Wednesday, December 2, 2009

தேவநாதனுக்கு சாணி அடி தேவையா...?

நம்ம கும்மாங்குத்து குருக்களை போலீசார் பின்னி எடுக்க... எடுக்க... அள்ள அள்ள குறையாத அட்சயபாத்திரத்தில இருந்து வருகிற அன்னம் மாதிரி உண்மைகள் அணையை உடைத்துக் கொண்டு வரும் போல இருக்குங்க.


பக்திப் பரவசத்தோடு கோவிலுக்கு போன பொண்டாட்டிகளை பாசத்தோடு வழி அனுப்பி வச்ச புருசன்மாருங்க...மோசம் போயிருப்பமோன்னு தவியாத் தவிக்கிறது யாருக்குங்க தெரியப் போகுது.




இப்ப நீதி மன்றத்துக்கு வந்த "தேக சாந்தி திவ்விய புருசன்" தேவநாதனை சில பெண்கள் சாணியை எடுத்து அடிச்சிருக்காங்க. விளக்குமாத்தால விளாசி இருக்காங்க. அது நியாயமான கோபம் தாங்க.

இன்னொரு விஷயத்தையும் இங்க உங்களுக்கு சொல்லணுமுங்க. சில நாட்களுக்கு முன்னர் ஒரு நண்பர் எனக்கு ஒரு வீடியோ காட்சியை அனுப்பி வைத்தாருங்க. ஒரு பெண்ணை வைத்து ஆபாசப்படம் எடுத்த காட்சி அதுங்க.

பணத்துக்காக வந்ததோ அல்லது பயமுறுத்தி கொண்டு வரப்பட்டதோ தெரியலைங்க. கேமராவை பாக்கிறதுக்கு அந்தப் பெண் படுகிற பாட்டைப் பார்த்து என்னோட நெஞ்சில ரத்தம்தான் வழிஞ்சதுங்க. கூச்சமும் இயலாமையும் அந்த முகத்தில தெளிவா தெரிஞ்சதுங்க.

நம்ம இனத்தை வெள்ளைக்காரன் வியப்போடு பாக்கிறதுக்கு காரணம் நமது குடும்ப ஒழுக்கம்தாங்க. மேலை நாடுகளில சமுதாய ஒழுக்கம் அதிகம். குடும்ப ஒழுக்கம் குறைவுங்க. நாம அப்படி இல்லைங்க. ஒரு குடும்பத்துக்கு நன்னெறி எவ்வளவு முக்கியம் என்பதை மேடைதோறும் பேசி வருபவன் நானுங்க.

அதனாலதான் அந்தக் காட்சியை எனக்கு அந்த நண்பர் அனுப்பி வைத்தாருங்க. அந்தப் பெண்ணை கடுகு அளவுகூட என்னால் தப்பாக பார்க்க முடியலைங்க.

ஆனா, நம்ம தேவநாதன் தில்லாலங்கடி பாடிய பொண்ணுங்களை பார்க்கும்போது எனக்கு ஈரல் குளையே ஆடிப்போச்சுங்க. ஒரு கோவில் தளத்தில... எந்த நேரத்திலும் யார் வேண்டுமானாலும் உள்ளே நுழைந்து பார்க்கக்கூடிய வாய்ப்பு இருக்கிற இடத்தில... பேசும் மொழி கடந்து இந்திய தேசம் முழுவதையும் ஒரே கட்டுக்குள் வைத்திருக்கிற கடவுளின் கருவறைக்குள்ளே...

கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல்... தப்பு செய்கிறோமே என்ற நாணம் இல்லாமல்...வெள்ளைக்காரப் பெண்களையே போட்டிக்கு அழைக்கின்ற விதத்தில் பல கோணங்களில் கும்மாளம் போட்ட அந்தப் பெண்களைப் பார்க்கின்ற போது இரத்தம் கொதிச்சதுங்க.

இதுல ஒரு பொண்ணு "மயக்க மருந்து கொடுத்து என்னைக் கற்பழிச்சிட்டான்"ன்னு சொல்லி இருக்குங்க. அண்டபுளுகு... ஆகாசப் புளுகு...ன்னு கேள்விப்பட்டிருக்கேங்க. அதைவிட இந்தப் பொண்ணு சொன்னது எல்லாரையும் கேணையன் ஆக்குகிற மல்டி மீடியா புளுகுங்க. இது மாதிரி பொண்ணுங்க கதிரியக்கக் கசிவு மாதிரிங்க. இருக்கிற இடத்தை மட்டுமில்லாம அந்தப் பகுதியையே அழிக்கக்கூடிய அணுகுண்டு புளுகிங்க இவ.

அறிமுகம் இல்லாத ஒரு பொண்ணு "அண்ணா" என்று அழைத்து விட்டால் தவறிக்கூட தப்பான பார்வை பார்க்காத தமிழ்நாடுங்க. உறவுமுறை கொண்டவன்கூட தவறான எண்ணத்தில் தன்னை நெருங்கும்போது "நான் அப்படிப்பட்ட ஆள் இல்லை" என்று அவன் மானத்தையும் தன்னுடைய மானத்தையும் காத்துக் கொண்டு வாழ்ந்த கண்ணியம்மிக்க பூமிங்க.

காலம் மாறும் போதும்... வளர்ச்சி ஏற்படும்போதும்... நாகரிகச் சிதைவு ஏற்படுவது தடுக்க முடியாதுங்க. ஆனா, இவ்வளவு கொடுமையான மாற்றம் இருக்கக்கூடாதுங்க.

"தாய் அறியாத சூல்" இல்லைன்னு சொல்லுவாங்க. அதுபோல இவ்வளவு பெரிய தப்பு நடக்கிறது தெரியாம இருந்தது ஆச்சரியமா இருக்குதுங்க. தேவநாதனின் கொடுமை தாங்காம மச்சேஸ்வரர்தான் அவனுடைய போனைக் கெடுத்து அதன் மூலமா உண்மைய வெளிச்சத்துக்கு கொண்டு வந்து இருக்கிறாருங்க.

இல்லைன்னா... இன்னும் எத்தனை பெண்களை சூறையாடி இருப்பானோ.... எத்தனை பெண்கள் கட்டினவனுக்கும் பெத்தவங்களுக்கும் துரோகம் செஞ்சு இருப்பாங்களோ... நினைச்சுப்பாக்கவே அச்சமா இருக்குதுங்க.

இப்ப ஆவேசப்படும் பெண்களே... உங்க பகுதியில இது மாதிரி தப்பு நடக்குதான்னு உத்துப் பாருங்க. ஆனா.. அதுலையும் ஒரு சிக்கல் இருக்கு. சம்பவம் நடக்கிறதுக்கு முன்னாடி ஏதாச்சும் சொல்லிட்டா " எம் பொண்டாட்டியை எப்படி சொல்லலாம்" ன்னு நம்ம வீராதி வீரனுங்க அரிவாளைத் தூக்கிக்கிட்டு வந்திடுவானுங்க.

சில வக்கிரம் புடுச்ச பொண்ணுங்க வேணுமின்னே கட்டுக்கதை கட்டுறதும் நடக்கலாமுங்க. எப்படிப் பாத்தாலும் இந்தப் பொண்ணுங்க பண்ணுனது வயித்துப் பொழைப்புக்காக முந்தானையை விரிக்கும் விலைமாதுவோட செயலைவிட கேவலமானதுங்க.

1 comment:

  1. மச்சேசுவரர் போனை கெடுத்ததுக்கு பதிலா மொதல்லயே வேற எதையாவது(?) கெடுத்திருந்தா இத்தனை பிரச்சனையும் வந்திருக்கவே வந்திருக்காதே... என்ன சொல்லறீங்க? :)

    ReplyDelete