Monday, November 30, 2009

கிட்டிப்புல்லு விளையாட்டில் கில்லாடி பூசாரி

சாமியார்கள்தான் ஆரம்ப காலத்தில் சல்லாபச் சடுகுடு ஆட்டத்தில் கலைமாமணி விருது வாங்கி வந்தாங்க. இப்ப கோவில் குருக்களும் கும்மாங்குத்து மல்லாங்குத்து வேலையில கின்னஸ் சாதனை படைக்க ஆரம்பிச்சு இருக்காங்க. நான் யாரை சொல்றேன்னு தெரியுதுங்களா. கும்பகோணம் மச்சேஸ்வரர் கோவில் பூசாரி தேவநாதனைத்தான் சொல்றேங்க.





கிட்டிப்புல்லு விளையாட்டில் மகா கில்லாடின்னு அவரு சம்பந்தப்பட்ட வீடியோ காட்சிகளை பார்த்து தெரிஞ்சுக்கிட்டேங்க. எனக்கு ஒன்னு மட்டும் புரியலைங்க. கோவில் கர்ப்ப கிரகத்தில ஆயகலை அறுபத்தி நாலையும் நடத்தும்போது அந்தப் பெண்கள் முகத்தில கூச்சமோ வெட்கமோ இல்லைங்க.

ஒரு பக்கம் மேளச் சத்தம். இன்னொரு பக்கம் ஒலிபெருக்கியில பக்திப் பாடல்கள். இதுக்கு மத்தியிலதாங்க நம்ம தேவநாதன்... காம நாதனா மாறி கபடி விளையாடி இருக்காரு. உண்மையிலேயே தேவநாதன் கில்லாடிக்கு கில்லாடிங்க. வெள்ளைக்காரப் பயலுக எல்லாம் வாயில விரல் சூப்புற அளவுக்கு பல புதுமைகளைச் செஞ்சிருக்காருங்க.

அந்தப் பெண்களோட வாழ்க்கை என்ன ஆகுமோன்னு என்னோட நண்பன்கிட்ட வேதனையோட சொன்னேங்க. அதுக்கு "போடா லூசு... இந்த பல்லாங்குழி விளையாட்டெல்லாம் பக்தி மார்க்கத்தில சகஜமப்பான்னுட்டு அந்தப் பொண்ணுங்களோட புருசன்மாருங்க  இன்னொரு கோவிலுக்கு அனுப்பி வைப்பாங்க.

இப்ப போலீசில மாட்டிக்கிட்ட தேவநாதனுக்கு இனிமேத்தான் மவுசு மானாங்கன்னியா ஏறப்போகுது. இப்ப அந்தப் பகுதி பொம்பளைங்கதானே கருவறைக் கண்ணாமுச்சி ஆடி நிலவறை நெல்லுக்குத்தினாங்க.

பத்திரிகையிலையும் தொலைக்காட்சியிலையும் பரபரப்பான தேவநாதனைத் தேடி தமிழ்நாடு முழுவதும் இருந்து பெண்கள் கூட்டம் அலைமோதப் போகுது. டோக்கன் கொடுத்து சிலம்பாட்டம் நடத்தப் போறான். ஒரு தேவநாதன் மாட்டிக்கிட்டான். இன்னும் மாட்டாத தேவநாதனுங்க எத்தனை பேரு இருக்கிறானுங்களோ"ன்னு சொல்றாங்க.

இப்படிச் சொல்லும்போது ஓங்கி அவனை அறையலாம் மாதிரி இருந்ததுங்க. ஆனா.. முடியலைங்க. ஏன்னா.. அந்த தேவநாதன் பண்ணுன படுபயங்கரமான அசிங்கத்தை பார்த்துத் தொலைச்சிட்டேனுங்களே...

1 comment: