இன்னைக்கு எழுதுறதுக்கு ஏராளமான செய்திங்க இருக்கே, எதை எழுதலாமுன்னு யோசிச்சுக்கிட்டு இருந்தேங்க. அப்ப ஏதோ ஒரு சத்தம் காதுக்குள்ள கேட்டுச்சு.
என்னன்னு திரும்பிப் பார்த்தேன். என்னோட பேனாதான் பரிதாபமா முனகிக்கிட்டு இருந்துச்சு. "இன்னைக்கு நயன்தாரா சென்னைக்கு வந்த செய்தியைப் பத்தித்தானே எழுதப் போறீங்க.
என்னைய என்ன சொரணை இல்லாத தமிழ் ஜனங்கன்னு நினைச்சீங்களா... அந்த நாசமாப் போன நயன்தாரா சென்னைக்கு வந்தா என்ன... மண்ணுக்குள்ள போனா என்ன... நெஞ்சை நிமித்திற மாதிரி ஒரு செய்தி எழுதுங்க"ன்னு கம்பீரமா சொன்னுச்சு.
அடுத்த வினாடி நோபல் பரிசு வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் என் மூளைக்குள்ள பளிச்சின்னு நின்னாருங்க. நோபல் பரிசுன்னா சும்மாவாங்க. அதுவும் ஆராய்ச்சித் துறையில. எத்தனையோ வெள்ளைக்காரங்களுக்கு மத்தியில நம்ம தமிழருக்கு நோபல் பரிசு கிடைச்சிருக்குன்னா அதை கோவில் கட்டி கொண்டாட வேண்டாமாங்க.
இதுமாதிரி சாதனைகளை மக்களுக்கு கொண்டு போயி சேர்க்க வேண்டிய பத்திரிகைங்க... "நயன்தாரா நாய்க்கு நெஞ்சு வலி. நமீதா நாய்க்கு குஞ்சு வலி"ன்னு கொட்டை கொட்டையா செய்தி போடுறாங்க.
அவங்களைக் குத்தம் சொல்லி என்ன பிரயோசனம்... குடிக்கிறதுக்கு சில்லுன்னு மோரைக் கொடுத்தாலும் கூவத்துத் தண்ணியத்தான் குடிப்பேன்னு அடம்பிடிக்கிற நம்ம மக்களைதான் சொல்லணுமுங்க.
டீக்கடையில இருந்த ஒரு பெருசுக்கிட்ட இந்த நோபல் பரிசு செய்திய மகிழ்ச்சியோட சொன்னேனுங்க. அப்படின்னா... என்னன்னு அது என்னைய திருப்பிக் கேட்டுச்சு. எனக்கு மண்டைக்கு ஏறிடுச்சுங்க.
நாக்கப் புடுங்கிற மாதிரி நாலு கேள்வி கேட்டேங்க. "அட போப்பா... நயன்தாராவ ரம்லத்து செறுப்பால அடிப்பாளா... விளக்குமாத்தால அடிப்பாளா...ன்னு கவலைப்பட்டுக்கிட்டு இருக்கேன். இந்த நேரத்தில் நோபல் பரிசு... நாவல் பரிசுன்னு.... அலட்டிக்காம சொல்லிச்சுங்க.
இந்த மாதிரி ஆட்களுக்கு எல்லாம் நோபல் பரிசுன்னா என்ன... அதனோட பெருமை என்ன... அதை வாங்கி இருக்கிற தமிழரோட மதிப்பு என்ன என்பதை புரிய வைக்கிற காரியத்தில் பத்திரிகைகாரங்க இறங்கணுமுங்க.
இதில அரசியல்வாதிகளை இழுக்க முடியாதுங்க. அவங்க கல்யாணவீட்டில மாப்பிள்ளையா இருக்கணும்பாங்க. எழவு வீட்டில பொணமா இருக்கணும்முன்னு நினைப்பாங்க. ஏமாந்து முதல் ராத்திரி அறை வரைக்கும் வர விட்டா மாப்பிள்ளை விரலைச் சூப்பிக்கிட்டு வெளியிலதான் நிக்கணுமுங்க.
என்னோட இந்தச் செய்தியை படிக்கும் நண்பர்கள், தங்களுடைய வலைப்பூவில நம்ம இனத்துக்கு மாபெரும் மரியாதையைக் கொண்டு வந்த வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனைப் பத்தி எழுதுங்க. இது அவருக்கு நாம செலுத்துற நன்றிக் கடனுங்க. அந்நிய நாட்டில இருந்தாலும் அடையாளத்தைத் தொலைக்காத் மனிதரான வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனுக்கு என்னோட ராஜ வணக்கமுங்க.
Tuesday, October 13, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment