Thursday, October 29, 2009

காடு வெட்டி குருவுக்கு நாக்கில் சனி

காடு வெட்டி குரு வீடு கட்டி விளையாட ஆரம்பிச்சுட்டாருங்க. டாஸ்மாக் தண்ணியடிச்சு பாஸ் மார்க் வாங்கின பேட்டை தாதா மாதிரி மைக்கை பிடிச்சு மானாங் கண்ணியா பேச தொடங்கிட்டாரு.




எல்லாம் அதிமுக தலைவி ஜெயலலிதாவைப்பத்தித்தான். இவரு அம்மா இல்லை.... சும்மா... இவருக்கு பவரு இல்லை.... பம்மான்னும் வார்த்தையாலே வசை கவியரங்கம் நடத்தத் தொடங்கிட்டாருங்க.

திருடித் தின்ன கருவாட்டு முள்ளு தொண்டையில சிக்கிக்கிட்ட பூனை மாதிரி திரு திருன்னு முழிச்சிக்கிட்டு இருந்த ராமதாசுக்கு அருமையான சந்தர்ப்பம் அடுக்குமாடி பஸ்சில வந்துக்கிட்டு இருக்குங்க.

அதுக்கு அச்சாரமாத்தான் காடுவெட்டு குருவின் பேச்சு இருக்குதுங்க. காங்கிரசுக்கும் திமுகவுக்கும் உரசல் உரலுக்குள்ள விழுகிற உலக்கை மாதிரி இடிக்க ஆரம்பிச்சிருக்குங்க.

வடநாட்டில காங்கிரசுக்கு ஒரு கம்பீரத்தை ராகுல் காந்தி ஏற்படுத்தி இருக்கிறாங்க. தேர்தலுக்கு முன்னாடி மாநிலக் கட்சிகளுக்கிட்ட மண்டி போட்டு நின்ன காங்கிரஸ்காரங்க இப்ப முத்திப் போன முருங்கைக்காய் மாதிரி முறுக்கிட்டு இருக்கிறாங்க.

அதனால தமிழ் நாட்டுலயும் ஏன் ஒரு கபடி ஆட்டம் ஆடக் கூடாதுன்னு ராகுல் கணக்குப் போடுறாராமுங்க. அந்தக் கணக்கில திமுக கழிக்கப்பட்டா

கலைஞருக்கு தெம்பூட்ட மருத்துவர் விடுக்கிற மடல் விடு தூதுதானாம்.. நம்ம காடு வெட்டியாரின் முக்கலும் முனகலும்.

ஒரு பெண்ணு காசுக்காக உடம்பை வித்தா அதுக்கு விபச்சாரமுன்னு சொல்லி கைது பண்ணுறாங்க. ஆனா.. காடு வெட்டியார் போன்ற அரசியல்வாதிகள் அசிங்கப்படாம நாக்கை வித்து விபச்சாரம் பண்ணுறாங்களே இதுக்கு சட்டப்படி ஒன்னும் செய்ய முடியாதுங்களா...

குந்தானி போனா... முந்தானை விரிக்க சிந்தாமணி இருக்கான்னு இந்தமுறையும் யோசிக்காம மாம்பழத்தைத் தூக்கி மடியில வச்சா அதுக்குள்ள இருக்கிற வண்டு (காடு வெட்டி) அடியில ஓட்டை போட்டு அஸ்திவாரத்தையே ஆட்டம் காண வச்சிடும்கிறதை கலைஞரு கவனமா புரிஞ்சிக்கிட்டா நல்லதுங்க.

ஏழரைச் சனியில மூனு பிரிவு உண்டுங்க. சிரசுச்சனி, ஜென்மச்சனி, பாதச்சனி..ன்னும் அதுல நம்ம காடு வெட்டியாருக்கு இருக்கிறது நாலாவது சனிங்க. அதாவது நாக்கில சனிங்க. இல்லையின்னா. மத்திய அமைச்சரவையில திறமைமிக்க அமைச்சரா பவனி வந்த அன்புமணி ராமதாசு தைலாபுரம் தோட்டத்தில மயிலாட்டம் பாத்துக்கிட்டு இருக்கிற நிலைமை வந்திருக்குமா.

1 comment:

  1. //குந்தானி போனா... முந்தானை விரிக்க சிந்தாமணி இருக்கான்னு இந்தமுறையும் யோசிக்காம மாம்பழத்தைத் தூக்கி மடியில வச்சா அதுக்குள்ள இருக்கிற வண்டு (காடு வெட்டி) அடியில ஓட்டை போட்டு அஸ்திவாரத்தையே ஆட்டம் காண வச்சிடும்கிறதை கலைஞரு கவனமா புரிஞ்சிக்கிட்டா நல்லதுங்க.//

    எங்க நண்பா படிச்சீங்க....தமிழு புகுந்து விளையாடுது....அருமை...அருமை. வாழ்த்துக்கள்.

    http://thisaikaati.blogspot.com

    ReplyDelete