யாழ்பாணத்தில முள்வேலிக்கு நடுவுல மாட்டிக்கிட்டு அடுத்த வேளை உணவுக்கு அல்லாடுற அப்பாவி தமிழ் மக்களின் கண்களில் இருந்து கொட்டுற கண்ணீரை விட ஆயிரம் மடங்கு இல்ல ராதிகா அக்கா கண்ணுல அருவியா பொங்குது.
அதுதான் மருமகளைக் கெடுக்கிற மாமானார். அண்ணியைக் கெடுக்கிற கொழுந்தன், வேலைக்காரனோட தொடர்பு வச்சிருக்கிற வீட்டுக்காரம்மா...ன்னு நம்ம பண்பாட்டை உலக நாடுகளுக்கு பறை சாற்றுகின்ற சீரியல்களா எடுத்துத் தள்ளி பணத்தை அள்ளுறீங்களே... அது பத்தாதா...
ஏதோ ஜக்குபாய் நக்குபாயா மாறி இவங்க குடும்பத்தையே நாசமாக்கின மாதிரி இல்ல. அழுவாச்சி விடுறாங்க. ஹிரோஷிமாவில அணுகுண்டு விழுந்தபோது ஜப்பான்காரன் முகத்தில கூட இவ்வளவு சோகத்தை பாத்திருக்க முடியாது.
சரத்குமார் அண்ணாச்சிக்கு படத்திலதான் தன்முனைப்பு தடாலடி வேலை எல்லாம் போல இருக்கு. நிஜத்தில அவரு சரத்குமார் இல்ல....சொரத்தில்லாத குமார்.
ரஜினிகாந்தில இருந்து சூரியா வரைக்கும் எல்லையைப் பிடுங்குன சீனாகாரனுக்கு எதிராக போராடப் போற மாதிரி வரிஞ்சு கட்டிக்கிட்டு நிக்கிறாங்க. எதுக்குங்க ஆவேசப்படுறீங்க.
திருட்டு விசிடி வந்தா என்ன... இணையத்தளத்தில வெளியான என்ன ஆயிடப் போகுது.... அடுப்படியில பூனை தூங்குனாலும் பெத்த பிள்ளை கஞ்சிக்கு அழுதாலும் கட்டின பொண்டாட்டி சாகக் கிடந்தாலும் அவ தாலிய வித்தாவது படம் பார்க்கிற பாமர ஜனங்க இருக்கும்போது உங்களுக்கு என்னங்க கவலை.
இதுல வீராதி வீரன் வெண்ணை வெட்டி வெள்ளச்சாமி பேரன்... சேரன் அண்ணாச்சி ஒரு ஆவேச ஐடியா கொடுத்திருக்காரு. ரசிகர்களை விட்டு வெட்டச் சொல்லப் போறாராம். யாரை.... இணையத்தளத்தில திருட்டுத்தனமா ஜக்குபாயை வெளியிட்ட ஆசாமியை.
ஏனய்யா... சேரனாரே பாதிக்கப்பட்டது நீங்க... நீங்க தானய்யா வெட்டணும். அதை விட்டுட்டு தீக்குளிக்கன்னா... தொண்டனுங்க... வெட்டணுமுன்னா... ரசிகனுங்கன்னு அந்த இளிச்சவாயி ரசிகனுங்க தலையில புளிச்ச தண்ணியை ஊத்துறீங்க.
ரசிகன் போயி அவன வெட்டுவான். அப்புறம் ஜெயிலுக்கு போவான். அவன் குடும்பம் நடுத்தெருவில நிக்கும். நீங்க ஹாயா... கோமணத்தை அவுத்து கொடியில போட்டுட்டு கும்மாளம் அடிச்சிக்கிட்டு இருப்பீங்க.
இதுக்கெல்லாம் விடிவுகாலம் வராதுன்னு நினைக்காதீங்க. ஒரு நாளைக்கு இந்த பாமர ஜனங்க முழிச்சிக்கிட்டாங்கன்னு வையுங்க. உங்களை சந்தியில நிக்க வச்சு. தொந்தியில உழுது நாத்து நட்டுருவாங்க.


superb..
ReplyDeletehi guys,
ReplyDeletehttp://cyberfraudidentifier.blogspot.com/
This blog used to cyber fraud identifier person.
Thanks for your help for posting this comment in your website.
good article Super indhra devan..
ReplyDeleteபிரமாதம் நன்பரே....
ReplyDeleteசவுக்கடி!
அப்படியே அந்த வோர்டு வெரிஃபிக்கேஸன்னை எடுத்து விடவும்.
Excellent ...
ReplyDeleteEvery one feels like you boss.
ReplyDeleteThanks for posting. Starting & Finishings are superb.
http://goodtamilnews.blogspot.com
good thought 'but it is trade, it is lose . so the cry is real . Its not time to blame a human being who is in suffer and lose. apart from ur angry is true. ok with hope i also give my hand to u for the dawn. can v?
ReplyDeleteசும்மா நச்சுனு சொன்னீங்க
ReplyDeleteபட்டய கிளப்புங்க..
ReplyDeleteSuper!!
ReplyDeleteNice post, Even if it is not released in Net, this film will run for 10 days only. In net also not millions of people seen that.
ReplyDeleteநல்ல பதிப்பு
ReplyDeletenice post keep going.....
ReplyDeleteVery well said. Keep it up!
ReplyDeleteஅருமை.
ReplyDelete