நம்ம திவாரி ஐயா கதையைப் படிக்கப் படிக்க கண்ணக் கட்டுதுங்க. அவரு சாப்பிடும்போது பொண்ணுங்க அம்மனமா இருந்தாத்தான் ஐயாவுக்கு சோறு தொண்டைக்குழிக்குள்ள இறங்குமாமே...
உவ்வே... என்ன எழவெடுத்த டேஸ்ட்டுடா இது. நல்ல வேளை அவருக்கு புள்ளை குட்டிங்க இல்லை. அதுல பொம்பிளைப்பிள்ளைங்க இருந்திருந்தா... கொஞ்சம் நினைச்சுப் பாருங்க...
நடக்கும்போது கூட அழகான பொண்ணுங்க பக்கத்தில பொறந்த மேனிக்கு வந்தாத்தான் ஐயாவுக்கு வாக்கிங் போகவே பிடிக்குமாம். என்ன கொடுமைடா இது.
அது சரிங்க... இவரு பாட்டுக்கு பிரான்சு நாட்டில இருக்கிற பிறந்த மேனி கிளப் மாதிரி ஆளுனர் மாளிகையில அலப்பறை பண்ணி இருக்கிறாரு. இதை யாருமே கண்டுக்கலையா... அல்லது கிடைச்சவரைக்கும் லாபமுன்னு அங்க போற அரசியல்வாதிகள் கில்லி அடிச்சாங்களா...
அவரு புரண்டு எந்திரிச்சது பொம்பளைங்க மேல இல்லைங்க... அப்பாவி மக்கள் கட்டுற வரிப்பணத்து மேலேங்கிறது இந்த மானங்கெட்ட ஜனங்களுக்கு எங்கே தெரியப் போகுதுங்க.
85 வயதிலையும் இவரு இப்படி ஏத்தம் கட்டி இறைச்சிருக்காருன்னா... வாலிப வயசுல கிண்டிக் கிழங்கெடுத்து நோண்டி நொங்கெடுத்து இருக்க மாட்டாரு...
அதுசரி... இந்த காங்கிரஸ் கட்சிக்காரங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்காங்க. குறட்டை விட்டாவே அன்னை சோனியாவுக்கு மொட்டைக் கடதாசி போட்டுருவாங்க. திவாரி பண்ணுன சவாரி விஷயத்தை மட்டும் கமுக்கமா விட்டுட்டாங்களே....
இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு வரத்துடிக்கும் ஆந்திர இளசுகளுக்கு திவாரி சிம்ம சொப்பனமாக இருக்காறாமுங்க. 40 வயதுக்கு கீழே இருந்தா மட்டும் இளைஞர்ன்னு ஒத்துக்க முடியுமுங்களா...
திவாரி மாதிரி காய கல்ப கந்தசாமி தலைவரா இருந்தாத்தானே அந்தப் பதவிக்கு பெருமைன்னு சிலர் காத்துவாக்கில செய்தியைக் கசிய விட்டா... திவாரி இளைஞர் காங்கிரஸ் பதவியை சுலபமா தட்டிக்கிட்டு போயிட மாட்டாரு...ன்னு பயப்படுறாங்களாம்.
எது எப்படியோ... எசகு பிசகா மாட்டிக்கிட்டு வெளியே வந்திருக்கு திவாரியோட திருகுதாள தில்லாலங்கடி வேலை. இது மாதிரி எத்தனை கண்ணறாவி கூத்து இந்த நாட்டில நடந்துக்கிட்டு இருக்குதோ....
Tuesday, December 29, 2009
Subscribe to:
Post Comments (Atom)

இது மாதிரி எத்தனை கண்ணறாவி கூத்து இந்த நாட்டில நடந்துக்கிட்டு இருக்குதோ....//
ReplyDeleteசந்தேகமே இல்லாம இன்னும் நெறயா கொடுமைகள் நடக்குதுங்க..
இங்கு
எருமையைப் போன்ற
பொறுமை முக்கியம்...
ஏன்னா..
இந்தியா
சனநாயக நாடு..