Friday, December 19, 2014

காங்கிரஸ் கட்சி யானை... காதுக்குள் புகுந்த கட்டெறும்பு குஷ்பு?


காங்கிரஸ் கட்சிக்காரங்க எல்லாம் இப்ப கிளுகிளுப்பில கிடக்கிறாங்களாம். குஷ்பு வந்ததும் போதும் கிழடு கெட்டைகூட முகத்துக்கு பாலீஷ் போட்டு பளபளப்பா கூட்டத்துக்கு கிளம்பி வர்றாங்களாம்.
இது ஒரு பக்கம் இருக்க, இந்தக் குஷ்பு பெரிசா என்னத்த கிழிக்கப் போறாங்க என்கிற பேச்சு அந்தக்கட்சிக்குள்ளேயே அரசல்புரசலா அடிபடுறதும் காதுக்கு கேட்கத்தான் செய்றதுங்க.
சின்னக் குழந்தையாட்டம் அந்தம்மா சிணுங்கிறது பெரிய விவகாரத்தில கொண்டுபோய் விட்டுடுமுன்னு அவரோடு வீட்டுக்காரரு படுக்கை அறையில் இருக்கும்போது பம்மிப் பம்மி குஷ்பு காதுல ஓதுறாராம்.
திமுக கொள்கை இல்லாத கட்சின்னு அந்தம்மா போகிற போக்கில ஒரு குண்டைத்தூக்கிப் போட்டுட்டு போயிருச்சு. நம்ம தளபதி அதுக்கு பதில் சொல்றதா வேண்டாமான்னு இப்ப பல்லக் குத்திக்கிட்டு நிக்கிறாராம்.
விடுதலைப்புலிகள் எல்லாம் வெத்து வேட்டுக்கள்ன்னு அந்தம்மா வீசிய அணுகுண்டு அயல்நாடுகளில் வசிக்கிற ஈழத்தமிழர்கள் மத்தியில அதிர்ச்சி அலையை உண்டாக்கி இருக்காம்.

 
இனி குஷ்பு வெளிநாடு போனா குனிய வச்சு கும்மியடிக்கிற நிலை வந்தாலும் வரலாமுன்னு குஷ்புவோட வீட்டுக்காரரு பெருமூச்சுல பொங்க வச்சுக்கிட்டு இருக்காராம்.
புதுசா கட்சியில சேந்தா இப்படி புல்புல்தாரா வாசிக்கிறது வாடிக்கைதான். அதுக்கா எடக்கு முடக்கா ஏதாச்சும் நடந்தா வடிவேலு கணக்கா வீட்டுக்குள்ள புல்லு வெட்டிக்கிட்டு கிடக்க வேண்டியதுதாங்கிறது சுந்தரோட சிந்தனையாம்.
பேயக் கூட கட்டி, பேசமா மூலையில உட்கார வச்சுடலாம். ஆனா நம்ம குஷ்பூ அக்கா வாயக் கட்டுறது என்ன சாதாரண காரியமா?
பாலாபிஷேகமுன்னு ஒரு பழைய படம். ஜெய்சங்கர் கதாநாயகன். அசோகன் அப்பா. அசோகன் சின்ன வீடா ராஜசுலோசனா.
ஒரு கட்டத்தில அசோகனுக்கு கோபம் வந்து வீட்ட விட்டு ராஜசுலோசனாவை போகச் சொல்லிடுவாரு. அந்தம்மா காவி சேலையைக் கட்டிக்கிட்டு இமயமலைக்கு தவம் பண்ணப் போறதா சொல்லி கிளம்புவாங்க.
அடியே இங்க என்னைக் கெடுத்தது போதாதா... இமயமலையில தவம் பண்ணிக்கிட்டு இருக்கிற சாமியாருங்களை எல்லாம் கெடுக்கப் போறியான்னு அசோகன் ஒரு வசனம் பேசுவாரு.
அது மாதிரி திமுகவில இருக்கும்போது என்னென்னவோ பிரச்சினைகள். கருணாநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல கோபாலபுரம் போனபோது செருப்பால அபிஷேகம் பண்ணி நெருப்பால அர்ச்சனை செஞ்சாங்களாம். இத நான் சொல்லலைங்க.பத்திரிகையில வந்த செய்திங்க.
காங்கிரசோ பல கோஷ்டிகள கொண்ட பல்லாங்குழி கட்சி. இந்தம்மா அதுக்குள்ள இன்னொரு குழி தோண்டப் போறாருங்கிறது நிச்சயம். மூக்குறுஞ்சி இளங்கோவனுக்கு ஏழரை ஆரம்பிச்சிருச்சுன்னு அந்தக் கட்சிக்குள்ளேயே முணுமுணுப்பு மொளைச்சிருக்குங்க.
ஆனா, குஷ்பு அசகாயசூரிங்க.எதுக்கும் அசைய மாட்டாரு.யாருக்கும் அஞ்ச மாட்டாரு.அதுமட்டுமில்ல, அகில இந்திய காங்கிரஸ் தலைவரா வர்றதுக்கான அடுத்த கட்ட வேலையை தொடங்கிட்டதாக்கூட கேள்வி.
சோனியா காந்திக்கு பிரச்சினை இல்லைங்க. காலம் கடந்துருச்சு. ராகுல்காந்திதான் ராத்தூக்கத்தை தொலைச்சிட்டு படுக்கையைப் பிராண்டிக்கிட்டு இருக்கிறதா சொல்றாங்க.
என்னமோ போங்க காங்கிரஸ் கட்சிங்கிற யானையின் காதுக்குள்ள புகுந்த கட்டெறும்புதான் குஷ்புன்னு அனுபவமுள்ள அந்த நாளைய சில தலைவருங்க தலையில அடிச்சிக்கிறாங்களாம்.
மகாத்மா காந்தி இருந்த காங்கிரஸ் வாழ்க... மாமா நேரு வளர்த்த காங்கிரஸ் வாழ்க. அன்னை குஷ்பு அரவணைத்த காங்கிரஸ் வாழ்க.ஜெய்கிந்த்.

No comments:

Post a Comment