Friday, January 8, 2010
மகுடி வாசிக்கலாமா மருத்துவரே...
21-ஆம் நூற்றாண்டின் மாவீரன் பிரபாகரனின் தந்தை இறந்திட்டாருங்க. அவருக்கு நமது வீரவணக்கத்தை தெரிவிப்பது கடமையும் உரிமையும் ஆகுமுங்க.
அதே நேரத்தில அவரோட மரணத்தை வச்சு மகுடி வாசிக்கிற அசிங்கத்தை தமிழ்நாட்டு தலைவர்கள் ஆரம்பிச்சிருக்காங்க. இது திட்டமிட்ட சதின்னும் மருத்துவர் ராமதாஸ் கொந்தளிச்சு நிக்கிறாருங்க.
இப்படி கொந்தளிச்சு கொந்தளிச்சு தானே உலகத்திலேயே மாபெரும் விடுதலை இயக்கமா இருந்த விடுதலைப் புலிகளை குழி தோண்டி புதைச்சீங்க. இன்னும் என்னையா செய்யணுமுன்னு நினைக்கிறீங்க.
நீங்க இப்படி தைப்பூசத்துக்கு காவடி எடுத்து ஆடுற மாதிரி ஏடாகூடாமா ஏதாவது பண்ணினா... வேலு பிள்ளை பொணத்தை வீதியில போட்டுட்டு ராஜபக்சே வேடிக்கை பாத்துக்கிட்டு இருக்கப் போறானுங்க.
நீங்க இங்க வேட்டைக்காரன் விஜய் மாதிரி " நான் அடிச்சா தாங்க மாட்டே... நாலு மாசம் தூங்க மாட்டே...முழுசா வீடு போயி சேர மாட்டே"ன்னு டையக்கோ டம்மக்கோ பாடி டப்பாங்குத்து போட்டுக்கிட்டு இருக்க வேண்டியதுதானுங்க.
விடுதலைப் புலிகள் அவுங்க பாட்டுக்கு வியூகம் அமைச்சு இலங்கை ராணுவத்தின் கண்கள்ல விரலை விட்டு ஆட்டிக்கிட்டிருந்தாங்க. அந்த வெற்றியில குளிர் காய நினைச்ச நம்ம வெத்து வேட்டு தமிழ் நாட்டு அரசியல்வாதிங்க சிலர் " மாவீரன் நெப்போலியனே... மானங்காக்க வந்த மாமன்னன் ராஜ ராஜனே... அல்டி மேட் கிங் அலெக்ஸாண்டரே" ன்னு மேடை கட்டி வாண வேடிக்கை விட்டாங்க.
"இதோ வந்திருச்சு தமிழ் ஈழம்... தமிழனுக்கு தனி நாடு.... ஆறு கோடி தமிழ் வீரனுங்க மூத்திரம் பேஞ்சே ராஜ பக்சே மூச்சை நிறுத்திடுவாங்க. எச்சி துப்பியே இலங்கையை அழிச்சிடுவாங்க" ன்னு தொண்டை கிழியக் கத்தி சும்மா சிலாவரிசை எடுக்க ஆரம்பிச்சாங்க.
முதல்ல ராஜபக்சே நம்ம ஆளுகளைப் பாத்து பயந்தது உண்மைதானுங்க. அப்புறம்தான் பாத்தான்... இவங்க வாழப்பழத்தைக்கூட வெட்டமாட்டானுங்கன்னு பூந்து விளையாட ஆரம்பிச்சிட்டான்.
நம்மளவிட இன்னோரு புத்திசாலித்தனமான காரியத்தையும் பண்ணினானுங்க. "பாத்திங்களா... பாத்திங்களா... தமிழ் நாடே இலங்கைக்கு எதிரா திரண்டு நிக்குது. இது இறையாண்மைக்கு ஆகுமா"ன்னு உலக நாடுகளுக்கிட்ட ஒப்பாரி வச்சான்.
அவ்வளவுதான் நமிதாவுக்கு நச்சுன்னு முத்தங் கொடுக்க காத்திக்கிட்டு இருக்கிற நம்ம ரசிகர் கூட்டம் மாதிரி இலங்கைக்குள்ள இறங்கி நாட்டாமை பண்ண காத்திக்கிட்டு இருந்த நாடுகள் எல்லாம் ஆயுதத்தை கொடுத்து
அலப்பறை பண்ண ஆரம்பிச்சுடுச்சுங்க.
இந்த இடத்தில மட்டும் தாங்க தலைவர் பிரபாகரன் தப்பு பண்ணிட்டாரு... "ஒருத்தனுக்கு எந்திரிச்சு நிக்கவே வக்கு இல்லையாம். அவனுக்கு ஒம்போது பொண்டாட்டியாம்" ன்னு சந்திரமுகியில ரஜினி வசனம் பேசுவாரு.
அது மாதிரி இங்க உள்ள மக்கள் பிரச்சினைகளைத் தீக்கவே வழியில்லையாம். இலங்கையில நின்னு ஏத்தம் கட்ட போறமுன்னு நம்ம வெத்துவேட்டு வெங்கட்ராமனுங்க சொன்னத கொஞ்சம் இசகு பிசகா நம்பிட்டாருங்க.
முதல்ல தமிழ்நாட்டில என்னமா சவுண்ட் கொடுத்தாங்க. பிரபாகரனுக்கு ஏதாவதுன்னா தமிழ்நாடே ரத்த வெள்ளத்தில் தத்தளிக்குமுன்னாங்க. நெருப்பு சூறாவளி வீசுமுன்னாங்க. தமிழனுக்கு மானம்தான் பெரிசு... இலங்கை தமிழ் மக்கள் உடம்பில சின்ன கீரல் பட்டாகூட சுனாமியா மாறி இலங்கையையே சுருட்டிருவமாக்கும். உசுரு எங்களுக்கு புடுங்கிப் போட்ட மசுருன்னு உதார் விட்டாங்க.
இப்படி அடிவயித்தில் இருந்து அடுக்கு மொழி வசனத்தை கக்கிவிட்டு ஏசி ரூமுக்குள்ள படுத்து எச்சி இலையை நக்கிக்கிட்டு இருக்காங்க. அங்க நம்ம தமிழ் சொந்தங்கள் முள் வேலிக்குள்ள மூச்சு முட்டிக்கிட்டு கிடக்கிறாங்க.
"அய்ஜலக்கா... அப்படி போடு... குய்ஜலக்கா... கும்மாங்குத்துன்னு" தமிழ்நாட்டில இருந்தவங்க கரகாட்டம் நடத்தாம இருந்திருந்தா...விடுதலைப் புலிகளை இலங்கை ராணுவத்தால் வீழ்த்தி இருக்க முடியாதுங்க. இது நான் சொல்லலைங்க.. ஆஸ்திரேலியாவில் இருந்து வந்த ஒரு நண்பர் கூறிய கருத்துங்க.
கட்டுன பொண்டாட்டிக்கிட்ட வீரத்தை கட்டில்ல காட்டணுமுங்க. ஒருவேளை பிள்ளையைக் கொடுக்க முடியலைன்னா வாயைப் பொத்திக்கிட்டு பேசாம இருக்கணுமுங்க. அதை விட்டுப்பிட்டு தோட்டா இல்லாத துப்பாக்கியை தூக்கி பிடிச்சு காக்காவைச் சுடப் போறேன்... கழுகைச் சுடப்போறேன்னு பாட்டுப் பாடிக்கிட்டு இருந்தமுன்னா பக்கத்து வீட்டுக்காரன் பந்து விளையாடிட்டு போயிருவானுங்க.
இலங்கை மக்களுக்கு ஆதரவு கொடுக்கிறதில்ல தப்பே இல்லைங்க. அது நம்ம உரிமைங்க. ஆனா.. சும்மா உசுப்பேத்தி உசுப்பேத்தி இருக்கிற மக்களை ரண களப்படுத்திறாதீங்க.
மொதல்ல உங்களுக்குள்ள ஒத்துமையா இருக்கப் பாருங்க. உதார்விட்டு உசுப்பேத்தாதீங்க. மக்கள் உணர்ச்சியைத் தூண்டி விட்டு அதில குளிர் காயாதீங்க. நீங்க என்ன சொன்னாலும் தமிழ் நாட்டு மக்களுக்கிட்ட எடுபடாதுங்க. அவுங்க சீரியல் மயக்கத்தில சீரழிஞ்சு கிடக்கிறாங்க.
பக்கத்துவீட்டுக்காரன் பட்டினியால வெடாவெட்டிக்கிட்டு கிடந்தாலும் என்னன்னு கேக்க மாட்டானுங்க நம்ம மறத் தமிழன். ஆனா... நயன்தாரா நாய்க்குட்டிக்கு உதட்டில உண்ணி கடிச்சா கூட நாலு நாளைக்கு தூங்க மாட்டானுங்க.
வீர மரணம் அடைஞ்ச உண்மையான வீரனோட (நம்ம ஹீரோக்கள் மாதிரி டூப்பு வீரன் இல்லைங்க) தந்தையாரின் ஆத்மாவை சாந்தி அடைய விடுங்க. அதையும் அரசியல் ஆக்கி அல்வா கிண்டாதீங்க.
உட்டாலங்கடி பேச்சுப் பேசி உயிரோட இருக்கிற அந்த வீரத் தாயின் கடைசி கால நிம்மதிக்கு உலை வச்சுடாதீங்க.
என்னோட கருத்தில முரண்பாடு இருந்தாலோ உங்களுக்கு உடன்பாடு இல்லையென்றாலோ கண்டிப்பாக சொல்லுங்க... திருத்திக்கிறேங்க. ஆனால், கோபம் மட்டும் படாதீங்க. இந்த முட்டாள்தனமான கோபம்தாங்க. மூத்த குடிமக்களாகிய நம்மை மத்தவன் காலை நக்கிப் பிழைக்கும் நாத்த குடிமக்களாக்கி வைச்சிருக்குங்க.
Subscribe to:
Post Comments (Atom)



No comments:
Post a Comment