Thursday, March 28, 2013
அல்வா அழகிரிக்கா... அதிமுவுக்கா....!
"ஆசைக்கு ஒன்று.. ஆஸ்திக்கு ஒன்று..." அடுத்த குழந்தை இப்போது வேண்டாம்... இரண்டுக்கு பிறகு எப்போதும் வேண்டாம்" இது தமிழ் நாட்டு அரசாங்கத்தின் குடும்பக் கட்டுபாடு திட்டம்.
அடித்தட்டு மக்கள் இதக் கடைப்பிடிக்கிறாங்களோ இல்லையோ கண்டிப்பாக அரசியல்வாதிகள் கவனத்தில வைச்சிருக்கனுமுங்க.. இல்லாட்டி இந்த தொன்னூறு வயசில கண்ணீரோடு காலத்தைக் கழிக்க வேண்டிய கட்டாயம் கலைஞர் கருணா நிதிக்கு ஏற்பட்டிருக்குமா?
செயற்குழுவாவது மண்ணாங்கட்டியாவதுன்னு அழகிரி... அழுகிரியா மாறி மதுரைக்கு ஜூட் விட்டுட்டாரு.. தலைவரு உத்தரவு போட்டா தீக்குளிக்கக் கூட தயாரா இருக்கான் திமுக தொண்டன்.
ஆனா ஆசையா பெத்த மகன் மீசையை முறுக்கிக் கிட்டு கிளம்பிட்டாரு.. தொண்டனுக்குன்னா முரசொலியில கண்ணீர் கடிதம் எழுதி வென்னீர் ஊத்தியிருப்பாரு.. இங்க அந்தப் பருப்பு வேகலை...
தந்தைக்கும் மகனுக்கும் நடுவில நடக்கும் பிரச்சினையை வச்சு கந்தர்ப்பம் சுட்டுப் பாக்கலாமுன்னு ஜெயலலிதா நினைக்கிறாருங்க. 2001 ல இது சாத்தியப்பட்டிருக்கலாமுங்க. ஆனா. இப்ப அழகிரிக்கு அல்வா குடுக்க முடியுமா?
அன்னைக்கு அவரு அரசியல்ல கத்துக்குட்டிங்க.. இப்ப அப்படி நினைக்க முடியாதுங்க. சந்தேகக் கேசுல ஜெயிலுக்கு போயி தில்லாலங்கடி தாதாவாக திரும்பி வந்த மாதிரி டெல்லி அரசியல் அவரைக் கில்லாடி அரசியல்வாதியாக மாத்தி இருக்க நிறைய வாய்ப்பு இருக்குங்க.
இந்த நிலையில அவரை வச்சு பகடையாட அதிமுக நினைக்கிறது.. சண்டி மாட கட்டி வண்டி இழுக்க முயற்சிக்கிறதுக்கு சமமுன்னு அரசியல்களத்தில நிக்கிற அடிமுட்டாள் தொண்டனுக்கு கூட நல்லா தெரியுமுங்க.
அதிமுக ஆட்சிக்கு வந்தவுடனே பெரிய பெரிய திமுக தலைவருங்களை எல்லாம் கபக்கு கபக்குன்னு அள்ளி ஜெயில்ல போட்டாங்க. மத்திய அமைச்சரா இருந்ததால அழகிரிக்கு அந்த சிக்கல் வரலை.
இப்ப அமைச்சர் பதவி அம்பேல்.. ஆனா.. அவரை தூக்க அதிமுக விரும்பலை. கழகத்தில அவரு செய்யிற கலகம் நாடாளுமன்ற தேர்தலில நல்ல அறுவடைய தரும்கிறது அதிமுக தலைமையின் கணக்கு.
ஆனா.. அது தப்புக்கணக்குங்கிறது எதிர்காலம் உணர்த்தப் போகிற உண்மைங்கிறதை அதிமுக உணருவது புத்திசாலித்தனுமுங்க..
அழகிரி தலைமைப்பதவிக்கு அடம்பிடிப்பாரு.... ஆத்திரப்படுவாரு.. ஆவேசப்படுவாரு.... அதே நேரத்தில அதுக்காக திமுக அஸ்திவாரத்துக்கு வெடி வச்சாருன்னா.. பாதிக்கப்போற முதல் ஆள் அவருதாங்கிறத அவரைச்சுத்தி இருக்கிறவங்க நல்லாவே சொல்லி இருப்பாங்க.
அல்வா திங்கப் போறது அழிகிரியா... அதிமுகவா... பொறுத்திருந்து பார்ப்போம்..
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment