுக்குங்க இந்தப் பம்மு பம்முறாரு. நான் பிரம்மச்சாரின்னு எப்பவாச்சும் சொல்லிருக்கனான்னு கேக்குறாரு. ஒரு வாட்டி ஞானிங்கிறாரு. இன்னொருவாட்டி ஆன்மீக ஆய்வாளர்ங்கிறாரு. அப்புறம் பாலியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கேங்கிறாரு. 

பாலியல் ஆராய்ச்சிக்குத்தான் நாராயண ரெட்டி மாதிரி பல டாக்டருங்க இருக்காங்களே... உனக்கு எதுக்கு சாமி கருமாந்திரம் புடிச்ச இந்த உவ்....வவ்...வே...வேலை. 



இது சம்பந்தமா என்னோட நண்பர் ஒருத்தரு விவாதம் பண்ணுறாரு.. அதை என்னால ஏத்துக்க முடியலைங்க. அது உண்மையா பொய்யாங்கிறதை உங்க முடிவுக்கே விட்டுடுறேங்க.

நித்தி ஆனந்த தாண்டவம் ஆடும்போது ஆம்பிளைங்களும் பொம்பிளைங்களும் ஆளு மாத்தி ஆளு கசமுசா காரியத்தில கண்ணு மண்ணு தெரியாம கலக்குவாங்கலாமே.. இதை சாமி அப்படியே ரசிச்சு பாப்பாராமே... இந்தக் கசமுசா விளையாட்டு  ரொம்ப நம்பிக்கையான விஐபி ஆளுங்க மத்தியிலதான்  நடக்குமாமே...அதனாலதான் அந்த சாமியாருக்கிட்ட பணத்தை கொண்டு போயி கொட்டுறாங்களாமே...

இப்படி மே... மே..ன்னு அடுக்கிட்டே போனாருங்க.. இப்படியும் இருக்குமான்னு என்னோட மனசு கெடந்து அல்லாடுதுங்க. ஏதோ நம்ம நித்தி வயசு கோளாறுல ( நித்தி படுக்கையில் செத்த பாம்பு மாதிரி கெடக்கிறத பாத்தா உடம்பும் கோளாறா இருக்கும் போல) ஒரு தபா தப்பு பண்ணிட்டா அதுக்கு இப்படியா இஸ்திரி போடுறதுன்னு கேட்டா அந்த நண்பரு அடங்க மாட்டேங்கிறாருங்க.

இந்தப் படத்தை பாருங்க. இவரு இஞ்சினியரு மாணவருங்க.. தண்டவாளத்தில மாட்டிக்கிட்ட ஒரு பெரியவரை காப்பாத்தப் போயி ரயிலல அடிபட்டு ரெண்டு காலும் போச்சுக்குங்க. தொடர்ந்து படிக்க முடியலைங்க. உழைச்சு பொழைக்கவும் வழியில்லைங்க.



நான்... இந்த பைத்தியகார பணக்காரங்களையும் ஏழை எளிய மக்களோடு காசில ஏசி போட்டு படுத்திருக்கிற சினிமாக்காரங்களையும் பாத்து கேட்கிறேங்க.

சல்லாபச் சாமியாருங்ககிட்ட போயி சங்கடப்படாம பணத்தை கொட்டுறீங்களே... நீங்க ஒரு நேர உவ்வேக்கு கொடுக்கிற காசில இதுமாதிரி ஏழைங்க எத்தனை பேர வாழ வைக்க முடியும் தெரியுங்களா... இதை செஞ்சு பாருங்கப்பா... உலகத்தில இருக்கிற சாமிங்க எல்லாம் உங்க வீட்டு வாசல்ல காத்துக்கிட்டு நிக்கும்.

Monday, March 15, 2010

சமாதி நிலையில் கோமணத்துக்குள்ள கூழு கிண்டிய நித்தி....

நம்ம நித்தி... நான் ஒரு சமூக சேவகன்னு சொல்லி நம்மை எல்லாம் புல்லரிக்க வச்சி இருக்காருங்க. அவரு சமூக சேவையைத்தான் வீடியோவில பாத் தோமே. ஒரு தடவை வீட்டுக்கு வந்தாவே லட்ச ரூபா வாங்குவாறாமே. இது எப்படிப்பட்ட சமூக சேவைங்க.

அப்புறம் நம்ம ரஞ்சிதா மேலே காலைத் தூக்கி போட்டு கபடி விளையாட்டுக் காட்டுறாரே இது தாங்க சூப்பர் சமூக சேவை. அப்புறம் படுக்கையில இருந்து திடீர்னு மாத்திரை சாப்பிட பல்டி வித்தை காட்டி காலைத் தூக்கிக்கிட்டு
கோமணத்தோட எழுந்திருக்கிறாரே இது சூப்பரோ சூப்பருங்க.



இப்படி பணத்துக்கு பணம் ஜாலுக்கு குஜாலுன்னு கும்மாங்குத்து குத்திட்டு ஆன்மீக ஆராய்ச்சியாளன், பாலியல் பயிற்சியாளன்னு இவ்வளவு தைரியமா எதனால் சொல்ல முடியுது தெரியுங்களா.... கேக்கிறவன் எல்லாம் கேணைப்பயல்ன்னு நினைக்கிறதாலேதாங்க.

இன்னொரு செய்தியும் சொல்றாருங்க. இனிமேத்தான் அவருக்கு மவுசு கூடப்போகுதுன்னு. அதுல என்னங்க சந்தேகம்... பக்கத்து வீட்டுக்காரன் பசியால துடிக்கிறத ரசிக்கிற நம்ம பணக்கார வர்க்கம், நித்தி மாதிரி போலி ஆசாமிங்ககிட்ட பணத்தையும் கொடுத்து .... சொல்றதுக்கே நாக்கு கூசுதுங்க... அதுக்கும் அனுப்பி வைக்கிறாங்களே... இந்த வெட்கக்கேட்டை எங்க போயி சொல்றதுங்க.

எனக்கு நம்ம நித்திக்கிட்ட பிடிச்சதே.... நாணமோ வெட்கமோ இல்லாம பேசுற அவருடைய ஸ்டல்தாங்க. சல்லாப சாமியாருன்னா இந்த தில்லு வேணுமுங்க. இவருக்கே உடம்பு சரியில்லையாம். அந்த நேரத்தில சேவை செய்யத்தான் ரஞ்சிதா போனாங்களாம். ரஞ்சிதா அமெரிக்காவுல மருத்துவப்பட்டம் படிச்சவரு பாருங்க...சரி இப்படிப்பட்ட ஆளு நோயைத் தீப்பான்னு சொல்லி லட்ச லட்சமா கொட்டி அழுத நம்ம முட்டா ஜனங்களை என்னன்னு சொல்றதுங்க.



நம்ம நித்தி வழக்கில்லாம வெளிய வர்றதுக்கு சான்சு அதிகமா இருக்குங்க. ஏன்னா. இவரோட வழக்கை கர்நாடக மாநிலத்துக்கு மாத்தி இருக்காங்க. கர்நாடக முதல்வர் எடியூரப்பா... நம்ம நித்திக்கு எடுபிடி கணக்கா இடுப்புப் பிடிக்க தயாரா இருப்பவரு... இந்து சமய பெரியவரு ராமகோபாலன் வேறு நித்தி செஞ்சது சட்டப்படி தப்பு இல்லைன்னு வக்காலத்து வாங்குறாரு. அப்புறம் என்னங்க.. நம்ம நித்தி... சும்மா குத்தி கிழிச்சிற மாட்டாரு.

பிரம்மசரியத்தின் பிதா மகன்னு சொல்லிக்கிட்ட நித்தி... தனி அறைக்குள்ள மாத்திரையைச் சாப்பிட்டு மல்லாந்து கிடக்கிறாரு. கட்டுன புருசனுக்கு கடுக்கா கொடுத்துட்டு ரஞ்சிதா அக்கா... சாமியாருக்கு சவரச்சனை செய்யிறாங்க. முத்தா கொடுக்கிறாங்க. மேலே ஏறிப்படுத்து குண்டலினியைக் குத்திக் குத்திக் கிளப்புறாங்க. இதில சமாதி நிலையில இருந்தேன்னு வேற நித்தி சால்ஜாப்பு சொல்றாருங்க. சமாதி நிலையில இருக்கிறவரு எதுக்குங்க கோமணத்துக்குல கையை விட்டு கூழு கிண்டிக்கிட்டு இருக்காரு.

அப்புறம் விளக்கை அணைச்சிட்டு பாலியல் ஆராய்ச்சியைப் பக்குவமா நின்னு நிதானிச்சு செய்யுறாங்க. இதுல என்ன சட்ட விரோதம் இருக்குன்னு  சில விளங்காத வெளக்கெண்ணெய் கருப்பனுங்க  கேக்கிறாங்க. இதில இருந்து என்ன தெரியுதுன்னா. மலையாளத்து பிட்டு படம் மாதிரி ரெண்டு பேரும் விளக்கு வெளிச்சத்தில ஜல்லிக்கட்டு நடத்தலைன்னு  இவங்க வருத்தப்படுறாங்க போல இருக்கு.

இந்த வருத்தம் எங்களுக்கே இருக்கே.. அப்படி நடந்து இருந்தா நம்ம நித்திக்கு சல்லாப சாமியார்ன்னு பட்டங்கொடுத்து ரசிகர் மன்றம் ஆரம்பிக்க ஒரு கூட்டம் தயாரா இருக்குதுங்களே...

நம்ம நித்தி உலகத்துக்கு வழிகாட்ட வந்த மகான்னு சொல்லிக்காம....இரக்கமில்லாத இளிச்சவாயி பணக்காரங்ககிட்ட கோடி கோடியா பணத்தைக் கறக்காம... அவரு பாட்டுக்கு நம்ம ரஞ்சிதா...குஞ்சிதா.... கோபிகா...குந்தவைன்னு யாருகூட ஜுஜ்ஜிலிப்பா பண்ணி இருந்தாலும் அதை யாருங்க பெரிசா எடுத்துக்கப்போறா....

இந்து சமயத்தின் பெருமையை சிகாகோவில பேசி உலகம் பூராம் பரவச் செய்த விவேகாநந்தர் மாதிரி காவி வேட்டி கட்டி வேஷம் போட்டு பொண்ணுங்ககிட்ட எல்லாம் பூப்பந்து விளையாடிய இந்த நித்திய.... இந்து சமயத் தலைவர்கள் ஆதரிப்பது வேடிக்கையாக இருக்குதுங்க. ஒருவேளை அவங்களும் இப்படித்தானோ....

Thursday, March 11, 2010

நித்தி.... சுணை இல்லாத கத்தி...

..ரொம்ப நாளாச்சு வலைத்தளத்துக்கு வந்துங்க.  அன்னாடம் வயித்துக்கு அல்லாடு ஜாதிங்கிறதாலே தொடர்ந்து எழுத முடியலைங்க. நம்ம நித்தி.... அதாங்க நித்திய ஆனந்தர்.... அவருதாங்க இப்ப என்னை இழுத்து வந்திருக்கிறாருங்க.




என்னை தொடர்பு கொண்ட இளசுகங்க.... நித்தியானந்தருமேலே கடுங்கோபத்தில இருக்கிறதா சொன்னாங்க. எதுக்கு. நம்ம ரஞ்சிதாவோடு நாக்கு முக்கு நாக்கு பண்ணுனதுக்கா.... இல்லைங்க.

நித்தி சுணையில்லாத கத்தி...ன்னு வெந்து நொந்து போகுதுங்க.  அவரு சாமியாரு வர்க்கத்துக்கே அவமானத்தை ஏற்படுத்திட்டதா கொதிச்சுப் போகுதுங்க..

ஆமா... நம்ம நித்தி...வாயில மாத்திரையைப் போட்டுட்டு துவைச்சுப் போட்ட துணி மாதிரி சொங்கித் தனமா படுக்கையில கிடந்தா கோபம் வரத்தானுங்களே செய்யும்.



32 வயசுலயே உடுக்கடிச்சுத்தான் அருளு வரவழைக்கிற நிலையில இருந்தா 50 வயசில என்னங்க பண்ணுவாரு..இவரே இப்படின்னா இவருடைய சீடருங்க சீக்குக் கோழி மாதிரியில்ல  படுக்கையில பப்பரக்கான்னு கிடப்பாங்க.

இவரு இப்படி கிடந்தது நம்ம கும்மாங்குத்து சாமியாருங்களுக்கெல்லாம் மானப் பிரச்சினையா போயிருச்சாமுங்க. அதனாலே போலீசு தேடுதோ இல்லையோ இவங்க தேடிக்கிட்டு இருக்காங்களாம்.

நம்ம நித்தி கையில கிடைச்சா... பின்னி பெடலெடுக்க போறாங்களாம். இப்படி பண்ணுவியா.. இப்படி பண்ணுவியான்னு... சம்பந்தப்பட்ட இடத்தில சப்புச் சப்புன்னு சாத்தப் போறாங்களாம்.

எனக்கொரு சந்தேகமுங்க. சங்கதி இல்லாத நம்ம நித்தி சாமிக்கிட்ட இந்த நடிகைங்க எல்லாம் எதைக் கண்டு இப்படி கிறக்கமா கிடக்கிறாங்கன்னு தெரியலைங்க.

ஆசையத் தொறக்கணும்... ஆணவத்தை தொறக்கணும்...ன்னு பக்தர்களுக்கு சொல்லிட்டு ரகசிய ராத்திரி தேவதை ரஞ்சிதாவோட உடுப்புகளைத் தொறந்ததாலே இப்ப சிக்கல்ல சிக்கி சேதாரமாயிட்டாருங்க.

ஆமா... எல்லாருக்கும் ஆசி வழங்குன கலியுக கடவுள் இப்ப தமிழ்நாட்டு குடும்பப் பொண்ணுங்களுக்கிட்ட விளக்குமாத்து பூஜை வாங்குற நிலைக்கு போயிட்டாரே... இதுக்கு பேரு என்னங்க... இதுதாங்க சூத்துக் கொழுப்பு..

Sunday, January 24, 2010

நிகர் நிலைப் பல்கலைக் கழங்களுக்கு அனுமதி கொடுத்தது யார்?

இப்ப இந்தியாவில அல்லோகலப்படும் பிரச்சினை நிகர் நிலைப் பல்கலைக்கழக அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்கிற மத்திய அரசின் அறிவிப்பு தாங்க. இந்தப் பல்கலைக் கழகங்கள் எல்லாம் கொள்ளைக் கூடங்கள்ன்னு இப்போ எல்லாரும் பேசுறாங்க... எழுதுறாங்க...




சரிங்க... இதுக்கு அனுமதி கொடுத்தது யாருங்க.. மத்திய அரசுங்க... சில வல்லுனர்கள் பரிந்துரையின் பேரில் தாங்க அனுமதி கொடுக்கப்பட்டிருக்கு. அவங்க காசு வாங்கிக்கிட்டு கொடுத்தாங்களா... இல்ல கண்ணை மூடிக்கிட்டு கொடுத்தாங்களாங்கிறது பிரச்சினை இல்லைங்க.

அவங்க கொடுத்ததாலே தானே மாணவர்கள் சேர்ந்தாங்க. எல்லாரும் இன்னைக்கு நேத்தா பல்கலைக்கழகங்களை ஆரம்பிச்சாங்க. அது ஆரம்பிச்சு அஞ்சாறு வருசம் ஆயிடுச்சுங்க. எத்தனையோ பேரு படிப்பை முடிச்சிட்டு பட்டமும் வாங்கிட்டாங்க.

தகுதியில்லாத பல்கலைக் கழகங்களை ஆரம்பிக்க கையெழுத்துப் போட்ட சம்பந்தப்பட்ட வல்லுனர்களை... அதிகாரிகளை அல்லவா மத்திய அரசு முதலில் கைது செய்யணும்.

அந்த நேரத்தில் இருந்த கல்வி அமைச்சர் அல்லவா இதுக்கு பொறுப்பு ஏற்க வேண்டும். அதை விட்டுட்டு திடீர்ன்னு ரத்துன்னா...ஆயி போனவனை அடிக்கமுடியாம..... ஆயி...யைப் போட்டு அடிச்ச கதையால்ல இருக்கு.

இன்னொன்னுங்க... இந்த பல்கலைக்கழகங்கள் எல்லாம் பலசரக்கு கடைங்களா.. இழுத்து மூடிட்டா இன்னொரு கடைக்கு மக்கள் போயி சாமான்கள் வாங்க... மாணவர் சம்பந்தப்பட்ட காரியமுங்க.

ரத்துன்னு அறிவிக்கிறதுக்கு முன்னாடி... அங்க எத்தனை மாணவர்கள் படிக்கிறாங்க... அவங்களுக்கு மாற்று ஏற்பாடு என்ன செய்யலாம்... அரசாங்க பல்கலைக் கழகங்களோடு இணைக்கிறதுன்னா... அதுக்கு அரசாங்கம் என்ன திட்டம் வச்சிருக்கு.

பல்கலைக் கழக நிர்வாகம் முரண்டு பிடிச்சா அவங்க பல்லைப் பிடுங்க என்ன வழி...இதையெல்லாம் யோசித்த பின்னரே ரத்து ஆயுதத்தை கையில் எடுத்திருக்கணுமுங்க.

அதோடு சிலர் இந்த பல்கலைக் கழகத்தில படிக்கும் மாணவர்கள் எல்லாம் மக்கு மாணவர்கள் என்பதுபோல சொல்றாங்க. இது அவங்கதான் மக்கு என்பதைக் காட்டுதுங்க. அண்ணா பல்கலைக்கழகத்தில படிச்ச மாணவர்கள் எல்லாரும் நோபல் பரிசு வாங்குறவங்க போல பீத்திக்கிறாங்க.

அரசாங்க ஒதுக்கீட்டில போன மாணவர்கள் அங்கயும் தண்டம் அழுகிறது சம்பந்தப்பட்ட பெற்றோர்களுக்குத்தாங்க தெரியும்.
சட்டப்படி புகார் கொடுத்து அவங்கமேலே நடவடிக்கை எடுக்கலாமேன்னு சில மேதாவிங்க கேக்கலாமுங்க. வாயைக் கட்டி... வயித்தைக் கட்டி.. சேத்த பணத்தைக் கட்டி பிள்ளையைப் படிக்க வைக்கிற பாட்டாளி... நிர்வாகத்தோடு மோதி நிர்க்கதியா போன கதை நிறைய இருக்குதுங்க.

கணக்கு வழக்கில குளறுபடி இருக்குன்னு சொன்ன அரசாங்க ஆடிட்டரையே அண்டர்வேரைக் கழட்டிருவாங்க போல இருக்கு. இந்த நிலையில விவரம் தெரியாத வேட்டி ஆசாமிங்க கதி என்ன ஆகுமுன்னு நினைச்சுப் பாருங்க. கோமணத்தை உருவி கும்மி அடிச்சுருவாங்க.

Monday, January 11, 2010

தமிழன் நெஞ்சில் வீரமும் இல்லை... ஈரமும் இல்லை...



  அன்று நடுரோட்டில்
செத்துப் போனது
ஆய்வாளர் வெற்றிவேல்
மட்டுமல்ல
மறத்தமிழனின் மானமும்
மனிதாபிமானமும்தான்




ஐயோ...ஐயோ....
பார்க்கும்போது நெஞ்சு
பற்றி எரிகிறதே..
.உயிர் உறைகிறதே..

ரத்தச் சகதியில்
அந்த உருவம்
புரண்டு படுக்கிறது
பார்த்த என் இதயம்
வயிற்றுக்கும்
தொண்டைகுமாய்
உருண்டு துடிக்கிறது

எப்படியாவது என்னைக்
காபாற்றுங்களேன் என
துண்டித்த காலோடும்
துடிக்கின்ற உடலோடும்
கையை நீட்டுகிறது

உடலை வளைத்து
குனிந்து பார்த்த
சபாரி சூட் அணிந்த
சண்டாள நபர் ஒருவன்
எட்டடி பின்னால்
பாய்ந்து... தான் ஒரு
'பொட்டை' என்பதை
பொறுப்பாக சொல்லி
இருக்கிறான்

அந்த ஆய்வாளர்
ஆள் இல்லாத இடத்தில்
அநாதையாக சாகவில்லை

சுற்றி நின்று நமது
வீரத் தமிழர்கள்
வேடிக்கை பார்க்க
இரத்தம் வற்றி வற்றி
செத்திருக்கிறார்

கொலைகளையும்
கொள்ளைகளையும்
திரையில் பார்த்துப் பார்த்து
திகட்டிப் போனதால்தானா
அந்தக் கூட்டம்
நிஜத்தில் பார்த்து
நெக்குருகி நின்றது

நீரில் விழுந்து தத்தளித்த
ஒருவனைக் காப்பாற்ற
ஹெலிகாப்டரில் இருந்து
குதித்தாராம் ஜப்பான் நாட்டு
அமைச்சர் ஒருவர்

நேரில் ஒரு உயிர்
துள்ளத் துடிக்க
போய்க் கொண்டிருக்கும்போது
வேட்டியை மடித்துக் கட்டி
முகம் முழுக்க திகில் படர
முப்பதடி தூரத்தில் நிற்கிறார்
நமது ஊர் அமைச்சர் ஒருவர்

துணிந்த யாராவது ஒருவர்
துணியைப் போல தோளில்
அள்ளிப் போட்டுக் கொண்டு
போயிருந்தால் ஒருவேளை
அந்த உயிரைக் காப்பாற்றி
இருக்கலாம்

அதற்கு பின்னால்
அந்த உயிர் போயிருந்தால்கூட
மனிதாபிமானத்தில் சிறந்தவன்
தமிழன் என்ற மரியாதையையாவது
காப்பாற்றி இருக்கலாம்

வீரத்திலும் தீரத்திலும்
உலகத்தாரை விஞ்சி நிற்கின்ற
மூத்த குடிமக்களாம் நாம்
இனிமேல் யாராவது இப்படிச்
சொன்னால் அதைவிட கேவலம்
வேறு ஒன்றும் இல்லை

தமிழன் நெஞ்சத்தில்
வீரமும் இல்லை
ஈரமும் இல்லை
மானமும் இல்லை

நான் வேதனைப்படுகிறேன்
வெந்து போகிறேன்
அந்த ஆய்வாளரின்
மரணத்துக்கு மட்டுமல்ல

நான் தமிழன் என்று
சொல்லிக் கொள்ளவும்தான்

அந்த இடத்தில் நீ
இருந்திருந்தால் என
கேள்வி எழுப்பி என்னைக்
கேவலப்படுத்தி விடாதீர்கள்

இது போல் துடித்த ஓர்
உயிரைத் தோளில் சுமந்து
முச்சிரைக்க ஓடி
ரிக்ஷாவில் ஏற்றி
மருத்துவமனையில் சேர்த்து
காப்பாற்ற உதவிய
சின்ன நினைவு ஒன்று
என் இதயத்தில் இன்னும்
இருக்கிறது.

9.1.2010 தினமலர் அகப்பக்கத்தில் இந்த அவலக் காட்சி வீடியோ காட்சியாக வெளியாகி இருக்கிறது. அதைப் பார்த்த பின்னர்தான் என்னுடைய பதிவைச் செய்திருக்கிறேன். வாய்ப்பிருந்தால் நீங்களும் பாருங்கள். அந்த ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்யுங்கள்.



Friday, January 8, 2010

மகுடி வாசிக்கலாமா மருத்துவரே...



21-ஆம் நூற்றாண்டின் மாவீரன் பிரபாகரனின் தந்தை இறந்திட்டாருங்க. அவருக்கு நமது வீரவணக்கத்தை தெரிவிப்பது கடமையும் உரிமையும் ஆகுமுங்க.

அதே நேரத்தில அவரோட மரணத்தை வச்சு மகுடி வாசிக்கிற அசிங்கத்தை தமிழ்நாட்டு தலைவர்கள் ஆரம்பிச்சிருக்காங்க. இது திட்டமிட்ட சதின்னும் மருத்துவர் ராமதாஸ் கொந்தளிச்சு நிக்கிறாருங்க.

இப்படி கொந்தளிச்சு கொந்தளிச்சு தானே உலகத்திலேயே மாபெரும் விடுதலை இயக்கமா இருந்த விடுதலைப் புலிகளை குழி தோண்டி புதைச்சீங்க. இன்னும் என்னையா செய்யணுமுன்னு நினைக்கிறீங்க.

நீங்க இப்படி தைப்பூசத்துக்கு காவடி எடுத்து ஆடுற மாதிரி ஏடாகூடாமா ஏதாவது பண்ணினா... வேலு பிள்ளை பொணத்தை வீதியில போட்டுட்டு ராஜபக்சே வேடிக்கை பாத்துக்கிட்டு இருக்கப் போறானுங்க.




நீங்க இங்க வேட்டைக்காரன் விஜய் மாதிரி " நான் அடிச்சா தாங்க மாட்டே... நாலு மாசம் தூங்க மாட்டே...முழுசா வீடு போயி சேர மாட்டே"ன்னு  டையக்கோ டம்மக்கோ பாடி டப்பாங்குத்து போட்டுக்கிட்டு இருக்க வேண்டியதுதானுங்க.

விடுதலைப் புலிகள் அவுங்க பாட்டுக்கு வியூகம் அமைச்சு இலங்கை ராணுவத்தின் கண்கள்ல விரலை விட்டு ஆட்டிக்கிட்டிருந்தாங்க. அந்த வெற்றியில குளிர் காய நினைச்ச நம்ம வெத்து வேட்டு தமிழ் நாட்டு அரசியல்வாதிங்க சிலர் " மாவீரன் நெப்போலியனே... மானங்காக்க வந்த மாமன்னன் ராஜ ராஜனே... அல்டி மேட் கிங் அலெக்ஸாண்டரே" ன்னு மேடை கட்டி வாண வேடிக்கை விட்டாங்க.

"இதோ வந்திருச்சு தமிழ் ஈழம்... தமிழனுக்கு தனி நாடு.... ஆறு கோடி தமிழ் வீரனுங்க மூத்திரம் பேஞ்சே ராஜ பக்சே மூச்சை நிறுத்திடுவாங்க. எச்சி துப்பியே இலங்கையை அழிச்சிடுவாங்க" ன்னு தொண்டை கிழியக் கத்தி சும்மா சிலாவரிசை எடுக்க ஆரம்பிச்சாங்க.

முதல்ல ராஜபக்சே நம்ம ஆளுகளைப் பாத்து பயந்தது உண்மைதானுங்க. அப்புறம்தான் பாத்தான்... இவங்க வாழப்பழத்தைக்கூட வெட்டமாட்டானுங்கன்னு பூந்து விளையாட ஆரம்பிச்சிட்டான்.

நம்மளவிட இன்னோரு புத்திசாலித்தனமான காரியத்தையும் பண்ணினானுங்க. "பாத்திங்களா... பாத்திங்களா... தமிழ் நாடே இலங்கைக்கு எதிரா திரண்டு நிக்குது. இது இறையாண்மைக்கு ஆகுமா"ன்னு உலக நாடுகளுக்கிட்ட ஒப்பாரி வச்சான்.

அவ்வளவுதான் நமிதாவுக்கு நச்சுன்னு முத்தங் கொடுக்க காத்திக்கிட்டு இருக்கிற நம்ம ரசிகர் கூட்டம் மாதிரி இலங்கைக்குள்ள இறங்கி நாட்டாமை பண்ண காத்திக்கிட்டு இருந்த நாடுகள் எல்லாம் ஆயுதத்தை கொடுத்து
அலப்பறை பண்ண ஆரம்பிச்சுடுச்சுங்க.




இந்த இடத்தில மட்டும் தாங்க தலைவர் பிரபாகரன் தப்பு பண்ணிட்டாரு... "ஒருத்தனுக்கு எந்திரிச்சு நிக்கவே வக்கு இல்லையாம். அவனுக்கு ஒம்போது பொண்டாட்டியாம்" ன்னு சந்திரமுகியில ரஜினி வசனம் பேசுவாரு.

அது மாதிரி இங்க உள்ள மக்கள் பிரச்சினைகளைத் தீக்கவே வழியில்லையாம். இலங்கையில நின்னு ஏத்தம் கட்ட போறமுன்னு நம்ம வெத்துவேட்டு வெங்கட்ராமனுங்க சொன்னத கொஞ்சம் இசகு பிசகா நம்பிட்டாருங்க.

முதல்ல தமிழ்நாட்டில என்னமா சவுண்ட் கொடுத்தாங்க. பிரபாகரனுக்கு ஏதாவதுன்னா தமிழ்நாடே ரத்த வெள்ளத்தில் தத்தளிக்குமுன்னாங்க. நெருப்பு சூறாவளி வீசுமுன்னாங்க. தமிழனுக்கு மானம்தான் பெரிசு... இலங்கை தமிழ் மக்கள் உடம்பில சின்ன கீரல் பட்டாகூட சுனாமியா மாறி இலங்கையையே சுருட்டிருவமாக்கும்.  உசுரு எங்களுக்கு புடுங்கிப் போட்ட மசுருன்னு உதார் விட்டாங்க.

இப்படி அடிவயித்தில் இருந்து அடுக்கு மொழி வசனத்தை கக்கிவிட்டு ஏசி ரூமுக்குள்ள படுத்து எச்சி இலையை நக்கிக்கிட்டு இருக்காங்க. அங்க நம்ம தமிழ் சொந்தங்கள் முள் வேலிக்குள்ள மூச்சு முட்டிக்கிட்டு கிடக்கிறாங்க.

"அய்ஜலக்கா... அப்படி போடு... குய்ஜலக்கா... கும்மாங்குத்துன்னு" தமிழ்நாட்டில இருந்தவங்க கரகாட்டம் நடத்தாம இருந்திருந்தா...விடுதலைப் புலிகளை இலங்கை ராணுவத்தால் வீழ்த்தி இருக்க முடியாதுங்க. இது நான் சொல்லலைங்க.. ஆஸ்திரேலியாவில் இருந்து வந்த ஒரு நண்பர் கூறிய கருத்துங்க.




கட்டுன பொண்டாட்டிக்கிட்ட வீரத்தை கட்டில்ல காட்டணுமுங்க. ஒருவேளை பிள்ளையைக் கொடுக்க முடியலைன்னா வாயைப் பொத்திக்கிட்டு பேசாம இருக்கணுமுங்க. அதை விட்டுப்பிட்டு தோட்டா இல்லாத துப்பாக்கியை தூக்கி பிடிச்சு காக்காவைச் சுடப் போறேன்... கழுகைச் சுடப்போறேன்னு பாட்டுப் பாடிக்கிட்டு இருந்தமுன்னா பக்கத்து வீட்டுக்காரன் பந்து விளையாடிட்டு போயிருவானுங்க.

இலங்கை மக்களுக்கு ஆதரவு கொடுக்கிறதில்ல தப்பே இல்லைங்க. அது நம்ம உரிமைங்க. ஆனா.. சும்மா உசுப்பேத்தி உசுப்பேத்தி இருக்கிற மக்களை ரண களப்படுத்திறாதீங்க.

மொதல்ல உங்களுக்குள்ள ஒத்துமையா இருக்கப் பாருங்க. உதார்விட்டு உசுப்பேத்தாதீங்க. மக்கள் உணர்ச்சியைத் தூண்டி விட்டு அதில குளிர் காயாதீங்க. நீங்க என்ன சொன்னாலும் தமிழ் நாட்டு மக்களுக்கிட்ட எடுபடாதுங்க. அவுங்க சீரியல் மயக்கத்தில சீரழிஞ்சு கிடக்கிறாங்க.

பக்கத்துவீட்டுக்காரன் பட்டினியால வெடாவெட்டிக்கிட்டு கிடந்தாலும் என்னன்னு கேக்க மாட்டானுங்க நம்ம மறத் தமிழன். ஆனா... நயன்தாரா நாய்க்குட்டிக்கு உதட்டில உண்ணி கடிச்சா கூட நாலு நாளைக்கு தூங்க மாட்டானுங்க.

வீர மரணம் அடைஞ்ச உண்மையான வீரனோட (நம்ம ஹீரோக்கள் மாதிரி டூப்பு வீரன் இல்லைங்க) தந்தையாரின் ஆத்மாவை சாந்தி அடைய விடுங்க. அதையும் அரசியல் ஆக்கி அல்வா கிண்டாதீங்க.

உட்டாலங்கடி பேச்சுப் பேசி உயிரோட இருக்கிற அந்த வீரத் தாயின் கடைசி கால நிம்மதிக்கு உலை வச்சுடாதீங்க.

என்னோட கருத்தில முரண்பாடு இருந்தாலோ உங்களுக்கு உடன்பாடு இல்லையென்றாலோ கண்டிப்பாக சொல்லுங்க... திருத்திக்கிறேங்க. ஆனால், கோபம் மட்டும் படாதீங்க. இந்த முட்டாள்தனமான கோபம்தாங்க. மூத்த குடிமக்களாகிய நம்மை மத்தவன் காலை நக்கிப் பிழைக்கும் நாத்த குடிமக்களாக்கி வைச்சிருக்குங்க.

Wednesday, January 6, 2010

ஜக்குபாயும் ஜக்கு ஜக்காய் கண்ணீரும்

ஜக்குபாய் திரைப்படம் மக்குபாய் திரைப்படமாக மாறி சரத்குமார் குடும்பத்தைக் கண்ணீர்கடலில் மிதக்க வைத்திருக்கிறதாம். என்னா அழுகை அழுவுறாங்க.




 யாழ்பாணத்தில முள்வேலிக்கு நடுவுல மாட்டிக்கிட்டு அடுத்த வேளை உணவுக்கு அல்லாடுற அப்பாவி தமிழ் மக்களின் கண்களில் இருந்து கொட்டுற கண்ணீரை விட ஆயிரம் மடங்கு இல்ல ராதிகா அக்கா கண்ணுல அருவியா பொங்குது.

அதுதான் மருமகளைக் கெடுக்கிற மாமானார். அண்ணியைக் கெடுக்கிற கொழுந்தன், வேலைக்காரனோட தொடர்பு வச்சிருக்கிற வீட்டுக்காரம்மா...ன்னு நம்ம பண்பாட்டை உலக நாடுகளுக்கு பறை சாற்றுகின்ற சீரியல்களா எடுத்துத் தள்ளி பணத்தை அள்ளுறீங்களே... அது பத்தாதா...

ஏதோ ஜக்குபாய் நக்குபாயா மாறி இவங்க குடும்பத்தையே நாசமாக்கின மாதிரி இல்ல. அழுவாச்சி விடுறாங்க. ஹிரோஷிமாவில அணுகுண்டு விழுந்தபோது ஜப்பான்காரன் முகத்தில கூட இவ்வளவு சோகத்தை பாத்திருக்க முடியாது.

சரத்குமார் அண்ணாச்சிக்கு படத்திலதான் தன்முனைப்பு தடாலடி வேலை எல்லாம் போல இருக்கு.  நிஜத்தில அவரு சரத்குமார் இல்ல....சொரத்தில்லாத குமார்.

ரஜினிகாந்தில இருந்து சூரியா வரைக்கும் எல்லையைப் பிடுங்குன சீனாகாரனுக்கு எதிராக போராடப் போற மாதிரி வரிஞ்சு கட்டிக்கிட்டு நிக்கிறாங்க. எதுக்குங்க ஆவேசப்படுறீங்க.

திருட்டு விசிடி வந்தா என்ன... இணையத்தளத்தில வெளியான என்ன ஆயிடப் போகுது.... அடுப்படியில பூனை தூங்குனாலும் பெத்த பிள்ளை கஞ்சிக்கு அழுதாலும் கட்டின பொண்டாட்டி சாகக் கிடந்தாலும் அவ தாலிய வித்தாவது படம் பார்க்கிற பாமர ஜனங்க இருக்கும்போது உங்களுக்கு என்னங்க கவலை.




இதுல வீராதி வீரன் வெண்ணை வெட்டி வெள்ளச்சாமி பேரன்... சேரன் அண்ணாச்சி ஒரு ஆவேச ஐடியா கொடுத்திருக்காரு. ரசிகர்களை விட்டு வெட்டச் சொல்லப் போறாராம். யாரை.... இணையத்தளத்தில திருட்டுத்தனமா ஜக்குபாயை வெளியிட்ட ஆசாமியை.

ஏனய்யா... சேரனாரே பாதிக்கப்பட்டது நீங்க... நீங்க தானய்யா வெட்டணும். அதை விட்டுட்டு தீக்குளிக்கன்னா... தொண்டனுங்க... வெட்டணுமுன்னா... ரசிகனுங்கன்னு அந்த இளிச்சவாயி ரசிகனுங்க தலையில புளிச்ச தண்ணியை ஊத்துறீங்க.

ரசிகன் போயி அவன வெட்டுவான். அப்புறம் ஜெயிலுக்கு போவான். அவன் குடும்பம் நடுத்தெருவில நிக்கும். நீங்க ஹாயா... கோமணத்தை அவுத்து கொடியில போட்டுட்டு கும்மாளம் அடிச்சிக்கிட்டு இருப்பீங்க.

இதுக்கெல்லாம் விடிவுகாலம் வராதுன்னு நினைக்காதீங்க. ஒரு நாளைக்கு இந்த பாமர ஜனங்க முழிச்சிக்கிட்டாங்கன்னு வையுங்க. உங்களை சந்தியில நிக்க வச்சு. தொந்தியில உழுது நாத்து நட்டுருவாங்க.