Thursday, December 3, 2009

அன்பு சிவத்துக்கு நன்றிங்க...

நம்ம மச்ச குருக்கள் தேவநாதன்கிட்ட ஒரு தொலைக்காட்சி நடிகையும் மாட்டி இருக்கிறாராமே... சபாஷ்... சரியான குருக்கள்தான் நம்ம தேவநாதன்.


கண்ணி வச்சு பிடிச்ச மாதிரி இப்படி சொல்லி வச்சு சொக்கட்டான் விளையாடிய தேவநாதனுக்கு என்ன விருது கொடுத்தாலும் தகுமுங்க. ஆனா, இவருக்கிட்ட மடங்காத பெண்களை சும்மானாச்சுக்கும் கையைக் காட்டி மாட்டி விட்டுறப்போறாருங்க.

தேவநாதன் செய்தியைப் படிச்சிட்டு அருமைச் சகோதரர் அன்பு சிவம் ஒரு கேள்வியை எழுப்பி இருக்காருங்க.

மச்சேசுவரர் போனை கெடுத்ததுக்கு பதிலா மொதல்லயே வேற எதையாவது(?) கெடுத்திருந்தா இத்தனை பிரச்சனையும் வந்திருக்கவே வந்திருக்காதே... என்ன சொல்லறீங்க? :)

ஆணவம், கன்மம், மாயை...ன்னு மூனு அம்சம் இருக்குதுங்க. ஒரு காரை அளவுக்கு மீறிய வேகத்தில ஓட்டி கட்டுப்படுத்த முடியாம எதிலையாவது மோதி சாவதுங்க. இது ஆணவத்துக்கு கிடைத்த தண்டனை.

காரை வேகமாக ஓட்டினாலும் உடனே விபத்து நடக்காது. காலப் போக்கில் என்றாவது இறப்பு ஏற்படும். இது கன்மம்...அதாவது போன ஜென்ம பாவ புண்ணிய பலனால் ஏற்படுவது.

மாயை என்பது கண் சிமிட்டும் நேரத்தில் நடப்பது. இதில் இரண்டாவது ரகம்தான் தேவநாதனுக்கு நடந்தது. எந்தக் காரியத்தையும் உடனே தடுத்துவிட முடியாது என்பதை காட்டுவதற்காகத்தான் இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்கள் எழுதப்பட்டன.

இருந்தாலும் தவறு நடப்பதற்கு முன்னாடி தடுத்திருந்தா பல பேருடைய நிம்மதியைக் காப்பாத்தி இருக்கலாமுங்க. என் எழுத்துக்கு அன்போடு இடையுரையாடிய அன்பு சிவத்துக்கு நன்றிங்க.

No comments:

Post a Comment