Monday, October 12, 2009

கணவனை மாத்திற ஹைடெக் விபச்சாரம். சிலரின் சித்து விளையாட்டு

எழுத வேண்டாமுன்னு நினைச்சாலும் இந்த எழவெடுத்த சினிமாக்காரங்க செய்தி மண்டையப் பிராண்டுறதாலே எதையாவது சொல்லத்தானே வேண்டி இருக்கு.


விபச்சாரம்ங்கிற அந்த வார்த்தைக்கு மனசைக்கிழிக்கிறமாதிரி ஒரு கவிஞர் அர்த்தம் சொல்லி இருக்காருங்க. "ஆடை வாங்குவதற்காக நிர்வாணத்தை விற்கிறோம்."

அரை வயிற்று கஞ்சிக்கு வழியில்லாத அப்பாவிகள் செய்யும் காரியத்துக்கு கவிஞர் எழுதுன ரத்த வரிகள். ஆனால், இவர்கள் மாட்டினால் போலீஸ்காரர்கள் நார் நாராக கிழித்து விடுவார்கள்.

எட்டடுக்கு மாளிகையில் எரிகின்ற விளக்குகளுக்கு இடையே லட்சக்கணக்காக பணம் வாங்கிக்கொண்டு விபச்சாரம் செய்யும் நடிகைகளைத் தொட்டால் போலீஸ்காரர்கள் நார் நாராகக் கிழிந்து போவார்கள்.

பொது மக்களோட சிந்தனை மாறாத வரைக்கும் இவங்களை ஒன்னுமே பண்ண முடியாதுங்க. வீடியோ படமே எடுத்துக் காட்டினாலும் அது கிராபிக்ஸ்சுன்னு சொல்லி வெளியே வந்திருவாங்க.

இவ்வளவு கர்மத்துக்கு பிறகும் விபச்சாரத்தில பிடிபட்ட அந்த புவனேஸ்வரி துப்புற எச்சியை பிரசாதம் போல வாங்கி கண்ணுல ஒத்திக்கிற கர்மாந்திரம் பிடிச்ச ஜனங்க 80 சதவிகிதம் பேர் இருக்காங்க.

அதனால, விபச்சாரம் அது...இது..ங்கிற வில்லுப்பாட்டெல்லாம் தமிழ் நாட்டில எடுபடாதுங்க. சிங்கம் சிங்கிளாத்தான் வருமுன்னு சிவாஜி படத்தில ரஜினிகாந்த் சொல்லுவார்.

நம்ம புத்திசாலி மடையனுங்க எல்லாரும் அதை மேடை மேடைக்கு பேசிக்கிட்டு இருக்கிறானுங்க. ஆனா, டிஸ்கவரி சேனலைப் பாருங்க. எந்தச் சிங்கமாவது தனியா வேட்டையாடுதா... இல்ல தனியாத்தான் நடந்து போகுதா...

சந்திரமுகி படத்தில எவ்வளவு கேவலமான இரட்டை அர்த்த வசனங்கள். சிவாஜி படத்தில ஸ்ரேயே ஒரு பாட்டுக்கு ஆடும்போது போட்டிருக்கிற உடையைப் பாருங்க. குலுக்கிற குலுக்கில கொட்டாங்கச்சியே கழண்டு விழுகிற மாதிரி இருக்கும்.




இந்தப் படத்தை பாத்துட்டு கொடிகாஞ்சு போன ஒரு பெருசு ராத்திரியிலே கிழவிக்கிட்ட சில்மிஷம் பண்ண,, அந்தக் கிழவி இனிமே இந்த மாதிரி படத்துக்கு போவியா...போவியான்னு விளக்கு மாத்தாலே விளாசிருச்சாம்.

இப்படிப்பட்ட நடிகர் நடிகைங்கதான் நம்ம கலாச்சாரத்தைக் கட்டிக் காக்கிற தெய்வம்முன்னு நினைக்கிறாங்க. அவங்களுக்கு ஒரு பிரச்சினையின்ன உடனே ஒன்னா சேந்துட்டாங்க.

திரைப்படத்திலையும் சீரியல்லையும் பெண்களை மகா கேவலமாக காட்டுறாங்களே...அதையும் நம்ம பெண்கள் வாயப் பிளந்து பாக்கிறாங்களே... இதை எதுத்து போராட்டம் நடத்த முடியுங்களா... ஏன்னா... நாம... அசிங்கத்தையே அல்வான்னு சாப்பிடற அவல நிலைக்கு வந்துட்டோ முங்க.

என்னோட நண்பன் ஹைடெக் விபச்சாரமுன்னு ஒன்னை சொன்னான். அதை அப்படியே இங்க எழுதுறேன். சரியா.. தப்பா...ன்னு நீங்கதான் சொல்லணும்.

காசு வாங்கிக்கிட்டு விபச்சாரம் பண்ணினாத்தானே போலீஸ் பிடிக்கும்.( அரசியல்வாதிகள் ஆதரவில்லாதவர்களை) ஆனா, அதையே வித்தியாசமா பண்ணினா..

ஒரு பணக்காரரை திருமணம் செய்து கொள்வது. அவரிடம் இருக்கும் காசு கரைந்தவுடன் இன்னொரு பணக்காரனைக் கல்யாணம் செய்வது. இப்படியே இட்லி, வடை, தோசை, பிட்ஸா, கிண்டெக்கின்னு ருசிக்கு ருசி... பணத்துக்கு பணம்... ஆனா, சமுதாயத்தில இவங்கதான் புரட்சிப் பெண்மணிகள்.

ஒரே புருசனோடு குப்பை கொட்டுறவங்க ஏமாந்த சோணகிரிங்க. வாழத்தெரியாதவங்க. இந்த பல புருசக் குத்துவிளக்குகளைத்தான் பல இடங்களுக்கு குத்துவிளக்கு ஏத்த கூப்பிடுறாங்க கவரிமான் பரம்பரைத் தமிழர்கள்.



பணம்தான் வாழ்க்கையின்னு ஆயிப் போச்சு. அந்தப் பணத்தை தேட முடியாத ஏழைங்க எல்லாரும் சினிமாவைப் பாத்து அது மாதிரே கற்பனையில வாழுறாங்க. இந்தச் சிந்தனை இருக்குற வரைக்கு சினிமாக்காரங்களை ஒன்னும் பண்ணமுடியாதுங்க.

சினிமாக்காரங்களுக்கு ரசிகர்கள் இருக்காங்க. ரசிகர்களுக்கிட்ட ஓட்டு இருக்கு. இந்த ஓட்டு அரசியல்வாதிகளுக்குத் தேவை. கூட்டிக் கழித்து பாருங்க. ஒரு பத்திரிகைகாரனை அவசர அவசரமாக கைது பண்ணின கணக்கு புரியும்.

இதுல அடுத்த வீட்டு பெண்களைப் பத்தி எழுதினா இப்படித்தான் நடக்குமுன்னு வியாக்கியானம் வேறு. இவங்களெல்லாம் பெண்களா.... எங்களோடு சேர்த்து இவங்களை ஒப்பிடலாமான்னு நம்ம புலியை முறத்தாலே விரட்டின தமிழச்சிங்க எல்லாம் பொங்கி எழுந்தாத்தான் விடிவு கிடைக்குமுங்க. பொங்குவாங்களா...

5 comments:

  1. you are wasted your time for this script. No way to change this women,

    ReplyDelete
  2. பொங்கி கிழிச்சாங்க.

    ReplyDelete
  3. //ஒரு பணக்காரரை திருமணம் செய்து கொள்வது. அவரிடம் இருக்கும் காசு கரைந்தவுடன் இன்னொரு பணக்காரனைக் கல்யாணம் செய்வது. இப்படியே இட்லி, வடை, தோசை, பிட்ஸா, கிண்டெக்கின்னு ருசிக்கு ருசி... பணத்துக்கு பணம்... ஆனா, சமுதாயத்தில இவங்கதான் புரட்சிப் பெண்மணிகள்.

    ஒரே புருசனோடு குப்பை கொட்டுறவங்க ஏமாந்த சோணகிரிங்க. வாழத்தெரியாதவங்க. இந்த பல புருசக் குத்துவிளக்குகளைத்தான் பல இடங்களுக்கு குத்துவிளக்கு ஏத்த கூப்பிடுறாங்க கவரிமான் பரம்பரைத் தமிழர்கள்.//

    உண்மை யை எழுதியிருக்கின்றீர்கள்... ஒய்விருக்கும் பொழுது இந்த வலைபூ பக்கத்திற்கு சென்று பார்வையிடவும்...

    http://tamil498a.blogspot.com

    ReplyDelete
  4. இந்த "கொட்டாங்கச்சி" சமாச்சாரமெல்லாம் டுபாக்கூர் "சிலிகோன்" குப்பிகள் என்று நம் ஜொள்ளர்களுக்கு எங்கே விளங்கப் போகுது!

    மேக்கப் இல்லாம ஒரு நடிகையை ஒருமுறை பார்த்தாலே போதும், பேயடித்தவன் போல் ஆகிவிடுவான் பார்த்தவன்!

    பரத்தைத் தன்மையை சமுதாயத்தில் விதைத்து, மணமான பின்பு தொடரும் கள்ளக்காதலுக்கு நியாயம் கற்பிக்கும் மனப்பான்மையை வளர்ப்பவர்கள் இந்த சினிமாக்கார்கள் தான்.

    இப்படியே இந்தக் கலாசாரச் சீரழிவு தொடர்ந்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு தாலிபன் ஆட்சி வந்தால் தேவலை என்று தோன்றத் தொடங்கிவிடும்!

    ReplyDelete