அஞ்சலியோ.... குஞ்சலியோ.... ஒரு நடிகை காணாம போயிட்டாளாமாம்... என்னமோ இந்தியா தயாரிச்ச அக்னி ஏவுகணையே காணாம போயிட்ட மாதிரி பத்திரிக்கைக்காரனும் டிவிகாரனும் பத்திக்கிட்டு எரியுறானுக.
அஞ்சலிய கண்டுபிடிக்கலைன்னா இந்தியாவுக்கு எதிரா பொருளாதாரத்தடை விதிக்க வேண்டி வருமுன்னு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருக்கிறதா கேள்விங்க. ஜெனிவாவில தீர்மானம் போடுற திட்டம் இருப்பதாகக்கூட சொல்றாங்க.
அறிக்கை விடுறதுக்காவே ஐ. நா. சபை செயலாளராக இருக்கிற பான் கி மூன் முப்பது பக்க அறிக்கை ரெடி பண்ணி, அதை வாசிக்க முக்கிக்கிட்டு இருக்கிறதா பேசிக்கிறாங்க.
அந்த அளவுக்கு அஞ்சலி காணாம போன விஷயம் அகில உலக பிரச்சினையா மாறி பூமிப் பந்தே அக்னிக் குழம்பா தகிச்சிக்கிட்டு இருக்கிற மாதிரி நம்ம ரசிகக் கண்மணிக கண்ணீரும் கம்பலையுமா தவிக்கிறாங்க.
காவல்துறையில் இருக்கிற ஒரு அதிகாரி காணாமப் போயிட்டா கூட அதைப்பத்தி கமிஷனர் கவலைப்பட மாட்டார்... ஆனா... கர்மம் பிடிச்ச சினிமாகாரிங்க காணாமப் போயிட்டா... பசி நோக்காம... கண் துஞ்சாம... மெய் வருத்தம் பாராம.. பம்பரமா சுழலுவாறு..
இதில அஞ்சலி.... தானா காணாம போனாரா... இல்லை அவர யாரும் கடத்திக்கிட்டு போயிட்டாங்களான்னு பல கோணங்கள்ள போலீஸ் விசாரணையை முடுக்கி விட்டுருக்கிறதா மைக்க பாத்து பல்லைக் கடிச்சுக்கிட்டு பேட்டி கொடுப்பாரு.
அப்புறம் இதுக்கு ஒரு தனி டீம் அமைச்சு நம்ம வரிப்பணத்தை தின்னு தேடுதல் வேட்டை நடத்துவாங்க.
ஆனா அந்த அம்மா... தனக்கு பிடிச்ச ஆளோடு எங்கயாவது ரூம் போட்டு தமிழ் நாட்டுல நடக்கிற காமெடிய டிவில பாத்து விலா வலிக்க சிரிப்பாங்க.
அஞ்சலிய ஏமாத்தினது அவுங்க சித்தியா... நடிக்க வாய்ப்புக் கொடுத்த இயக்குனரான்னு நம்ம ரசிக குஞ்சுமணிங்க பட்டிமன்றம் நடத்திக்கிட்டு இருப்பாங்க.
நேத்துவரைக்கும் அஞ்சலியோட அல்ஜா குல்ஜா பண்ணுன ஆளுங்க அஞ்சலியா... அப்படின்னா யாருன்னு ஆச்சரியத்தோடு கேப்பாங்க.
அஞ்சலியும் இயக்குனரும் அலப்பறைன்னு படத்தோட செய்தி போட்ட பத்திரிக்கைகாரனுங்க... இதையும் புதுச்செய்தியா போட்டு புளகாங்கிதம் அடைவாங்க..
இதக் கொஞ்சம் மாத்துகங்கப்பா... ரசிக்கிற விஷயம் வேற... ருசிக்கிற விஷயம் வேறன்னு மக்களுக்கு புரிய வைக்க முயற்சி பண்ணுங்கப்பா... அஞ்சலி செய்தி அரைப்பக்கமும் அணுசக்தி விஞ்ஞானி அப்துல் கலாம் செய்தி அரை இஞ்சு வரும்போது மனசு வலிக்குதுப்பா.. நீங்களும் மாறுங்கப்பா..
அஞ்சலி காணாமப் போனதுக்கு அஞ்சலி கவிதை பாடிக்கிட்டு இருக்காம... அதை ஒரு செய்தியா மட்டும் பாருங்கப்பா...


No comments:
Post a Comment