நம்ம நித்தி... நான் ஒரு சமூக சேவகன்னு சொல்லி நம்மை எல்லாம் புல்லரிக்க வச்சி இருக்காருங்க. அவரு சமூக சேவையைத்தான் வீடியோவில பாத் தோமே. ஒரு தடவை வீட்டுக்கு வந்தாவே லட்ச ரூபா வாங்குவாறாமே. இது எப்படிப்பட்ட சமூக சேவைங்க.
அப்புறம் நம்ம ரஞ்சிதா மேலே காலைத் தூக்கி போட்டு கபடி விளையாட்டுக் காட்டுறாரே இது தாங்க சூப்பர் சமூக சேவை. அப்புறம் படுக்கையில இருந்து திடீர்னு மாத்திரை சாப்பிட பல்டி வித்தை காட்டி காலைத் தூக்கிக்கிட்டு
கோமணத்தோட எழுந்திருக்கிறாரே இது சூப்பரோ சூப்பருங்க.
இப்படி பணத்துக்கு பணம் ஜாலுக்கு குஜாலுன்னு கும்மாங்குத்து குத்திட்டு ஆன்மீக ஆராய்ச்சியாளன், பாலியல் பயிற்சியாளன்னு இவ்வளவு தைரியமா எதனால் சொல்ல முடியுது தெரியுங்களா.... கேக்கிறவன் எல்லாம் கேணைப்பயல்ன்னு நினைக்கிறதாலேதாங்க.
இன்னொரு செய்தியும் சொல்றாருங்க. இனிமேத்தான் அவருக்கு மவுசு கூடப்போகுதுன்னு. அதுல என்னங்க சந்தேகம்... பக்கத்து வீட்டுக்காரன் பசியால துடிக்கிறத ரசிக்கிற நம்ம பணக்கார வர்க்கம், நித்தி மாதிரி போலி ஆசாமிங்ககிட்ட பணத்தையும் கொடுத்து .... சொல்றதுக்கே நாக்கு கூசுதுங்க... அதுக்கும் அனுப்பி வைக்கிறாங்களே... இந்த வெட்கக்கேட்டை எங்க போயி சொல்றதுங்க.
எனக்கு நம்ம நித்திக்கிட்ட பிடிச்சதே.... நாணமோ வெட்கமோ இல்லாம பேசுற அவருடைய ஸ்டல்தாங்க. சல்லாப சாமியாருன்னா இந்த தில்லு வேணுமுங்க. இவருக்கே உடம்பு சரியில்லையாம். அந்த நேரத்தில சேவை செய்யத்தான் ரஞ்சிதா போனாங்களாம். ரஞ்சிதா அமெரிக்காவுல மருத்துவப்பட்டம் படிச்சவரு பாருங்க...சரி இப்படிப்பட்ட ஆளு நோயைத் தீப்பான்னு சொல்லி லட்ச லட்சமா கொட்டி அழுத நம்ம முட்டா ஜனங்களை என்னன்னு சொல்றதுங்க.
நம்ம நித்தி வழக்கில்லாம வெளிய வர்றதுக்கு சான்சு அதிகமா இருக்குங்க. ஏன்னா. இவரோட வழக்கை கர்நாடக மாநிலத்துக்கு மாத்தி இருக்காங்க. கர்நாடக முதல்வர் எடியூரப்பா... நம்ம நித்திக்கு எடுபிடி கணக்கா இடுப்புப் பிடிக்க தயாரா இருப்பவரு... இந்து சமய பெரியவரு ராமகோபாலன் வேறு நித்தி செஞ்சது சட்டப்படி தப்பு இல்லைன்னு வக்காலத்து வாங்குறாரு. அப்புறம் என்னங்க.. நம்ம நித்தி... சும்மா குத்தி கிழிச்சிற மாட்டாரு.
பிரம்மசரியத்தின் பிதா மகன்னு சொல்லிக்கிட்ட நித்தி... தனி அறைக்குள்ள மாத்திரையைச் சாப்பிட்டு மல்லாந்து கிடக்கிறாரு. கட்டுன புருசனுக்கு கடுக்கா கொடுத்துட்டு ரஞ்சிதா அக்கா... சாமியாருக்கு சவரச்சனை செய்யிறாங்க. முத்தா கொடுக்கிறாங்க. மேலே ஏறிப்படுத்து குண்டலினியைக் குத்திக் குத்திக் கிளப்புறாங்க. இதில சமாதி நிலையில இருந்தேன்னு வேற நித்தி சால்ஜாப்பு சொல்றாருங்க. சமாதி நிலையில இருக்கிறவரு எதுக்குங்க கோமணத்துக்குல கையை விட்டு கூழு கிண்டிக்கிட்டு இருக்காரு.
அப்புறம் விளக்கை அணைச்சிட்டு பாலியல் ஆராய்ச்சியைப் பக்குவமா நின்னு நிதானிச்சு செய்யுறாங்க. இதுல என்ன சட்ட விரோதம் இருக்குன்னு சில விளங்காத வெளக்கெண்ணெய் கருப்பனுங்க கேக்கிறாங்க. இதில இருந்து என்ன தெரியுதுன்னா. மலையாளத்து பிட்டு படம் மாதிரி ரெண்டு பேரும் விளக்கு வெளிச்சத்தில ஜல்லிக்கட்டு நடத்தலைன்னு இவங்க வருத்தப்படுறாங்க போல இருக்கு.
இந்த வருத்தம் எங்களுக்கே இருக்கே.. அப்படி நடந்து இருந்தா நம்ம நித்திக்கு சல்லாப சாமியார்ன்னு பட்டங்கொடுத்து ரசிகர் மன்றம் ஆரம்பிக்க ஒரு கூட்டம் தயாரா இருக்குதுங்களே...
நம்ம நித்தி உலகத்துக்கு வழிகாட்ட வந்த மகான்னு சொல்லிக்காம....இரக்கமில்லாத இளிச்சவாயி பணக்காரங்ககிட்ட கோடி கோடியா பணத்தைக் கறக்காம... அவரு பாட்டுக்கு நம்ம ரஞ்சிதா...குஞ்சிதா.... கோபிகா...குந்தவைன்னு யாருகூட ஜுஜ்ஜிலிப்பா பண்ணி இருந்தாலும் அதை யாருங்க பெரிசா எடுத்துக்கப்போறா....
இந்து சமயத்தின் பெருமையை சிகாகோவில பேசி உலகம் பூராம் பரவச் செய்த விவேகாநந்தர் மாதிரி காவி வேட்டி கட்டி வேஷம் போட்டு பொண்ணுங்ககிட்ட எல்லாம் பூப்பந்து விளையாடிய இந்த நித்திய.... இந்து சமயத் தலைவர்கள் ஆதரிப்பது வேடிக்கையாக இருக்குதுங்க. ஒருவேளை அவங்களும் இப்படித்தானோ....
Monday, March 15, 2010
Subscribe to:
Post Comments (Atom)


hey superpa indha mathiri neraya eludhunga unmaya
ReplyDelete