Monday, December 22, 2014

அஞ்சா நெஞ்சன் அழகிரியின் அழுகுணி ஆட்டம்

அண்ணா ஆரம்பித்த திமுகவை மண்ணுக்குள் புதைக்கா விட மாட்டேன்னும் மல்லுக்கட்டிக்கிட்டு நிக்கிறது போல தெரியுதுங்க அஞ்சா நெஞ்சன்னு சொல்லிக்கிற அழகிரி செய்யுற அழுகுணி ஆட்டம்.

அப்பாவோ உலகத் தமிழர்களுக்கெல்லாம் வழிகாட்டியா இருக்கிற பெரிய தலைவருங்க. அவரு சொன்னா ஆயிரம் பேரு தீக்குளிக்க தயாரா இருக்காங்க.

ஆனா, பெத்த பிள்ளங்க மட்டும் அவரு சொல்றத காது கொடுத்துக் கேட்கவே மாட்டேங்குதுங்க. கட்டிப்புரண்டு சண்டை போடாத ஒன்னுதாங்க குறை. திரை மறைவில எக்கசக்க தில்லாலங்கடி வேலைகளைச் செய்யிறதில ரெண்டு பேருமே கில்லாடிங்களா இருக்கிறாங்க.

அண்ணன் அழகிரி இப்ப ஒரு அசால் குஜால் ஸ்டேட்மெண்ட் விட்டுருக்காருங்க. நான் யாரையும் கட்சியை விட்டு போகச் சொல்லவில்லை. அவங்களாத்தான் போறாங்கன்னு.

அதிமுகவுக்கு போன ரித்திஷ் இருக்காருங்களே... அழகிரி வாயத் தொறந்தா இவரு கொட்டாவி விடுவாரு. அவரு பாத்ரூமுக்குள்ள நுழைஞ்சா இவரு ஒண்ணுக்கு போவாரு. அவ்வளவு நெருக்கமுங்க.

ஆனா, அவரு திடீருன்னு அதிமுகவுக்கு அந்தர் பல்டி அடிச்சிட்டாரு. அழகிரி அண்ணனுக்கு அது பத்தி கவலை இல்லை.

மத்திய அமைச்சராக இருந்த போது எப்போதும் நெப்போலியன்தான் அண்ணன் அழகிரிக்கு எடுபிடி. அண்ணன் பல்லக்காட்டினா நெப்ஸ் விலக்கி விடுவாரு. அந்த அளவுக்கு பாசம்.

இப்ப என்னடான்னா நம்ம அரிவாள் வெட்டு நெப்ஸ் பாரதிய ஜனதாவுக்கு பறந்துருச்சு. போனதுதான் போச்சு அதுபாட்டுக்கு பொசுக்குன்னு ஒரு வார்த்தைய போட்டு தாக்கிட்டு போயிருச்சு.

அண்ணன் அழகிரி ஆசியோடுதான் பாரதிய ஜனதாவுக்கு போனேன்னு அது போட்ட குண்டு அழகிரி அடிவயிற்றில கிரைண்டர் ஓட வச்சுருச்சுங்க.

இனி சும்மா இருந்தா நம்ம மேல காவி வேட்டியப் போத்தி தம்பிமாருங்க கதகளி ஆடிடுவாங்கன்னு அதிரடியா அறிக்கை விட்டு திமுக தலைமையைத் திருப்திப்படுத்தி இருக்காருங்க நம்ம அழகிரி.

கட்சியின் ஓரத்துக்குக்கூட சேதாரம் ஏற்படுற மாதிரி நான் நடக்க மாட்டேன். கட்சி சும்மா பெல்ட் காங்கிரட்டுல நிக்கிற கட்டடம் மாதிரி ஸ்ட்ராங்க இருக்கணுமுன்னுதான் நான் அப்பப்ப அறிக்கை விடுறேன்னு இப்ப சொல்றாரு.

பொக்க வாயி கெழவி வாயில பொங்க வச்ச மாதிரி இருக்குங்க இவரு பேச்சு. நேத்து வரைக்கு இவங்க நெஞ்சை நக்கிக்கிட்டு இருந்தாங்களாம். இன்னைக்கு நஞ்சுபோன போன தலகாணி மாதிரி பிஞ்சு நிக்கிறாங்களாம்.

இது கேணப்பய வாயில கிச்சடி கிண்டுண மாதிரி இல்லை. திமுக காத்துப் போன பலூன் மாதிரி கவுந்து படுத்துக் கிடக்குங்க. அதை கோமா அளவுக்கு அண்ணன் கொண்டு போகாமல் இருந்தால் சரிதாங்க.

திமுக அழியாம இருக்கணுமுன்னா அண்ணன் அறிக்கை விடுறத நிப்பாட்டிட்டு அமைதியா இருக்குறதுதாங்க ஒரே வழி.

ஆனா, ஓட்டைப் பானை ஒழுகாம இருக்குமா... மூட்டைப்பூச்சி கடிக்கா இருக்குமா....அதுமாதிரி அண்ணன் வாயி அடங்கிக் கிடக்குமா....?. காலக் கணக்கை யார்தாங்க கணிக்க முடியும்.

No comments:

Post a Comment