நம்ம ஜனங்களைக் கட்டிப் போட்டு வைச்சிருக்கிறது மூன்று அம்சமுங்க. 1-இறை நம்பிக்கை . 2.சினிமா. 3- அரசியல். இந்த மூன்று காரியத்திலும் அறிவுக்கு இடம் கொடுப்பது அறவே இல்லைன்னு என் நண்பன் அடிக்கடி என்னிடம் சொல்லுவான்.
இதில் எனக்கு உடன்பாடு இல்லைன்னாலும் சில நேரங்களில அவன் சொல்வது சரித்தான்னு என்னோட மனசுக்கு படுதுங்க.
சமீபத்தில் வந்த ஒரு செய்திங்க. கோவிலுக்குள்ளேயே ஒரு பூசாரி காமக் களியாட்டம் நடத்தி இருக்காருங்க. அவரை போலீஸ் தேடுவதாக தகவலுங்க.
அந்தப் பூசாரியை ஒரு பக்கம் தள்ளுங்க. சாமி கும்பிட வந்த பெண்கள் சல்லாபத்துக்கு இணங்கி இருக்காங்கன்னா... இது தனிப்பட்ட விஷயமுன்னு தள்ள முடியாதுங்க. பெண்கள் சமுதாயத்தையே தலைகுனிய வைக்கிற சம்பவமுங்க. தப்பு செஞ்சது யாரோ... எவரோ.... அந்தக் கோவிலுக்குப் போன எல்லா பெண்களும் சந்தேக வட்டத்துல வந்துடமாட்டாங்களா... நம்ம ஆன்மீகத் தத்துவமே அடிபட்டு போயிடாதுங்களா...
அடுத்தது சினிமா... கொட்டுற பணத்தை என்ன செய்யிறதுன்னு தெரியாம சினிமா நடிகருங்க, கும்மாளம் அடிக்கிறாங்க. அந்தரங்க வாழ்க்கையை அலசிப் பாத்தா கூவம் சாக்கடை எவ்வளவோ தேவலைங்க. ( இப்படி சொல்லியதற்காக சிவகுமார் போன்ற சிறந்த மனிதர்கள் மன்னிக்க வேண்டும்). ஆனா, அவங்களை தெய்வங்களா நெனைச்சு பாலாபிஷேகம் முதல் பன்னீர் அபிஷேகம் வரை பண்ணி நம்ம நாகரிகத்தையே சிதைச்சு சின்னா பின்னமாக்கிடுறாங்க.
இன்னொன்னு அரசியல்... ஜெயலலிதாவை மேரி மாதா ஆக்கினாங்க. இப்ப ஸ்டாலினை முருகனாக்கி இருக்காங்க. அதுவும் மலேசியாவில் உள்ள முருகன் திருத்தலமான பத்துமலையில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருக்கும் 140 அடி முருகன் சிலை படத்தில் ஸ்டாலின் தலையை ஒட்ட வைச்சிருகாங்க. அந்த சுவரொட்டியின் கீழே 'வணங்கும் பக்தர்கள்' என்ற வாசகம் வேறு.
மூன்று இனங்கள் வாழுகின்ற ஒரு நாட்டில் மிகவும் பாடுபட்டு எத்தனையோ எதிர்ப்புகளுக்கு இடையே எழுப்பப்பட்ட ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆன்மீகச் சின்னத்தை அவமானப்படுத்துவது என்ன நியாயமுங்க.
பகுத்தறிவு பகவலன் தந்தை பெரியாரின் தம்பிகளாக இருந்து ஆரிய ஆதிக்கத்தின் வேரறுத்த போர்த்தளபதிகளான பேரறிஞர் அண்ணா, உலகத் தமிழினத்தலைவர் கலைஞர் கருணாநிதி போன்றவர்களின் கொள்கையைக் குழி தோண்டி புதைக்கின்ற காரியம் தானுங்களே இது. இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கப்பட்ட திராவிட இயக்கத்தின் வரலாறு தெரியாத சிலர் செய்கின்ற காரியங்கள் பெரிய தலைவர்களின் போராட்டத்தை புரையோடிப் போகச் செய்யாதுங்களா....
இப்படி வைங்கன்னு ஸ்டாலின் கேட்டாரா... இது அவரை சங்கடத்தில் ஆழ்த்துகின்ற சங்கதிதானுங்களே.... ஸ்டாலின் மீது அன்பு வைத்திருக்கிற அவங்க. ஸ்டாலின் பேரால நல்ல காரியம் பண்ணுங்க. ஏழைங்களுக்கு உதவுங்க. படிக்க பணம் இல்லாத பிள்ளைகளுக்கு பணம் கொடுங்க.இது மாதிரி செஞ்சீங்கன்னா துணை முதல்வரே உங்க வீடு தேடி வந்துடுவாருங்க.
அதை விட்டுப்புட்டு இப்படிப்பட்ட முட்டாள்தனமான காரியங்களை செய்கின்ற நம்ம சமுதாயத்தை எப்படிங்க முன்னேறிய சமுதாயமுன்னு வாய்கூசமா சொல்றாங்க. என்னங்க....என்னுடைய வேதனை சரிதானுங்களே...
Thursday, October 1, 2009
Subscribe to:
Post Comments (Atom)



தம்பி சமுதாயம் என்னும் சாக்கடையில் இதல்லாம் சகஜம் ஆசை என்பது இருப்பதாலேயே தான் மனிதகுலம் தலைத்தோங்கி நிற்க்கிறது அப்பன் யாரு ஆத்தா யாரு ஆராய்ச்சி செய்தால் நாம் எல்லோரும் ஒரு மரத்து கிளைகளே,
ReplyDeleteஎல்லாமே ஜால்ரா கோஷ்டி அரசியலில் இதுலாம் சகஜமப்பா. பகுத்தறிவு திமுகவின் து.மு க்கு முருகன் தேவைப்படுகிறார், கொடுமைடா சாமி.
ReplyDeleteபிட்:
வேற ப்ரியாமணி போட்டோ போடலாமே இது கொஞ்சம் தெளிவா இல்லை.