நித்திக்கு ரஞ்சி ( ரஞ்சிதாவோட சுருக்கமுங்கோ) கொஞ்சி கொஞ்சி எண்ணெய் தேய்ச்சி ( எண்ணெய்யோ வேறு என்ன எழவோ) விடுற காட்சியை பாத்துப் பாத்து பரவசமானேனுங்கோ. நீங்க பாத்தீங்களா....
அட...அட... அட... என்னா கிளுகிளுப்பு.. என்னா... சிலுசிலுப்பு... நான் சொல்றது நம்ம ரஞ்சி அக்கா முகத்திலங்கோ... ஏதோ ஒரு தைலத்தை எடுத்து ரஞ்சி அக்கா.. நித்திக்கிட்ட வருறாங்க. நித்தி மெதுவா காவி துணியை நீக்குறாரு.. ஒரு தாய் பச்சக்குழந்தையை படுக்க வச்சு பதமா எண்ணெய் தேக்கிற மாதிரி குறும்புச் சிரிப்போட நெருங்கி நின்னு நீவி விடுறாங்க.
முகத்தில தேய்க்கும் போது செல்லமா ஒரு சின்ன தட்டு தட்டுறாங்க. காது இடுக்கைக் கூட ரஞ்சி அக்கா விடலைங்க. அப்ப நித்தி உடுப்பைக் கழட்டுற அழகே அழகுங்க. நித்தி உடம்பு புடலங்காய் மாதிரி வளைவாத்தாங்க இருக்கு. தெம்பு கொஞ்சம் கம்மி மாதிரிதான் தெரியுதுங்க. நான் சொல்றது உடம்பு தெம்பை மட்டும்தாங்க. மத்ததைப் பத்தி இல்லைங்க.
நித்தியோடு நெத்தியில வலிக்காம வாழத்தண்டு கையால ரஞ்சி அக்கா தடவுறாங்க.. மண்டைக்குள்ள விரலை விட்டு நித்தியோட நீளமான முடிக்குள்ளாற கிச்சுக் கிச்சு தாம்பளம் விளையாடுறாங்க... அந்தக் காட்சியில ரஞ்சி முகத்தில பொங்கி வழியிற ஒளியே அலாதியானதுங்கோ... சாமியாரு மத்தவங்களுக்கு குண்டலினியை எழுப்பினாரோ இல்லையோ ரஞ்சி அக்காவுக்கு உறியடிச்சு உசுப்பேத்தி இருக்காருங்கோ..
ரஞ்சி அக்கா.. கிட்ட ஒரு சின்ன கேள்விங்க. ஆமா.. இந்த விளையாட்டை உங்க வீட்டுக்காரருக்கிட்ட விளையாண்டு இருந்தா புருசன் புட்டுக்கிட்டு போயிருக்க மாட்டாருங்களே.... நித்தி மாதிரி சாமியாருக்கு செய்யிற சேவையில ஆயிரத்தில ஒரு பங்கை கட்டுன கணவனுக்கு பண்ணுனா பொண்டாட்டி முந்தானைய விட்டு புருசமாருங்க தப்பிச்சு போக முடியுங்களா...
நமக்கெல்லாம் அந்த ஆசனம் இந்த ஆசனமுன்னு நித்தி சொல்லி பஜனை பாட வச்சுட்டு அது பாட்டுக்கு டிவியில குத்துப்பாட்டு பாத்துக்கிட்டு கும்மாளமா இருக்குதுங்க. ரிமோட்டை நிமிசத்துக்கு ஒருதரம் மாத்தி அத்தனை சேனலையும் அலசிக்கிட்டுத்தானே இருக்கு. சேனலே இந்தப் பாடுபட்டா மாட்டுன சேலைங்க என்ன பாடுபட்டிருக்குமுன்னு நினைக்கத் தோணுதுங்க.
இன்னொரு விஷயத்தையும் மனசு விட்டு சொல்லணுமுங்க. நியாயமுன்னா... எல்லாருக்கும் ஒன்னுதானுங்களே..... நித்தி ... ரஞ்சி பண்ணுற ரவுசு பண்பாட்டை மீறாத பல்லாங்குழி ஆட்டம் மாதிரி இருக்குதுங்க. என்னதான் நித்திக்கு நின்னு குனிஞ்சு மஜாஜ் பண்ணினாலும் மாராப்பு விலகல பாத்தீங்களா..
நித்தி கூட எசகு பிசகா நடக்காமா எண்ணெய் தேக்கிறதுக்கு தோதா உடம்பை காட்டுறாருங்க. ஒரு தடவை ரஞ்சி அக்கா தோள்பட்டையில கையை வைக்கும்போது கூட உணர்ச்சிய தூண்டுற இடங்களில உரசாம பாத்துக்கிட்டாருங்க. அதைத் தாண்டி ஒரு அடிகூட எடுத்து வைக்கலைங்க. கெமிஸ்ட்ரி ஒத்துப் போன நீ பாதி... நான் பாதி .. ஜோடி மாதிரி தானே அவங்க ரெண்டுபேரும் நடந்துக்கிறாங்க.
கணவன் மனைவி எப்படி இருக்கணுமுன்னு ரஞ்சிதா மூலமா காட்டுன நித்திக்கு.... காவிச் சாமியாருங்க உள்ளே... வெளியே.. விளையாட்டு இப்படித்தான் இருக்குமுன்னு உலகத்துக்கு நிரூபிச்ச நித்திக்கு.... பிரமச்சரியமெல்லாம் ஒரு பித்தலாட்ட வேலையின்னு பிரிச்சு மேஞ்ச நித்திக்கு.... நான் மட்டுமில்ல இனி காவி கட்டி வருற சாமியாருங்க எல்லாம் அந்தரங்கத்திலே நடத்துற சுந்தர விளையாட்டு இதுதான்னு சொல்லாம சொன்ன நித்திக்கு.... நன்றிங்க... நன்றிங்க... நம்ம தமிழ் சமுதாயத்தோடு தலை சாய்த்த நன்றிங்க.
Tuesday, March 23, 2010
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment